தேவை, தேசபக்தி சட்டத்திருத்தம்
அந்த காலங்களில் கதர் குல்லாவுடன் பிரிட்டிஷ் கால தேச பக்தர்கள் ‘பாரத மாதாக்கி ஜே’ என்று முழக்கம் போடுவார்கள். அவர்கள் கையில் காங்கிரஸ் கொடி இருக்கும். இது ‘வாடகை’ தேசபக்தியாளர்கள் காலம்! ஒரு கையில் பாதுகையை (அதாவது செருப்பை) வைத்துக் கொண்டு ‘பாரத மாதாக்கி ஜே’ என்று கூச்சல் போடுகிறார்கள். தேசியக் கொடி பறக்கும் அமைச்சர் கார் மீதே அந்த ‘ஆயுதத்தை’ வீசினார்கள். இனி செருப்புக்கு எங்கள் ஆட்சியில் எப்போதுமே ஜி.எஸ்.டி. கிடையாது. அது தேசபக்தியின் அடையாளம் என்றுகூட அமைச்சர் நிர்மலாவிடமிருந்து அறிவிப்பு வரலாம். ஆமாம்! மதுரையில் தேசியக் கொடியுடன் வந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? அதெல்லாம் பா.ஜ.க.வாக இருக்க முடியாது. விசாரணைக்குப் பிறகு தான் தெரியும் என்கிறார் ஒன்றிய அமைச்சர் முருகன். பா.ஜ.க.வின் இந்த வெறுப்பு அரசியலை இனியும் சகிக்க முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கே முழுக்குப் போட்டு விட்டேன்...
