இளையராஜா முன்னுரை எழுதிய நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பின்னணி
இளையராஜா, மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு புகழாரம் சூட்டி முன்னுரை எழுதியிருக்கும் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் BlueCraft நிறுவனம் பிரதமர் மோடியின் புகழ்பாடும் புத்தகங்களை வெளியிடுவதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம்.
அந்நிறுவனம் இதுவரை 6 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.
அதன் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராஜேஷ் ஜெயின் என்பவர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு சோஷியல் மீடியா பிரச்சாரம் மேற்கொண்ட மிக முக்கியமான நபர்.
மே 25, 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘Mann ki Baat : A Social Revolution on Radio’ என்ற புத்தகம் அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாபிமுகர்ஜியால் வெளியிடப்பட்டது.
புத்தகத்தை எழுதியவர் என்ற இடத்தில ராஜேஷ் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த ராஜேஷ் ஜெயின் என்ன சொன்னார் தெரியுமா ?
நான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை என்று தெறித்து ஓடினார்.
இப்படி ஒரு கூத்து உலகில் எங்காவது நடக்குமா?
அதாவது இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையில் வெளியிடப்பட்ட புத்தகம் யாரால் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு இப்போது வரை பதில் இல்லை.
ஒரே மானக்கேடாக இருக்கிறது என்று Author என்ற இடத்தில Blue Craft Digital Foundation என்றே அச்சிட்டுக் கொண்டது அந்நிறுவனம்.
இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட நிறுவனம் வெளியிட்ட புத்தகத்திற்குத் தான் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
பெரியார் முழக்கம் 21042022 இதழ்