பிரெஞ்சுப் புரட்சியில் மரணிக்கப் போவோரின் பட்டியலை கசோட் கணித்தாரா? எட்வின் பிரபாகரன்
உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியம் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (5)
‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.
புதிர் 8: பிரேசில் நாட்டைச் சேர்ந்த அரிகோ என்ற விவசாயி, பல மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய் களை குணப்படுத் தினார். துருப்பிடித்த கத்தியையும், கத்தரிக்கோலையும் வைத்தே அறுவை சிகிச்சை செய்தார். முறை யாக மருத்துவம் படிக்காத இவரால் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது? என்ற கேள்விக்கு மருத்துவ உலகில் பதில் இல்லை.
விடை:முதலில் அரிகோ பல நோய் களை குணப்படுத் தியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. உலகப் புகழ் பெற்ற நாத்திக அறிஞர் ஜேம்ஸ்ரண்டி, 1982இல் இதை பற்றி “Film – Flam Psychics Especially Unicorns & other delusions” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மாயா ஜாலம் (தந்திரம்) செய்பவர்களின், மக்களை ஏமாற்றும் “கை சாதுரி யத்தை” விளக்கும் படங்களை வெளியிட்டு, அதனை அரிகோவின் கை சாதுரியத்தோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். முறையாக மருத்துவம் கற்காமல் வைத்தியம் பார்த்ததாலும், மருத்துவ உரிமம் இல்லாததாலும் இருமுறை சிறை சென்றவர் அரிகோ. இவருடைய பெரும்பாலான நோய் குணப் படுத்துதல் என்பது, இயேசு கிறிஸ்து பார்வையற்றவர்களுக்கு பார்வை அளித்ததைப் போன்ற கட்டுக் கதையே ஆகும்.
புதிர் 9: பிரஞ்சு புரட்சி நடைபெறு வதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் கலந்து கொண்ட கேளிக்கை விருந்தில், ஜாகுயெஸ்கஸோட் என்பவர் ஆளும் வர்க்கத் தினர் ஒவ்வொருவரும் எப்படி கொல்லப்படுவார்கள் என்று துல்லியமாகக் கணித்தார். தற் கொலை செய்பவர்கள், எத்தனை முறை கத்தியால் கீறி இறப்பார்கள் என்பதுவரை கணித்தார். அவர் சொன்னதைப் போலவே, 1792இல் நடந்த புரட்சியில் ஆளும் வர்க்கத் தினர் பலர் கொல்லப்பட் டனர். எதிர்காலத்தில் நடக்கப் போவதை ஜாகு யெஸ்கஸோட் முன் கூட்டியே கணித்தது எப்படி என்பது புரியாத புதிராகவே உள்ளது.
விடை: நடிகர் ரஜினி காந்த், துக்ளக்கில் (1971) சோ, பெரியார் ராமன் சிலையை நிர்வாணமாக எடுத்துச் சென்றதாக துணிச்சலாக எழுதியுள்ள தாகக் கூறினார். ஆனால், ஆதாரம் எங்கே? என்று கேட்ட போது, 2017இல் வெளியான ‘அவுட்லுக்’ இதழை காண்பித்தார். 1971இல் நடந்த சம்பவத்துக்கு 1971 துகளக்கை தானே ஆதாரமாகக் காட்டியிருக்க வேண்டும்? அதே போல, 1788இல் கஸோட் சொன்ன தீர்க்கதரிசனங் களுக்கு 1788இல் ஆதாரம் காட்டுவது தானே முறை யாகும்! ஆனால், கஸோட்டை தீர்க்கதரிசியாகக் காட்டுபவர்கள் 1805ஆம் ஆண்டு லவு ஹார்ப் என்பவர் தொகுத்த நூலையே சான்றாகக் காட்டு கின்றனர். எனவே, இத்தகைய கணிப்பு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. பிறரின் இறப்பை கணிக்கத் தெரிந்த கஸோட்டால், தன் இறப்பை கணிக்கத் தெரிய வில்லை. அதே பிரஞ்சு புரட்சியில் அவரும் கொல்லப்பட்டார்.
(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)
(தொடரும்)
பெரியார் முழக்கம் 28042022 இதழ்