எது தமிழ்ப் புத்தாண்டு? நாரதனும்-கிருஷ்ணனும் கூடிப் பெற்ற 60 சமஸ்கிருத ஆண்டுகளா? அல்லது திருவள்ளுவரைக் கொண்டாடும் ஆண்டுகளா?
தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசு வழங்கும் உணவுப் பொருள்களுக்கான பைகளில் பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. உடனே பா.ஜ.க. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றுவதா என்று ஆர்ப்பரிக்கிறது. அ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு மாற்றக் கூடாது என்கிறார். அரசியலுக்குள் கால் பதிக்கத் துடிக்கும் சசிகலாவும் இதே குரலை ஒலித்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு கலைஞர் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா – கலைஞர் ஆட்சி பிறப்பித்த ஆணையை நீக்கம் செய்து சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சார்பில் உத்தரவிட்டார். உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களை தை முதல் நாள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பிறகு எப்படி சித்திரைக்கு மாறியது என்பதற்கு வரலாறு இருக்கிறது. முன் காலத்தில் வருடப் பிறப்புச்...
