கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

தமிழ் ஈழ விடுதலைப் போராட் டத்தில் களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நவம்பர் 27 அன்று கொளத்தூர் அருகே புலியூர் செல்லும் வழியில் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த இடத்தின் அருகே திறந்தவெளியில் முகாமுக்கு தலைமையேற்று பயிற்சி யளித்து வீரமரணமடைந்த பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட புலியூர் ‘நிழற்குடை’ அருகே இதுவரை இந்த நிகழ்வு நடந்து வந்தது. மழை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் 2000 பேர் திரண்டிருந்தனர். உலகம் முழுதும் 6.05 மணிக்கு நிகழ்வு நடத்தப்படுவதை யொட்டி அதே நேரத்தில் மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாவீரர் சுடரை ஏற்றினார். தொடர்ந்து குழந்தைகள் முதல் பெண்கள், இளையோர், முதியவர் என்று நீண்ட வரிசையில் நின்று வீரவணக்கம் செலுத்தினர்.

7 மணியளவில்  கருத்தரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில்  தொடங்கியது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சூரிய குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரனைத் தொடர்ந்து தி. வேல்முருகன் ஒரு மணி நேரம் நிறைவுரையாற்றி னார். பங்கேற்ற 2000 பேருக்கும் இரவு உணவை கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்து அரங்கிற்கு வெளியே அரங்கில் உள்ளதைப் போல இரு மடங்கு கூட்டம் கூடியிருந்தது.

பெரியார் முழக்கம் 02122021 இதழ்

You may also like...