தமிழ்நாடு கொடியை கொளத்தூர் மணி ஏற்றினார்

நவ. 1 தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெறும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 1 காலை 8 மணியளவில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வெளிடப்பட்ட தமிழ்நாடு கொடியை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  கொளத்தூர் செக்போஸ்ட்டில் ஏற்றி வைத்தார். மேட்டூர் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் 01.11.2021 திங்கள் காலை 10.30 அளவில் தமிழ்நாடு கொடி ஏற்ற முயன்ற பொழுது அதற்கு அனுமதி மறுத்து காவல்துறை தடுத்தது. காவல்துறையின் தடையையும் மீறி தமிழ் நாட்டுக் கொடியை ஏற்ற முயன்ற கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், கண்ணன், சந்திரசேகரன், பிரபாகரன், தீனதயாளன், அருண்குமார், கோகிலா ஆகிய 8 பேரும் நங்கவள்ளி ஆசூஏ மஹால் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள். மாலை 6.00 மணிக்கு தோழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பெரியார் முழக்கம் 11112021 இதழ்

You may also like...