மூட நம்பிக்கைகளுக்கு தடை விதிக்க கேரளாவில் புதிய சட்டம்

கேரள மாநிலத்தில்  மூடநம்பிக்கைகளையும்  தேவையற்ற ஆசார  முறைகளையும்  தடை  செய்வதற்காக  சட்ட உருவாக்கம்  இறுதி நிலையில் உள்ளது. சட்ட மறு சீரமைப்பு ஆணையம் சமர்ப்பித்த நகல் சட்ட வடிவம் உள் துறையின் கீழ் பரிசீலனையில் உள்ளது. மிக விரைவாக சட்டப் பேரவையில் அதை சமர்ப்பித்து சட்டமாக்கும் நடவடிக்கையில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மூடநம்பிக்கையும் தேவையற்ற  ஆசாரங்களையும் பிரச்சாரம் செய்வதும் அதை நடைமுறைப்படுத்து பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய்  அபராதமும் விதிக்கப்படும் என்று உள்ளது.

மந்திரவாதம், நாசகர மந்திர வாதம், பேய் விரட்டுதல், நிதி  தேடி நடத்தும் தொல்லை,  சிகிச்சையைத் தடை செய்வது போன்ற செயல்கள் குற்றத்திற்கு உட்பட்டதாகும். மந்திரவாதத்தின் பெயரில்  தொல்லைகள் மிரட்டல்களும் கடும் குற்றமாகக் கருதப்படும். ஒவ்வொரு குற்றத்திற்கும் உரிய தண்டனையை நகலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையும் தேவையற்ற  ஆசாரங்களையும் தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என்று  அரசு முன்னரே தெரிவித்திருந்தது. சட்ட நகலை தயார் செய்ய   ஜஸ்டிஸ் கே. டி. தோமஸ் தலைமையிலான சட்ட மறுசீரமைப்பு ஆணையத்தை கேட்டுக் கொண்டிருந்தது   இச்செயல்கள் எல்லாம்  கிரிமினல் சட்ட நடவடிக்கைகளாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே உள்துறை  அமைச்சகத்தின் தீவிர ஆய்வு தேவைப்படுகிறது.  எனவே சட்டப் பேரவையில்  சட்டம் ஆக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரியார் முழக்கம் 11112021 இதழ்

You may also like...