‘கணித மேதை’யின் கதை
‘கணித மேதை’ என்று அழைக்கப்படும் ராமானுஜம் (அய்யங்கார்) வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார், பெரியார் படத்தை இயக்கிய ஞான. ராஜசேகரன். இந்திய சமூகம், சிறந்த அறிவாளிகளை அங்கீகரிப்பது இல்லை என்பதே இந்தப் படத்தின் மய்யமான கருத்து என்றும், வேதகாலத்திலிருந்தே இதுதான் நிலை என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிற்காலத்தில் கணிதத்தில் மேதையாக விளங்கிய இராமானுஜம், ‘இன்டர்மீடியட்’ படிப்பில் தோல்வி அடைந்தவர் என்பது, ஒரு முக்கிய செய்தி. மதிப்பெண் – ஒருவருடைய அறிவாற்றலுக்கான மதிப்பீடு இல்லை என்பதற்கு இவரே ஒரு உதாரணம் தான்! குடும்பத்துக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடி விட்டார். அவரது தந்தை 1905 ஆம் ஆண்டு மகனைக் காணவில்லை என்று ‘இந்து’ ஏட்டில் படத்துடன் விளம்பரம் செய்து மகனைக் கண்டுபிடித்தார். ஜி.எச்.ஹார்டி என்ற வெளிநாட்டுக்காரர்தான் – இராமானுஜத்தின் அறிவைக் கண்டறிந்து, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார். சென்னை திரும்பிய இராமானுஜர், இறுதி காலத்தில் அவரது பார்ப்பன...