அர்ச்சகர்களுக்கு தேர்வு

அர்ச்சகர்கள் – பிறவியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கான தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்  உச்சநீதிமன்றம் வரை போகிறார்கள். ஆனால், கேரளாவில் அர்ச்சகர் நியமனம் அப்படி அல்ல. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி விட்டார்கள். ‘கேரள தேவஸ் வம் போர்டு’ என்ற மாநில அரசின் கோயில் நிர்வாக அமைப்பு அர்ச்சகர்களாக பணிபுரிவோருக்கு பூஜை சடங்கு ‘தாந்திரீகம்’ மந்திரம் ஒதுதல் போன்ற சடங்குகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, பிறகு தேர்வு நடத்த முடிவு செய்தது. ஏற்கனவே அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பயிற்சியில் சேராமலேயே தேர்வு எழுதலாம் என்றாலும், அவர்கள் திறமையை சோதிக்க நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது இரண்டு பேர் மட்டுமே சரியான விடை தந்தார்கள். 95 பேருக்கு அர்ச்சகருக்குரிய பயிற்சி இல்லை. எனவே அவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும் என்று தேவஸ் வம் போர்டு அறிவித்துள்ளது. தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும். தோல்வி அடைந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள், என்கிறார் அகில கேரள தாந்த்ரீக சமாஜத்தின் மண்டல செயலாளர் பிளாக் குடி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே! கேரளாவைப் பாருங்கள்! அங்கே ஆகமக் கோயில்களில் உள்ள கடவுள்கள் எல்லாம் பார்ப்பன அர்ச்சகர்கள் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் கேட்கவில்லையே!

பெரியார் முழக்கம் 23102013 இதழ்

You may also like...