குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?
பூமியில் மனிதர்கள் ஒருக்கால் அழிந்துவிட்டால், மீண்டும் மனிதக் குரங்குகளில் இருந்து மனிதன் தோன்ற வாய்ப்பு இருக்கிறதா? இந்த இடத்தில் ஒருவிஷயத்தை முதலில் நாம் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். பரவலாக நம்பப்படுவது, கூறப்படுவதைப்போல நாம் மனிதக் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை. நமக்கும், மனிதக் குரங்குகளுக்கும் பொதுவான ஒரு மூதாதை 1 கோடி ஆண்டுக்கு முன்னால் இருந்திருக்கக் கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அந்த பொது மூதாதையை யீயn யீசiடிச என்று அழைக்கிறார்கள். அல்லது மனிதன், குரங்கு பொது மூதாதை என்கிறார்கள். அறிவியல் ரீதியில் நாம் இன்னமும் மனிதர்களாக வகைப்படுத்தப்படவில்லை. நாம் மனிதக் குரங்குகள்தான். அதாவது, சமூகத்தில் வாழும் மனிதக் குரங்குகள்.
அதே நேரம் நமது பொது மூதாதை இப்போது வாழ்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, பரிணாம வளர்ச்சி அல்லது படிநிலை வளர்ச்சி என்பது தொடர்பற்ற மரபணுக் கலப்பு (ழுநநே அரவயவiடிn), சுற்றுச் சூழல் நெருக்கடிகளால் (நுnஎசைடிnஅநவேயட ஞசநளளரசநள) உருவாகும் இயற்கைத் தேர்வு (சூயவரசயட ளநடநஉவiடிn) ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிகழ முடியும். இவற்றை வைத்துப் பார்த்தால், மீண்டும் மனித இனம் தான் கடந்து வந்த பாதையைத் தொடுவதற்கு மிகக் குறைந்தபட்ச வாய்ப்புகள்கூட இல்லை. – ‘இந்து’ தமிழ் நாளேட்டிலிருந்து
பெரியார் முழக்கம் 07112013 இதழ்