நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகர்களில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசே!

நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், கொண்டாம் பட்டி கிராமங்களை எரித்த குற்றவாளிகள் மீதான வழக்கை சி.பி..க்கு மாற்று!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப் பட்ட கிராமங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து, கிராமங்கள் எரிப்பு, இளவரசன் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்!

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும்

2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கு! அப்பகுதியிலேயே அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலை அமைத்திடு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறு வாழ்வுப் பணிகளை நிறைவேற்று! அழிக்கப்பட்ட வீடுகளை உடனடியாகக் கட்டிக் கொடு!

ஜாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்து வரும் ஜாதியக் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!

வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஜாதி ஆதிக்க சக்திகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்!

கவுரவக் கொலைகளைத் தடுத்திட சிறப்புச் சட்டத்தை இயற்றிடு!

ஜாதி மறுப்புக் காதலர்களுக்குப் பாதுகாப்பு வழங்கு! ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தை களுக்கு ஜாதியற்றோர் இடஒதுக்கீடு வழங்கிடு!

திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 07112013 இதழ்

 

You may also like...