விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை
இ°ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் – ஒவ்வொரு செயற்கைக்கோள் ஏவும்போதும் திருப்பதி ஏழுமலையான் ஆசி பெறுகிறார்
இ°ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்று இ°ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐ.ஏ.என்.எ°. செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், இதுவரை செவ்வாய்கிழமையன்று ஒரு ஏவுகணைகூட ஏவப்பட்ட தில்லை. அது ஒரு ராசியில்லா நாள் என்பதுதான் காரணமாகும். செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன்ஆராய்ச்சி செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இ°ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி தான் செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். விண்வெளிக்கலம் 12அய் ஏவிய பிறகு, 13 அய் தவிர்த்துவிட்டு, 14 அய் ஏவியது ஏன்? 13 ராசியில்லாத எண் என்பதாலா என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. அதிகாரிகள் மவுனம் சாதிக்கிறார்கள்.
பெரியார் முழக்கம் 14112013 இதழ்