பால்ய விவாகம்’; அய்.நா. எதிர்ப்பு
பார்ப்பனியம் – சமூகத்தில் திணித்த பல்வேறு கொடுமைகளில் ஒன்று ‘பால்ய விவாகம்’ அதாவது குழந்தைத் திருமணம். பார்ப்பனர்கள், உயர்ஜாதிக் குடும்பங்களில் பிற ஜாதியினருடன் ஜாதிக் கலப்பு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற் காகவே இந்தக் கொடூரமான முறையைத் திணித்தனர். இந்த சமூகக் கொடுமை பல்வேறு நாடுகளில் பரவி யுள்ளது. இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் பெருமளவு நடைபெறும் எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட 107 நாடுகள் இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. ஆனால், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. உலகம் முழுதும் நடக்கும் 6 கோடி குழந்தை திருமணங்களில் 40 சதவீதம், அதாவது 2.4 கோடி குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன. இந்தியாவில் இந்த பால்ய விவாகம் சட்டத்தை மீறி பரவலாக நடந்து வருகிறது. அய்.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியா, இந்தத் திருமணங்களை முழுமையாக தடுத்து நிறுத்த தீவிரமான நட வடிக்கைகளை எடுப்பதோடு அய்.நா.வுக்கும் தடுப்பு நட வடிக்கைகள் குறித்து அறிக்கைகள் அனுப்ப வேண்டும். இதற்கு இந்தியா தயாராக இல்லை. ‘இந்துத்துவா’ ஆட்சி யாகவே காங்கிரஸ் தலைமை யிலான ஆட்சியும் செயல் படு கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. – இரா
பெரியார் முழக்கம் 30102013 இதழ்