‘அரிதிலும் அரிதான’ வழக்கு: புதிய பார்வை

சுஷில் சர்மா – டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. தனது மனைவியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி தந்தூரி ரொட்டி சுடும் அடுப்பு நெருப்பில் போட்டு எரித்தார் என்பது குற்றச்சாட்டு. அரிதினும் அரிதான வழக்கில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கொடூரமான கொலைகள் தான் அரிதிலும் அரிதாக கருதப்பட வேண்டும் என்று இதற்கு தவறாக பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி திருந்தி வாழவே முடியாது என்ற உறுதியான முடிவுக்கு வரும் நிலைக்கு குற்றம் புரிந்தால் மட்டுமே அரிதிலும் அரிதான வழக்கு என்ற முடிவுக்கு வர முடியும் என்ற கருத்தை சுஷில் சர்மா வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருக்கிறது.

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சுஷில் சர்மா, எதிர்காலத்தில் திருந்தி வாழவே மாட்டார் என்பதற்கான சான்றுகளை அரசு தரப்பு முன் வைக்கவில்லை என்பதால் இதை அரிதிலும் அரிதான வழக்காகக் கருத முடியாது என்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான ஒரு முக்கிய காரணியாக இந்த அம்சத்தை முன் வைத்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் இந்த முக்கிய அம்சம் கருத்தில் கொள்ளப்படவே இல்லை. இந்த அடிப்படையில் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள் வழக்கை மறுபரிசீலனை செய்தால், தூக்கை எதிர்நோக்கியுள்ள 22 பேர் மீதான தூக்குத் தண்டனைகளை நிறுத்த வேண்டியிருக்கும். ‘இந்து’ ஏட்டில் (அக்.18) சுங் சுரேந்திரநாத் என்பவர் எழுதியுள்ள விரிவான கட்டுரையில் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.

பெரியார் முழக்கம் 23102013 இதழ்

You may also like...