தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு மனுக்கள் தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ளன. தமிழ்நாடு அறிவுரைக் குழுமம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உள்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட் டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் நவம்பர் 25 அன்று தாக்கல் செய்யப் பட்டது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் உடனிருந்து உதவி வருகிறார்.

காவல்துறையினரால் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட தபசி. குமரன், சேலம் டேவிட், சென்னை ஜான் ஆகிய தோழர் களுக்கு முன் பிணையை ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது.

தோழர் கொளத்தூர் மணியை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.

பெரியார் முழக்கம் 28112013 இதழ்

You may also like...