ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்
மத்திய ஊரகத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து மிகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். “தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு வலுவாக உள்ளதால், வளர்ச்சிப் பாதையில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றபோது மாநிலங்கள் வரிசையில் 9 ஆவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சுதந்திரம் அடைந்தபோது 2 ஆவது இடத்தில் இருந்த மேற்கு வங்கம், தற்போது 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த போது கடைசி இடத்தில் இருந்த பீகார் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆட்சிகள் மாறலாம்; அரசியல்வாதிகள் வந்து போகலாம். ஆனால், நிர்வாக முறையை வலுவாக உருவாக்க வேண்டும். அதைத் தமிழக நிர்வாகக் கட்டமைப்பு செய்துள்ளது” என்று குறிப் பிட்டுள்ளார். தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, இடஒதுக்கீடு என்ற சமூக நீதித் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது, அமைச்சர் குறிப்பிட மறந்த செய்தி.
பெரியார் முழக்கம் 30102013 இதழ்