வினாக்கள்… விடைகள்…

கட்சியின் சின்னத்தை – அரசின் சின்னமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.                – மினி பேருந்தில் இரட்டை இலை இடம் பெற்றிருப்பதை        எதிர்த்து மு.க. °டாலின் வழக்கு!

நியாயமான கோரிக்கை! அப்படியே, கட்சியின் கொடியைப் போலவே தேசியக் கொடியையும் உருவாக்கியிருக்கும் காங்கிர° கட்சியையும் இந்த வழக்கில் சேர்க்கலாமே!

சி.பி.அய். அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.- செய்தி

நல்லதாப் போச்சு! தடைவிதிக்காதிருந்தால் கவுகாத்தி உயர்நீதிமன்றமே சட்டபூர்வமானது அல்ல என்று சி.பி.அய். வழக்குப் பதிவு செய்திருக்கும்!

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்று வருத்தம் தெரிவித்து, ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் சுருக்கமான கடிதம். விளக்கம் எதுவும் எழுதவில்லை.             – செய்தி

அதுவரை நல்லது. இலங்கை அரசு மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நல்லாட்சி நடத்துவதற்கு வாழ்த்துகிறேன் என்று எழுதிவிட்டால் வீண் வம்பு!

இலங்கை இராணுவத்தின் ‘கொலைக் களங் களை’ அம்பலப்படுத்திவரும் சேனல்-4 தொலைக் காட்சி இயக்குனர் கல்லம் மெக்ரடேவுக்கு இந்தியா ‘விசா’ மறுப்பு.                       – செய்தி

அப்படி எல்லாம் எல்லாருக்கும் எளிதாக விசா வழங்க முடியாதுங்க! தமிழ்நாட்டில் ‘முள்ளி வாய்க்கால் முற்ற’த்துக்குள் நுழைய தந்தை பெரியாருக்கே விசா கிடைக்கல்லே, தெரியுமா?

திருச்செந்தூர் கோயிலில் முருகக் கடவுள் ‘சூரனை’ அழித்தொழிக்கும் சூரசம்ஹாரம் நடக்கும்போது மூன்று காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டதால் ஏற்பாடுகளில் குழப்பம் ஏற்பட்டது.    – ‘தினமலர்’ செய்தி

காவல்துறை அதிகாரிகளையே சாட்சியாக வைத்துக்கொண்டு அழித்தொழிப்புகள் நடக்க வேண்டாமே என்ற அரசின் நல்லெண்ணம் தான்!

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கோயில் அறங்காவலராக நியமிக்க முடியாது என்று தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது.       – செய்தி

நல்லது; கடவுள் நம்பிக்கை இருப்பதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் வாங்கினால் போதுமா அல்லது அரசு உயர் அதிகாரிகளிடம் வாங்க வேண்டுமா?

142 உலக நாடுகளில் வளம் மிக்க நாடுகளில் நார்வே முதலிடம். இந்தியாவுக்கு 106வது இடம்.                -லண்டன் ஆய்வு நிறுவனம் தகவல்

அதெல்லாம் ஏற்க முடியாதுங்க. எல்லாவற்றிலும் குஜராத்தான் முதலிடம்! புரிஞ்சுக்குங்க…

பாரதிய ஜனதாவின் ஒரே மதம் இந்தியா – இந்திய தேசம் தான். – கான்பூரில் மோடி பேச்சு

அதாவது, இந்து மதத்துக்கே இந்தியா  என்று பெயர் சூட்டுறீங்க போல! நல்லாவே புரியுது!

தேர்தல் ஆணையத்துக்கு பயந்து இந்து மத சம்பிரதாயங்களைக் கைவிட மாட்டேன் என்று கூறிய ம.பி. பா.ஜ.க. அமைச்சர் விஜய் வர்சியா விடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் தாக்கீது.           – செய்தி

இதுக்கெல்லாம் பதில் எழுதாதீங்க விஜய்! இந்து சம்பிரதாயப்படியே ஏதாவது ‘பரிகாரம்’ செஞ் சிடுங்க; அதுவே போதும்.

காலக்கெடு முடிந்த பிறகும், 35 மத்திய அமைச்சர்கள் இன்னும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.               – செய்தி

இப்படி எல்லாம் அவசரப்படக் கூடாது; சொத்து சேர்ப்பதற்கு இன்னும் பதவிக்காலம் இருக்கும்போது இப்போதே காட்டு என்றால், அது என்னங்க நியாயம்?

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...