வடசென்னை மாவட்ட கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018  அன்று மாலை 6  மணியளவில் பெரம்பூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஏசு குமார் முன்னிலை வகிக்க,  நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். ஏப்ரலில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

டாக்டர் அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட்டங்களால் கிடைத்த பலன்களை சிறு நூலாக பத்தாயிரம் பிரதிகள் தயாரித்து மக்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் பிரச்சாரமாக கொண்டு சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வட சென்னையில் தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பரப்புரைப் பயணம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டது. நா. பாஸ்கர் நன்றி கூறினார் .

பெரியார் முழக்கம் 01032018 இதழ்

You may also like...