வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் திருவெற்றியூர் 10022018

திருவெற்றியூர் பெரியார் நகரில் …

வரும் சனியன்று ( 10 : 02 : 2018 )

மாலை 5 : 30 மணியளவில் ….

” வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” விளக்கப் பொதுக்கூட்டம்

பெரியாரின் உழைப்பால் பலன்பெற்ற சிலர் புறக்கணித்தாலும், பலர் தான் பெற்ற பலன் உணர்ந்து கிள்ளியாவது தருகிறார்கள் . ஆனால் இன்னமும் விடியல் கிடைக்காமல் வர்ணத்தாலும், வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட வீதிக்கடை மக்கள் … தலைவன் பெரியாரின் கூட்டம் என்றவுடன் அள்ளித் தருகிறது. அவர்களின் கண்களில் தேங்கி நிற்கும் விடியல் வேட்கைக்கு இந்த கருஞ்சட்டை கூட்டம் பணி செய்து கிடப்பதையே பதிலாய் தரும் …

மக்களிடையே நாம் செய்தியோடு நிற்கையில் தான் உணர்கிறோம் . எங்கள் மகத்தான தலைவர் பெரியாரின் உழைப்பையும், அது நமக்கு பெற்றுத் தரும் மரியாதையும், நம்பிக்கையையும்.

வாருங்கள் தோழர்களே …

சூழ்ந்து வரும் மத இருளை, பெரியார் ஒளி கொண்டு விலக்குவோம் …

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

2 3

You may also like...