Category: பெரியார் முழக்கம் 2022

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழக  கலந்துரையாடல் கூட்டம் 27.8.2022 மாலை 4மணி முதல் 6.30 வரை  வழக்கறிஞர்  கார்கி  அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் செப் – 17 பெரியார் 144ஆவது பிறந்தநாளில் காலை 9 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகர தலைவர் நேருதாசு தலைமையில்  மாலை அணிவித்து   துண்டறிக்கை வழங்குவதெனவும் தொடர்ந்து சித்தாபுதூர், ரத்தினபுரி ஆறு முக்கு, பீளமேடு, காந்தி நகர், சவுரிபாளையம், உக்கடம், டுழு தோட்டம், பனைமரத்தூர், சூலூர், வடபுதூர், அன்னூர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில்  படத்திறப்பு விழா நடத்துவது. 2 .        செப் – 17 பெரியார் பிறந்தநாள் முடிந்த பிறகு கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகர கிராமப் பகுதிகளில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது. பெரியார் பிறந்தநாள் விழா சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் சுவரொட்டிகள்  800 அச்சடித்து கோவை மாவட்டத்தில் ஒட்டுவது. சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் துண்டறிக்கை...

“பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” – கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.

“பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” – கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.

தமிழனுக்கு மதமில்லை என்றார்; ஏனென்றால் மதம் என்பது தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு ஜாதியில்லை என்றார்,  ஏனென்றால் ஜாதி தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு கடவுள் இல்லை என்றார்; ஏனென்றால் குறளிலோ, தொல்காப்பி யத்திலோ கடவுள் என்ற சொல் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. கழகத்தின் சார்பில், களப்பணியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 23-25 வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் “பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” என்ற தலைப்பில் தமிழை மதத்திலிருந்து பிரித்தால் தான் மொழி தமிழரின் தன்மானத்துக்கு அடையாளமாக முடியும் என்று பெரியார் கூறியதை விளக்கி கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை. தமிழ் பாடல்களும் வட மொழியில் உள்ளன, ஆரிய கீர்த்தனைகளாகவே உள்ளன. அதையும் பெரியார் தமிழில் பாட வேண்டும் என்கிறார். இசை அரங்குகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்கிறார். பெரியார் உணர்வாளர் மாணவர் நகலக உரிமையாளர் ஆனா ரூனா என்ற...

திருக்குறள்

திருக்குறள்

இராமாயணம்-பாரதம்-கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள் தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்ட ஆரிய பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில் திராவிடர்களை அதனின்று விடுவிக்க திராவிடப் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட நூல் திருக்குறள். ‘குடிஅரசு’ 13.11.1948 பெரியார் முழக்கம் 01092022 இதழ்  

ஜாதியை எதிர்த்த போராளி அய்யன்காளி

ஜாதியை எதிர்த்த போராளி அய்யன்காளி

இன்று போற்றி புகழப்படும் “சனாதனம்” சமூகத்தின் சாதிக் கொடுமையின் ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. ஒவ்வொரு மாநிலத்திலும் சனாதானத்தை எதிர்த்து உருவாக்கிய சீர்திருத்தவாதிகள் தான் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கேரளாவில் பிறந்த அய்யன்காளி. 1892 இல் திருவனந்தபுரம் வந்த விவேகானந்தர், கேரளத்தை “மனநோய் பிடித்தவர்களின் புகலிடம் பைத்தியங்களின் குடியிருப்பு என்று சாடினார்” அந்த அளவிற்கு அங்கே மூடநம்பிக்கையும் சாதிக் கொடுமையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், இதர பகுதிகளிலும் தலை விரித்து ஆடியது. மக்கள் அதற்காகத்தான் வேத மதத்தைத்துறந்து விட்டு, வேறு மதத்திற்கு போனார்கள். மதமாற்றத்தை எதிர்த்து கூப்பாடு போடுகிறவர்கள் வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கிடையே 1863 ஆகஸ்ட் 28 அன்று கேரள மாநிலத்தில் வெங்கனூர் என்னும் ஊரில் புலையர் சமூகத்தில் பிறந்தவர்தான் அய்யங்காளி. ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் அவர் போர்குரல் கொடுக்கும் சமூக போராளியாக இருந்தார். ஜாதியை எதிர்த்து அவர் சமராடினார். ஜாதி உயர்வினை...

தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதா?

தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதா?

தேச பக்திக்கு தாங்களே முழு உரிமையாளர்கள் என்று பாஜகவினர் நாடகம் போட்டார்கள். ஆனால், இவர்களின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தேசியக்கொடியை ஏற்றுக் கொண்டதா ? வரலாறு என்ன ? ஒவ்வொன்றாக பார்ப்போம். 1)         காங்கிரஸ் கட்சி நடுவில் கை இராட்டினம் உடைய மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்டது. 1929 -இல் இலாகூரில் கூடிய காங்கிரஸ், “ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர நாளாகக் கொண்டாடி, மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும்”என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், “அதை ஏற்க முடியாது, அது இந்துக்களின் கொடி அல்ல” என்று பகிரங்கமாக அறிவித்தது. அதன் தலைவர் ஹெட்கேவர், ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் “பஹவா ஜந்தா” என்ற காவிக் கொடியைத் தான் ஏற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு 1930 ஜனவரி 21 இல் சுற்றறிக்கை அனுப்பினார். ஆதாரம் (ஹெட்கேவர் கடிதங்கள்.வெளியீடு அர்ச்சனா பிரகாசன், இந்தூர் 1981.பக்கம் 18) இந்த சுற்றறிக்கை...

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தமிழக ஆளுநர் தமிழர் மறையான திருக்குறளையும் பக்தி இலக்கியத்தில் இணைத்து வேதங்களில் உள்ள கருத்துகள் திருக்குறளிலும் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், திருக்குறளின் பக்தி உள்ளடக்கத்தை சீர்குலைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார். தமிழ் அறிஞர்கள் பலரும் திருக்குறளில் பக்தி உள்ளடக்கத்தைப் பேசியிருப் பதாக தமிழ் அறிஞர்களை தனக்கு ஆதரவாக இழுத்துக் கொள்கிறார். பரிமேலழகர், நாகசாமி, கி.வா. ஜெகநாதன், உ.வே.சா. போன்ற பார்ப்பனர்கள் திருக்குறளில் கூறப்படும் தர்மம் – மனுதர்மம் என்று கூறி, திருக்குறளுக்கு மதச்சாயம் பூச முயன்றனர். மாறாக தேவநேயப் பாவாணர், பாவலர் பெருஞ்சித்திரனார், மறைமலை யடிகள், வள்ளலார் இராமலிங்க அடிகளார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர்  போன்று குறளுக்கு உரை எழுதிய ஏராளமான தமிழ் அறிஞர்கள் வைதீகத்துக்கு எதிரானதே ‘குறள்’ என்ற கருத்தையே நிறுவியுள்ளனர். வேதங்கள் எழுத்து வடிவம் பெற்றது மிக மிக பிற் காலத்தில் தான்....

சாக்கடைக் குழியில் இறங்குவதில்; தண்டனைக் குறைப்பில்; இலவசங்களை எதிர்ப்பதில் ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மம்’

சாக்கடைக் குழியில் இறங்குவதில்; தண்டனைக் குறைப்பில்; இலவசங்களை எதிர்ப்பதில் ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மம்’

ஒன்றிய ஆட்சி  – ஆட்சி சட்டங்களை விதிகளை மனு தர்மத்துக்கு ஏற்ப முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டின் உளவுக் கருவியான ‘பெகாசஸ்’ – இந்தியாவில் முக்கிய புள்ளிகளை உளவுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, நாடாளு மன்றத்தையே முடக்கியது நினைவிருக்கலாம். இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், அமெரிக்கா விலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இந்தியாவிலிருந்து வெளி வரும் ‘ஒயர்’ இணைய இதழ் 2021 ஜூலையில் இதை அம்பலப்படுத்தின. 50000 உளவு பார்க்கும் தொலைபேசி  எண்களும் வெளியிடப்பட்டன. பாரீசிலிருந்து இயங்கும் தகவல் காப்பகம் – ‘ஃபர்பிடன் ஸ்டோர்ஸ்’ (Forbidden Stores) மற்றும் ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பிடம் இந்தத் தகவல் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் சுட்டிக்காட்டின. இஸ்ரேல் நாட்டின் சக்தி வாய்ந்த இந்த உளவுக் கருவியை அரசுகள் மட்டுமே வாங்க முடியும் என்று இஸ்ரேல் சட்டம் கூறுகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றபோது இஸ்ரேலுடன் இந்தக் கருவிகளைப் பெற 2 பில்லியன்...

வடநாட்டு ஊடகத்தை வறுத்தெடுத்தார், தமிழக நிதி அமைச்சர்

வடநாட்டு ஊடகத்தை வறுத்தெடுத்தார், தமிழக நிதி அமைச்சர்

வடநாட்டு ஊடகத்தை வறுத்து எடுத்திருக்கிறார், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாட்டில் “இலவசங்கள்” என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கப்படுவதை இப்போது விவாதப் பொருளாக்கியுள்ளனர். பிரதமர் மோடி இலவசங்கள் வழங்கப்படக் கூடாது என்ற கருத்தை அறிவித்திருக்கிறார். இது குறித்து நிதி அமைச்சரிடம் கேட்ட போது, “எங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு இவர்கள் என்ன பொருளாதார நிபுணர்களா ? பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்களா ? பி.எச்.டி பெற்றவர்களா ? எங்கள் பொருளாதாரத்தை நிர்ணயித்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு அறிவுரை கூற உலகத்தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய ஆட்சி ஒன்றிய அரசிற்கு ஒரு ரூபாய் தருகிறது என்றால், ஒன்றிய ஆட்சி எங்களுக்கு 35 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. அதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் எங்களது நிதி நிலமை கட்டமைப்புகளை நாங்கள் சரி செய்து, மக்களுக்குத் தேவையான இலவசங்களை வழங்கி, பண வீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.  நான்...

இட ஒதுக்கீடு இல்லாவிட்டால்…

இட ஒதுக்கீடு இல்லாவிட்டால்…

இட ஒதுக்கீடு இல்லா விட்டால்… 45 மத்திய பல்கலைக் கழகங்களில்  45 துணை வேந்தர் இருக்காங்க…  அதில் பட்டியல் சாதியை சேர்ந்தவர் எத்தனை பேர்? ஒரே ஒருவர். பழங்குடி எத்தனை பேர்? ஒரே ஒருவர்.  ஓ.பி.சி எத்தனை பேர்? ஏழு பேர்.  அப்ப மீதமெல்லாம் முற்பட்ட சாதியினர்  36 பேர்.  சதவீதமாகப் பார்ப்போமா? எஸ்.சி – 2 ரூ; எஸ்.டி – 2 ரூ;  ஓ.பி.சி – 16 ரூ; முற்பட்ட சாதி – 80 ரூ;  (ஆதாரம் : எகனாமிக் டைம்ஸ் 08.08.2022 – நாடாளுமன்ற கேள்வி பதில் – கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்) இந்த கணக்கை சொன்னவுடன் ஒருவர் சொன்னார். துணை வேந்தர் பதவிக்கு தான் இட ஒதுக்கீடு இல்லையே! அது அநீதி என்று எப்படி சொல்ல முடியும்? என்றார். இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் என்ன அநீதி நடக்கும் என்பதற்குதான் இது என்றோம்.              அவரிடம்...

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

கோவையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.08.22 திங்கள் காலை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலங்கள் மற்றும் சிலை அமைப்பது ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கோரியும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்ற அரசாணையை சரியாக பின்பற்ற கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலை வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோஷங்கள் போடுவதை வீடியோ பதிவு செய்வோம் நீங்கள் யாரேனும் விதிமுறை மீறல் சிலையை பார்த்தால் ஆதாரம் அனுப்புங்கள் அதற்கும் நடவடிக்கை எடுப்போம்....

பட்டியலிட்டார் பால் பிரபாகரன் (2) பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

பட்டியலிட்டார் பால் பிரபாகரன் (2) பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும் என்கிறார். கலியாணம், விவாஹம், கன்னிகாதானம் இவை எதுவுமே தமிழ் கிடையாது. தமிழரின் சொல் என்பது ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்று தான் குறளில் குறப்பிட் டிருக்கிறது. மற்ற மொழி சொற்களெல் லாம், பெண்ணை தாரை வார்ப்பது, வேசி போன்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன. முதலில் மதத்தில் இருந்து தமிழை பிரிக்க வேண்டும் என்றார். அடுத்ததாக வட மொழியில் இருந்து தமிழைப் பிரிக்க வேண்டும் என்கிறார் பெரியார். ஒரு மொழி என்பது எளிமையாக கற்றுக் கொள்ள முடிகிற அளவிற்கு இருக்க வேண்டும். மிக கடினப்பட்டு படிக்கின்றவாறு இருக்கக் கூடாது. அப்படி எளிமையாக கற்றுக் கொள்ளு மாறு இருந்தால் தான் ஒரு மொழி மக்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சியடையும். ஆங்கிலத் தில் வெறும் 26 எழுத்துதான் ஆனால் உலக அளவில் வளர்ச்சி அடைந்து சென்று விட்டது. ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. 247 எழுத்து உள்ள தமிழில்...

ஆகமம் மாற்றத்துக்கு உரியதே!

ஆகமம் மாற்றத்துக்கு உரியதே!

‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவை யெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதாரமில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும். ‘விடுதலை’ 29.11.1969   பெரியார் முழக்கம் 25082022 இதழ்

93ரூ நிர்வாக இயக்குனர்கள் ‘அவாள்களே’!

93ரூ நிர்வாக இயக்குனர்கள் ‘அவாள்களே’!

‘இலவசங்கள்’ குறித்து திரு புகழ் காந்தி ஓர் அருமையான கட்டுரையை ஆங்கில ‘இந்து’ (ஆக.20, 2022) வில் எழுதியிருக்கிறார். அதில் வரும் சில முக்கியமான விவரங்கள்: இந்தியாவின் மொத்த சொத்தில் 22ரூஐ மேல் தட்டில் இருக்கும் 1ரூவைத்திருக்கிறார்கள். அதே போல் 57ரூ சொத்துக்களை மேலடுக்கில் இருக்கும் 10ரூ பேர் வைத்திருக்கின்றனர். உயர் ஜாதிக் குடும்பங்கள் தேசிய வருமானத்தின் சராசரியை விட 47ரூ அதிகம் ஈட்டுகிறார்கள். பெரும் தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களில் (bடியசன அநஅநெசள) 93ரூ உயர் ஜாதியினர். நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 63ரூ நிர்வாகிகள் உயர் ஜாதியினர். தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் வரிச் சலுகைகள் 5 லட்சம் கோடி. இதனால் அரசுக்கு சென்ற வருடம் இழப்பு  1.84 லட்சம் கோடி. அடுத்த வருடம் இது ஒரு லட்சம் கோடியாக இருக்கும். இதன் பலன் பெரும்பாலும் உயர் ஜாதியினருக்குத்தான் (பார்ப்பனருக்குத்தான்). சரி, தமிழகத்தில் வழங்கப் படும் மூன்று...

8 ஆண்டுகளில் 23 பொதுத் துறைகளை விற்ற மோடி ஆட்சி

8 ஆண்டுகளில் 23 பொதுத் துறைகளை விற்ற மோடி ஆட்சி

தனது ஆட்சிக் காலத்தில் புதிதாக ஒரு பொதுத்துறையைக் கூட உருவாக்காத பிரதமர் என்றால் அது இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான் என்று காங்கிரஸ் எம்.பி.ரிபுன் போரா, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியிருந்தார். அதுமட்டு மல்லாமல், தனது 8 ஆண்டு ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்றுத் தீர்த்துவிட்டது என்றும் அதிர்ச்சி கரமான புள்ளிவிவரங்களை வெளி யிட்டிருந்தார். அவரின் அந்த புள்ளிவிவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்ட் ஆகி வருகின்றன. நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவை யொட்டி, பாஜக, சங்-பரிவாரக் கூட்டத் தினர் மட்டுமே தேசபக்தர்கள் என்பது போலவும், நாட்டின் 8 ஆண்டுகளில் பல மடங்கு முன்னேற்றி இருப்பதாகவும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங் களில் இளைஞர்கள் கடும் விமர்சனத்தை முன்னெடுத் துள்ளனர். பிப்ரவரி மாதம் ரிபுன் போரா பேசிய தகவல்களுடன், கூடுதல் புள்ளி விவரங்களை இணைத்து பதிலடி கொடுத்து வருகின்றனர். சுதந்திர...

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும்; அவர்கள் உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஓராண்டுக்கு முன் (ஆக. 14, 2021) தமிழக அரசு உரியப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர் 27 பேருக்கு அர்ச்சகர் நியமன ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு, அர்ச்சகர் பதவிக்கு வயது வரம்பு, உரிய பயிற்சி தேவை என்ற அரசு பிறப்பித்த விதியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், ஆகம முறை பின்பற்றப்படாத கோயில்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியதோடு ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு அந்தந்த ஆகமம் கூறும் முறையில் தான் வழிபாடு, சடங்குகள் மட்டுமல்ல; அர்ச்சகர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது. எந்தெந்த ஆகம கோயில்களில் எந்த வகை ஆகமம் பின்பற்றப்படுகிறது என்பதைக் கண்டறிய 5 பேர் கொண்ட குழுவும் அமைத்து அதில் இருவர் பெயரையும் நீதிமன்றமே பரிந்துரைத் துள்ளது....

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

ஜாதி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் ‘கிடுகு’ திரைப்படத் தயாரிப்பாளர் ராமலட்சுமி, இயக்குனர் வீரமுருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 22.08.22 திங்கள் காலை சென்னை காவல் ஆணையர்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. கிடுகு (சங்கிகளின்கூட்டம்) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில் வீரமுருகன் என்பவர் இயக்கத்தில்  இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் சில காட்சிகளில் தமிழ்நாட்டு அரசின் திராவிட மாடல் குறித்து பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்திக் காட்டும்படியான காட்சிகளும் குறிப்பிட்ட மதங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், ‘ராமசாமி நாயக்கருக்கு’ எதுக்கு சிலை என்று வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று ஒருவர் ஆவேசமாகப் பேசி, தமிழ் மண்ணை காவி...

பெரியார் – அண்ணா – கலைஞர் நினைவிடங்களில் அர்ச்சகர்கள் தமிழ்ப் பாசுரம் பாடி மரியாதை

பெரியார் – அண்ணா – கலைஞர் நினைவிடங்களில் அர்ச்சகர்கள் தமிழ்ப் பாசுரம் பாடி மரியாதை

தமிழக முதல்வர் அனைத்து இந்துக்களும் பயிற்சி பெறக் கூடிய 9 பயிற்சிப் பள்ளிகளை காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். உண்டு – உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படும்; ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.3000/- உதவித் தொகை வழங்கப்படும்; சமயபுரத்தில் புதிய ஓதுவார் பயிற்சிப் பள்ளியையும் முதல்வர் திறந்து வைத்தார். அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக நியமித்து தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்த ஓராண்டு நினைவாக (ஆக. 14)  பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். தமிழில் அர்ச்சனைப் பாடல்களைப் பாடினர். இது குறித்து சங்கத் தலைவர் வா. அரங்கநாதன் விடுத்துள்ள அறிக்கை: இந்திய வரலாற்றில்  பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. பல்லாயிரம் ஆண்டு தமிழக வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிதான் மகத்தானது. மன்னர்களின் ஆட்சிகளைவிட, சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத் திலும்...

தேசியக் கொடியிலும் தீண்டாமையா? தமிழக அரசு கண்டிப்பு

தேசியக் கொடியிலும் தீண்டாமையா? தமிழக அரசு கண்டிப்பு

தமிழ்நாட்டு கிராமங்களில் இன்னும் சாதிய ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சட்டங்கள் அங்கு நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் தலித் ஊராட்சிகளில் இன்னமும் சாதிய பாகுபாடுகள் காணப்பட்டு கொண்டே இருக்கின்றன, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு நல்ல வேலையை செய்து இருக்கிறது. 386 ஊராட்சிகளில் 26 கேள்விகளுடன் 400 பயிற்சி பெற்ற ஊழியர்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. 20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலித் ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை என்று கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, ஊராட்சித் தலைவர்களுக்கு 42 வகையான தீண்டாமைகள் எப்படி திணிக்கப்படுகிறது, என்பதும் கண்டறிந்து அரசிடம் அறிக்கை ஒன்றை தந்தது. உடனடியாக தமிழக அரசினுடைய தலைமைச் செயலாளர் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும், என்று வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும். இந்த சாதி பிரச்சினைகளுக்கு...

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திருவரங்கத்தில் உள்ள பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்யக் கோரி 10.08.2022  அன்று காலை 10.30 மணி அளவில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்குபெற்றன. கண்டன உரையாற்றியவர்கள்: 1. நாத்திகஜோதி –  ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர். 2. சித்திக்  – த.மு.மு.க; 3. சிந்தனைச் செல்வன் – தமிழ்ப் புலிகள் கட்சி; வீரகோவிந்தன் – ஆதித் தமிழர் பேரவை; 5. சலீம் – மனிதநேய மக்கள் கட்சி; வேங்கை பொன்னுசாமி – தமிழ்ப் புலிகள் கட்சி; 7. நிலவன் – நீரோடை; கண.குறிஞ்சி – ஞருஊடு; 9. திருப்பூர் துரைசாமி – பொருளாளர் தி.வி.க.; இராம.இளங்கோவன் – வெளியீட்டுச்...

குரூப்-1 தேர்வில் பெண்கள் தேர்வு 86.3 சதவீதம்

குரூப்-1 தேர்வில் பெண்கள் தேர்வு 86.3 சதவீதம்

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் சந்திரசேகர். மக்கள் தொகையில் அவர் நிபுணத்துவம் பெற்ற அறிஞர். அவர் ஒருமுறை பெரியாரை நேரில் பேட்டி கண்டார். அப்போது பெரியார் அனைத்து வேலைவாய்ப்புகளும் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்துவிட வேண்டுமென்று கூறினார். சந்திரசேகர் ஒரு கேள்வியை திருப்பி கேட்டார், அப்படியானால் ஆண்கள் அதை எதிர்க்க மாட்டார்களா ? இதற்கு பெரியார் தந்த பதில், “எப்படி எதிர்ப்பார்கள்? அவர்கள் வீட்டு மனைவிகளுக்கும் அவர்கள் வீட்டு சகோதரிகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கின்ற போது ஆண்கள் எப்படி எதிர்ப்பார்கள்” என்று பெரியார் கேட்டார். இது ஒரு ஒரிஜினலான சிந்தனை என்று சந்திரசேகர் பெரியாரைப் பாராட்டினார். இது ஒரு நிகழ்வு. 1989ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு வேலைவாய்ப்புகளில் 30ரூ பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் 50ரூ கேட்டார் கலைஞர் 30ரூ பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி...

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...

சுயமரியாதை

சுயமரியாதை

‘சுதந்திரம்’ , ‘சுயராஜ்யம்’, ‘உரிமை’ என்கின்ற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும், கொடுமைக்கும் ஆதாரமானவை தான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடையப் பாடுபட வேண்டுமானால், மக்களின் சுயமரியாதைக்காகத்தான் முதலில் பாடுபட வேண்டும். குடி அரசு – 24.01.1926 இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் அழகும் பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘சுய மரியாதை’ என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த வார்த்தையானது, நமது நண்பர்களிலேயே சிலர், ‘கொள்கைகளிலெல்லாம் நமக்குப் பிடிக்கின்றன. ஆனால், சுயமரியாதை என்ற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை’ என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும். குடி அரசு – 01.06.1930   பெரியார் முழக்கம் 18082022 இதழ்

‘தினமலர்’ பூணூல் மலர் தான்!

‘தினமலர்’ பூணூல் மலர் தான்!

தினமலர் நாளேட்டை பொதுவாக ‘பூணூல்’ மலர் என்று பலரும் குறிப்பிடுவது வழக்கம். இது ஏதோ அந்த ஏட்டை அவமதிப்பது என்பது பொருள் ஆகாது; உண்மையிலேயே நாங்கள் பூணூல் மலர்தான் என்பதை அந்த ஏடும் ஒப்புக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆவணி அவிட்டம் என்கிற பூணூல் மாற்றும் சடங்கு நடக்கின்ற நாள். அந்த நாளில் கட்டுரை ஒன்றை தினமலர் நாளேடு வெளியிட்டிருக்கிறது, அதில் பூணூல் மாற்றுகின்ற சடங்கை பிராமணனாக இரு பிறப்பு எடுக்கின்ற சடங்கை நமது பிராமண சந்ததிகளிடம் கொண்டு போய் சேர்ப்பது பிராமணர்கள் ஆகிய நமது கடமை என்று வலியுறுத்தி கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறது. “இந்த நாளை காஞ்சி சங்கராச்சாரி கல்வித் திருநாள் என்கிறார். படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு வேதம் கிடைத்த நன்னாள் தான் ஆவணி அவிட்டம். அந்த நாளில் தான் நாம் வேதத்தின்படி பூணூலை மாற்றிக் கொண்டு இருக்கிறோம். மாற்றுவதோடு காயத்ரி மந்திரத்தையும்...

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

ஊராட்சித் தவைர்களாக ‘தலித்’ பஞ்சாத்துகளில் தேர்வு செய்யப்பட்டவர்களை ஜாதி வெறியர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண் டிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இது குறித்து களஆய்வு நடத்தி, அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. ‘தலித்’ பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது திணிக்கப்படும் 40க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் குறித்து விரிவாக அந்த அறிக்கை பட்டியலிட்டுக் காட்டியது. கடந்த ஆண்டு 20 தலித் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் ஜாதி வெறியர்களால் குடியரசு – சுதந்திர நாளில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தலைமைச் செயலாளர், சுதந்திர நாள் அன்று தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சாhபில் கடிதம் எழுதினார். கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்...

பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உரை தமிழை மதத்திலிருந்து பிரிக்கச் சொன்னார், பெரியார்

பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உரை தமிழை மதத்திலிருந்து பிரிக்கச் சொன்னார், பெரியார்

கழகத்தின் சார்பில், களப்பணி யாளர் களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 23-25 வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் “பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” என்ற தலைப்பில் தமிழை மதத்திலிருந்து பிரித்தால் தான் மொழி தமிழரின் தன்மானத்துக்கு அடையாளமாக முடியும் என்று பெரியார் கூறியதை விளக்கி கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை. பெரியார் என்று கூறினாலே, ‘தமிழுக்கு எதிரானவர்’ என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டே வருகிறது. முதலில் பெரியார் தமிழரே இல்லை. அவர் ஒரு கன்னடர். கன்னடர் எப்படி தமிழுக்கு தொண்டாற்ற முடியும் என்றும் விமர்சனங்களை வைக்கிறார்கள். பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறி விட்டார் என்று மணியரசன் போன்ற அறிவுஜீவிகளெல்லாம் கூறி வருகின்றனர். பெரியார் ஏன் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார் ? தமிழர் கழகம் என்று வைத்திருந்தால் தமிழர் விடுதலை சாத்தியமாகியிருக்குமே என்றெல்லாம் இந்த அறிவுஜீவிகள் பேசுகிறார்கள்....

தேவை, தேசபக்தி சட்டத்திருத்தம்

தேவை, தேசபக்தி சட்டத்திருத்தம்

அந்த காலங்களில் கதர் குல்லாவுடன் பிரிட்டிஷ் கால தேச பக்தர்கள் ‘பாரத மாதாக்கி ஜே’ என்று முழக்கம் போடுவார்கள். அவர்கள் கையில் காங்கிரஸ்  கொடி இருக்கும். இது ‘வாடகை’ தேசபக்தியாளர்கள் காலம்! ஒரு கையில் பாதுகையை (அதாவது செருப்பை) வைத்துக் கொண்டு ‘பாரத மாதாக்கி ஜே’ என்று கூச்சல் போடுகிறார்கள். தேசியக் கொடி பறக்கும் அமைச்சர் கார் மீதே அந்த ‘ஆயுதத்தை’ வீசினார்கள். இனி செருப்புக்கு எங்கள் ஆட்சியில் எப்போதுமே ஜி.எஸ்.டி. கிடையாது. அது தேசபக்தியின் அடையாளம் என்றுகூட அமைச்சர் நிர்மலாவிடமிருந்து அறிவிப்பு வரலாம். ஆமாம்! மதுரையில் தேசியக் கொடியுடன் வந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? அதெல்லாம் பா.ஜ.க.வாக இருக்க முடியாது. விசாரணைக்குப் பிறகு தான் தெரியும் என்கிறார் ஒன்றிய அமைச்சர் முருகன். பா.ஜ.க.வின் இந்த வெறுப்பு அரசியலை இனியும் சகிக்க முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கே முழுக்குப் போட்டு விட்டேன்...

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிளாஸ்ட ஆப் பாரீஸ் என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டு வர்ணம் பூசி  விநாயகர் சதுர்த்திக்காக தயாராகி வருகின்றன. நீர் நிலைகளை மாசுபடுத்தும் இந்தச்  செயலை தடுத்து நிறுத்த கோரி 05.09.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அப்பொழுது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்  உடனிருந்தார். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகேஷ், அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராகவன், நகர தலைவர் நாஞ்சில் சங்கர், செயலாளர் நடராஜன், தோழர்கள் தில்லைநாதன், கார்த்திக், ராகவன், வழக்குரைஞர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப் பாளர், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது....

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

பெண்கள் சந்திப்பு நிகழ்வு 07.08.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் யாழினியின் கடவுள் – ஆத்மா மறுப்பு மற்றும் பாடலுடன் தொடங்கியது. கீதா வரவேற்புரை நிகழ்த்த சுதா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.முதலில் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு கோவை அமிலா சுந்தர் “அன்னை மணியம்மையார்” பற்றியும், திருப்பூர் சங்கீதா “பெரியாரின் பெண்ணியம்” பற்றியும் உரை நிகழ்த்தினர். மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 2.30 மணிக்கு இரண்டாம் அமர்வு தொடங்கியது. நிகழ்வில் முத்துக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் பெண்ணுரிமை மற்றும் ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடினர். அதனைத் தொடர்ந்து ஆனந்தி “பெண் ஏன் அடிமையானாள்” எனும் தலைப்பிலும்,  மனோரஞ்சனி “பெண்களும் மூட நம்பிக்கைகளும்” எனும் தலைப் பிலும்,  வசந்தி “மூவலூர் இராமாமிர்தம்” அம்மையாரைப் பற்றியும், வழக்கறிஞர் கண்ணகி “பெண்ணுரிமைச் சட்டங்கள்” பற்றியும் சிறப்பாக உரை நிகழ்த்தினர். பிற்பகல்...

முகலாயர்களை அண்டிப் பிழைத்த உயர்ஜாதி ‘பார்ப்பனியம்’

முகலாயர்களை அண்டிப் பிழைத்த உயர்ஜாதி ‘பார்ப்பனியம்’

500 ஆண்டுகளுக்கும் மேலான முகலாயர் ஆட்சியில் இந்துக்களை அழித்தொழிப்பு செய்தார்கள் அல்லது கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார்கள் என்பதுதான் இந்துத்துவ ஆராய்ச்சி யாளர்களின் முதன்மை குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் இந்துக்களே பெரும் பான்மையாக இருந்தார்கள் என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதிப் படுத்துகிறது. இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியைத் திணித்துவரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாகவும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள். இரண்டிலும் உள்ள உண்மை என்பது குறித்து “ஃபிரன்ட்லைன்” இதழில் சாம்சுல் இஸ்லாம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்க முதல்பகுதி கடந்த வார இதழில் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாவது மற்றும் நிறைவுப்பகுதி இதோ…...

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்:  கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல் வைத்த சேலம் மாவட்ட வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 05.08.2022 வெள்ளி காலை 10 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசிகவின் மாநகர மாவட்டப் பொருளாளர் காஜா மொய்தீன் தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் கைப்பாவையாக மாறிப்போன சேலம் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றின் அராஜகப் போக்கை கண்டித்து ஆர்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து முற்போக்கு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தங்களது கண்டன உரைகளை பதிவு செய்தனர். விசிக மண்டல அமைப்புச் செயலாளர் நாவரசன் – ஊஞஐ (ஆ) மாவட்டச் செயலாளர் சண்முகராஜா – தமுமுக பொறுப்புக்குழுத் தலைவர் முகமது ரபீக் – ஞகுட மாவட்டத் தலைவர் பைரோஸ்கான் – ளுனுஞஐ பொதுச் செயலாளர் ஷெரிப் பாஷா –...

2ஜி ஊழல் என்றால் ‘5ஜி’ என்ன மோடி’ஜீ’?

2ஜி ஊழல் என்றால் ‘5ஜி’ என்ன மோடி’ஜீ’?

அதிவேக இணைய சேவைகளை வழங்குவது 5ஜி அலைக்கற்றை. இதற்கான ஏலம் ஒருவாரமாக நடந்தது. இதன் மூலமாக அரசுக்கு 4.3 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலம் போனது 1.5 இலட்சம் கோடி ரூபாய்க்கு மட்டும் தான். மிகப்பெரும் இழப்பு அரசுக்கு ஏற்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது ? பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அய்டியா, அதானி ஆகிய பெரும் குழுமங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, ஏலத்தொகை உயராமல் பார்த்துக் கொண்டன. இதற்கு ஒன்றிய ஆட்சி துணை போனது என்ற குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. மற்றொரு செய்தியையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் ; 2010ஆம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவையில் ஆ.இராசா தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது 2ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற்றது. அப்போது 1 இலட்சத்து 76ஆயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது என்று தணிக்கைக் குழு...

தலையங்கம் இது ‘சுதந்திர’ நாடா?

தலையங்கம் இது ‘சுதந்திர’ நாடா?

75ஆவது சுதந்திர தினத்தை திருவிழாவாக்கி, அந்த விழாவையும் தங்கள் ஆட்சிக்கு பெருமை சேர்க்கத் துடிக்கும் ஆட்சி, உண்மையான ஒரு சுதந்திர நாட்டுக்கான ஆட்சியைத்தான் நடத்துகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. முதல் கேள்வி இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில் மாநில உரிமைகளை ஒன்றிய ஆட்சி அங்கீகரிக்கிறதா? காஷ்மீர் என்ற மாநிலத்தையே அழித்து யூனியன் பிரதேசமாக்கிவிட்டது. மாநிலப் பட்டியலில் வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களான கல்வி, வரிவிதிப்பு, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதல், மின்சாரம் போன்ற துறைகளை ஒன்றிய ஆட்சி பறித்துக் கொண்டு மாநிலங்கள் மீது தனது ‘ஒற்றை பாரதம்’ கொள்கையைத் திணிக்கிறது. மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களை ‘பாரதிய தேசியமாக்க’ சமஸ்கிருதப் பண்பாடுகள் கீதை, வேதம், ராமன் கோயில்களை குறியீடுகளாக்கி மாநில மொழி இன அடையாளங்களை ‘சனாதன தர்ம’ வட்டத்துக்குள் மூழ்கச் செய்கிறது. மாநிலங்களைக் கலந்து ஆலோசித்து திட்டங்களையும் நிதியையும் ஒதுக்குவதற்கு உருவாக்கப்பட்டது தான் திட்டக் குழு. அதைக்...

ஸ்ரீரங்கத்தில் பெரியார் அமர்ந்த வரலாறு

ஸ்ரீரங்கத்தில் பெரியார் அமர்ந்த வரலாறு

இந்து முன்னணி நடத்திய, இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா, சென்னை மதுரவாயலில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், இந்து முன்னணியின் கலை, இலக்கியப் பிரிவுச் செயலருமான கனல் கண்ணன், “ஸ்ரீரங்கநாதரை வழிபட ஒரு லட்சம் பேர் வருகின்றனர். கோயிலின் எதிரே, ‘கடவுளே இல்லை’ என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது என்றைக்கு உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றார். வெளிப்படையாக ஒரு சிலை உடைப்புக்கு அறைகூவல் விடுக்கும் இந்தப் பேச்சு பலரையும் இது அதிரவைத்தது. (காவல்துறை வழக்குப் பதிவு செய்தவுடன் தலைமறைவாகி, இப்போது முன்பிணை கேட்டிருக்கிறார்) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, “இந்து மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் திமுகவினர், அதைக் கருத்து சுதந்திரம் என்கின்றனர். அதே கருத்து சுதந்திரம் கனல் கண்ணனுக்கும் உண்டு. எதிரே, ஈ.வே.ரா. சிலை இருக்க வேண்டுமா என்று அங்கு வரும் பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால்,...

நிர்மலா சீதாராமனின் அவதூறுக்கு மறுப்பு

நிர்மலா சீதாராமனின் அவதூறுக்கு மறுப்பு

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த காரணத்தால் ஒரு வார காலம் நாடாளுமன்றம் முடங்கியது. ஒரு வழியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க முன் வந்தார். பண வீக்கம் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், ஒன்றிய ஆட்சியின் நிதி கொள்கையால் மாநிலங்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று சாதித்த தோடு, தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றியதா என்று கட்சி அரசியலைப் பேசி தமிழ் நாட்டுக்கு சவால் விட்டார். இறுமாப்புடன் பேசிய நிர்மலா சீதாராமன் உரைக்கு பதிலளிக் கும் வகையில் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஆக.9) சேலம் தரணிதரன் (திராவிடத் தொழில் மன்ற இயக்குனர்) பதிலளித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துகள்: வரி விதிப்பில்கூட நேர்மை இருக்க வேண்டும்; குடும்பத்தினர் தாங்கக்கூடிய அளவில் இருக்கவேண்டும் என்று பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித் கூறினார். ஆனால் ஒன்றிய ஆட்சி தாங்க முடியாத அளவுக்கு மறைமுக வரியை உயர்த்தியுள்ளது. நாட்டின் மொத்த...

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை – காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள்  இணைந்து நடத்தும், தொடர் அரசியல் பயிலரங்கம், அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் 31.07.2022 அன்று  காலை 10:30 மணியளவில் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘இந்துத்துவ அரசியலை’ப் பற்றி வகுப்பு எடுத்தார். இறுதியாக தோழர்கள் ஆர்வமுடன் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர். பெரியார் முழக்கம் 04082022 இதழ்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்ட திவிக சார்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி கோவையில் முன்னெடுக்கும் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் இணையம் வழியில் (உடிகேநசநnஉந உயடட அநநவiபே) 29.07.2022 வெள்ளி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் : 1)         கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை விளக்கும் வடிவமைப்பை உருவாக்கி ஒரு வாரம் முன்பே முகநூல், இன்ஸ்டாகிராம்,டுவிட்டர் பக்கங்களில் பகிர்வது, பரப்புவது. 2)         12.08.2022 வியாழன் அன்று காலை 8.00 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து கழக உறுதிமொழி எடுப்பது. 3)         தொடர்ந்து சவுரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சிவராஜ் தலைமையில் கழகக் கொடியேற்றி கழக உறுதிமொழி எடுப்பது.   பெரியார் முழக்கம் 04082022 இதழ்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வட மாநிலத்தவர் தேர்வு: திரும்பப் பெற தி.மு.க. வலியுறுத்தல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வட மாநிலத்தவர் தேர்வு: திரும்பப் பெற தி.மு.க. வலியுறுத்தல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரி பொறியாளர் பணியிடங் களுக்கு தமிழக இளைஞர்களை திட்டமிட்டே தவிர்த்தது கண்டனத்திற்குரிய செயல் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்துவிட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 2010ஆம் ஆண்டுவரை 80 விழுக்காடு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பெருமளவு ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் வழங்கி வந்தது. படிப்படியாக அதுவும் குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐக்கிய முற்போக்குக்...

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.07.2022 வியாழக்கிழமை சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள வனவாசியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. முதல் நிகழ்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வனவாசியில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுக் கூட்ட ஆரம்பமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினர் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்வை மக்கள் மத்தியில் மிக எளிமையாக செய்து காட்டினார்.அது கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து வனவாசி பகுதி நகர செயலாளர் பழ. உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை உரை நிகழ்த்தினார். திவிக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், நகர அமைப்பாளர் ராஜேந்திரன், நகர பொருளாளர் கதிர்வேல், பன்னீர்செல்வம் ஆகியோர்...

முகலாயர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் பொய் மூட்டைகள்

முகலாயர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் பொய் மூட்டைகள்

இந்திய தேசியவாதத்திற்கு இந்து அடித்தளத்தை வழங்கியவர்களில் மிக முக்கியமானவர் அரபிந்தோ கோஷ். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக் களுக்கு பொறுப்பு, பதவிகளை வழங்கிய தாலும் இந்துக்களின் மூளையையும், பலத்தையும் பயன்படுத்திக் கொண்ட தாலும் முகலாய ஆட்சி நூற்றாண்டுகளை கடந்தும் நீடித்ததாக அரபிந்தோ கோஷ் கூறுகிறார். 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மேற்கு பஞ்சாப்பை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் நிலம் சார்ந்த உயர்ந்த உரிமைகள் அனைத்தும் இந்துக்களிடம் அளிக்கப்பட்டிருந்தன, இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியை திணித்துவரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாக வும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள்....

கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு: உயர்நீதிமன்றம் பாராட்டு

கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு: உயர்நீதிமன்றம் பாராட்டு

கொரோனா பேரிடரால் பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இல்லம் தேடி கல்வித்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு பதிலளித்தது. இடைநிற்றல் மிகப் பெரிய பிரச்னையாக இருப்பதாக கூறிய நீதிபதிகள், அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர். மேலும் தமிழ்நாடும், கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாகவும், இது 2 மாநில அரசுகளின் சாதனை என்றும் நீதிபதிகள் பாராட்டினர். பள்ளிக்கல்வியில் மட்டுமல்ல உயர்கல்வியிலும் தமிழ்நாடுதான் இந்தியாவின் முதன்மை மாநிலாமாக திகழ்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் சிறந்த கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளிக்காட்டுகிறது. 2 வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த ஆண்டுக்கான...

தொடர் கொலைகள், கலவரங்கள்… மதவெறிக்கு இரையாகிறது கர்நாடகா!

தொடர் கொலைகள், கலவரங்கள்… மதவெறிக்கு இரையாகிறது கர்நாடகா!

தகவல் தொழில்நுட்பம், பொறியியல், ஆய்வுத்துறைகளில் வேகமாக வளர்ந்து வந்த கர்நாடகம் இப்போது வடமாநிலங்களைப் போல கலவரங்களுக்கு புகழ்பெற்றதாக மாறி வருகிறது. இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினரை பிளவுபடுத்தி, அவர்களிடையே நிலவும் ஒற்றுமையை சீரழித்து அதன்மூலம் இந்தியாவை இந்துநாடாக்க ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டங்கள் துடிக்கின்றன. இதில் வடநாட்டில் ஓரளவு வெற்றி கண்டுவிட்ட அவர்கள், இப்போது தென்னிந்தியாவிலும் அதே யுக்தியை கையாள திட்டமிட்டு செயல்பட முயல்கிறார்கள் என்பதைய கர்நாடகத்தின் இன்றைய நிலை காட்டுகிறது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என பள்ளிக் குழந்தைகளின் மனதில் மதவெறி நஞ்சை திணித்து, கர்நாடகத்தின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என மத ரீதியாக இந்துத்துவ அமைப்புகள் பிளவுபடுத்தின. சமூக ஒற்றுமையை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள் மதவெறி மோதலுக்கான மைதானங்களாக மாறி கர்நாடகமே கலவரக் காடானது. இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், தேர்வு எழுத முடியாமல் படிப்பைத் தொடர்வதே சவாலானது. ஹிஜாப் சர்ச்சைக்குப் பிறகு...

அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு

அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு

நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்களில் 1 சத விகிதம் பேருக்குக் கூட வேலை வழ ங்கப்படவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புக்காக 22 கோடியே 05 லட்சம் விண்ணப்பங்கள் வந்த  நிலையில், அதில், 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமனத்திற்கான பரிந்துரைகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஒன்றிய பாஜக அமைச்சரே நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில்  ஒப்புக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசுத்துறைகளில் கடந்த 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பணி நியமனங்கள் குறித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருந்தார். வெறும் 0.33 சதவீதம் இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஒன்றியப் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், ‘‘கடந்த...

மதவெறி அரசியல்: எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்

மதவெறி அரசியல்: எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்

மதவெறி அரசியலை முன் வைத்து, நாட்டின் பொருளாதாரத் தோல்வியை மறைக்க முயன்றால், இலங்கைக்கு ஏற்பட்டநிலைமை தான் இந்தியாவிற்கும் நடக்கும் என்று ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், காங்கிரஸின் 5ஆவது அகில இந்திய தொழில் வல்லுநர்கள் மாநாடு 30.7.2002 நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை?’ என்ற தலைப்பில் ரகுராம் ராஜன் பேசினார். அப்போது, “இந்தியாவில், தாராளமய ஜனநாயகத்துக்கு என்ன நடக்கிறது. உண்மையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தேவையா? ஆம், எங்களின் எதிர்காலம் நமது தாராளமய ஜனநாயகத்தையும் அதன் நிறுவனங்களையும் வலுப்படுத்துவதில்தான் உள்ளது. உண்மையில் இது நமது வளர்ச்சிக்கு மிக அவசியம். இந்தியாவில் இன்று சில தரப்பினரிடையே, ஜனநாயகம் இந்தியாவைத் தடுத்து நிறுத்துகின்றது என்ற எண்ணம் இருக்கிறது. எனவே இந்தியாவுக்கு வலிமையோடு எதேச்சதிகாரமும்கூட தேவை. பெரும்பாலான சிறுபான்மையினரை இரண்டாம்...

‘இந்து’ பெண்களை சங்கிகள் புண்படுத்தலாமா?

‘இந்து’ பெண்களை சங்கிகள் புண்படுத்தலாமா?

இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்ற கூக்குரல், தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. புராணங்களில் இருப்பதை, உள்ளதை உள்ளபடி எடுத்துப் பேசினாலே, இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என்று சங்கிகளும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். அப்படியானால் அவர்கள் அந்த புராணத்தை தான் தடை செய்ய வேண்டும் என்று கூற வேண்டுமே தவிர, புராணத்தில் இருப்பதை எடுத்துக் கூறுவது எப்படி புண்படுத்துவதாகும் ? ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ‘கீதாஞ்சலி ஸ்ரீ ‘ என்ற பெண்மணி ‘ரெத் சமாதி’ என்ற இந்தி நாவலை எழுதி இருக்கிறார். அந்த நாவலுக்கு சர்வதேச புகழ் வாய்ந்த ‘புக்கர் பரிசு’ கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு நாவலுக்கு பரிசு கிடைப்பதை அந்த மாநிலம் பாராட்ட வேண்டும். ஆக்ராவில் கீதாஞ்சலியை பாராட்டுகிற நிகழ்ச்சிக்கு ரங்கீலா என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. அந்த நாவலில் வருகிற சில பகுதிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர்...

ஒன்றிய அமைச்சர் தேர்வு செய்த ஊடக அதிபர்களின் இரகசிய சந்திப்பு

ஒன்றிய அமைச்சர் தேர்வு செய்த ஊடக அதிபர்களின் இரகசிய சந்திப்பு

தமிழ்நாட்டில், பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவந்து கொண்டிருப்பது தினமலர் நாளேடு. அந்த நாளேடு 30.07.2022 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அப்போது மோடி, தமிழ்நாடு பாஜகவினரிடம் ஒரு கருத்தை எச்சரிக்கையாக கூறி இருக்கிறார்; ‘திராவிட முன்னேற்றக் கழகம், பாஜகவிற்கு சிந்தாந்த ரீதியாக எதிரான ஒரு கட்சி. அதே நேரத்தில் திமுகவை பாஜக எதிர்க் கின்றபோது, பாஜக தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாச்சாரத்திற்கோ எதிரான கட்சி என்று மக்கள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் எச்சரிக்கை செய்ததாக அந்த செய்தி கூறுகிறது. மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம், திருக்குறளின் பெருமையையும், தமிழின் பெருமையையும் ஏன் பேசி வருகிறார்?  அதன் பின்னால் உள்ள உள்நோக்கம் என்ன என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டுமானால், தமிழின் பெருமையையும், திருக்குறளின்...

நாடாளுமன்ற நிலைக் குழு அம்பலப்படுத்துகிறது எய்ம்ஸ்: தலைவிரித்தாடும் தீண்டாமைப் பாகுபாடு

நாடாளுமன்ற நிலைக் குழு அம்பலப்படுத்துகிறது எய்ம்ஸ்: தலைவிரித்தாடும் தீண்டாமைப் பாகுபாடு

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸில் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) சாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்று நாடாளு மன்றக்குழுவின் விசாரணையில் அம்பல மாகியுள்ளது. இதனால் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொடர்ந்து தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறார்கள்.  எஸ்.சி மற்றும் எஸ்.டி, நலனுக்கான நாடாளு மன்றக்குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி இருக்கிறார். எய்ம்ஸ்சில் இடஒதுக்கீடு பின்பற்றப்படு வது பற்றிய ஆய்வின் முடிவில் இந்தக் குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனத்திலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் மீது சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். “எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் தோல்வியடையச் செய்துள் ளார்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் தீவிரமான முயற்சிகளை அந்த  மாணவர்கள் மேற் கொண்டும் பாகுபாடு காரணமாக தோல்வி யடைந்துள்ளனர். எழுத்துத் தேர் வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பிறகும்  செய்முறைத் தேர்வுகளில்...

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

20.07.2022 புதன் காலை 11.00 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திராவிட பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லை வேந்தன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கொளத்தூர் மணி கண்டன உரையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் வினாத்தாளில் ஜாதி குறித்து கேட்கப்பட்டமையைக் குறித்தும், மாநில அரசின் அறிவுரைகளை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுத்தி வரும் துனணவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் உரை நிகழ்த்தினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு, சேலம், கோவை, திருப்பூர், இளம் பிள்ளை, நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் சுள,...

வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத பெருமுதலாளிகள் வங்கிகளுக்கு பட்டை நாமம் 2.40 இலட்சம் கோடி

வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத பெருமுதலாளிகள் வங்கிகளுக்கு பட்டை நாமம் 2.40 இலட்சம் கோடி

இந்திய வங்கிகளுக்கு வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், செலுத்த வேண்டிய தொகை (Wilful loan defaulters) கடந்த  பத்தாண்டுகளில் பத்து மடங்கு உயர்ந்துள்ளது,  மார்ச் 31, 2012இல் ரூ. 23 ஆயிரம் கோடி என்ற  அளவில் இருந்த இந்தத் தொகை மே 31, 2022  அன்று ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மாபெரும் கடன் மோசடிகளில் ஏபிஜி கப்பல் கட்டும் (ABG Shipyard) நிறுவனத்தின் புரொமோட்டர்கள் மற்றும் இரண்டு சகோதரர்கள் தான் மிகப் பெரிய தொகையை மோசடி செய்து முக்கியக் குற்றவாளிகளாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டவர்கள்; ஆனால் கடனை செலுத்த மறுப்பவர்களை, வேண்டு மென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி வரையறுக்கிறது.  இந்த வகையில், 25 லட்சம் ரூபாய் அல்லது  அதற்கு மேற்பட்ட கடன் நிலுவையில் உள்ள  கணக்குகள் குறித்துச் செய்யப்பட்ட...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை வரலாற்று அணியை உருவாக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை வரலாற்று அணியை உருவாக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்

பா.ஜ.க.வும் சங்கிகளும் இந்து பண்பாடு ஒழுக்கம் சார்ந்து செயல்படுகின்றனரா? ஜாதிக் குழுக்களை கட்சிக்குள் இழுக்கும் சதி. முறியடிக்க நாம் எத்தகைய எதிர் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்?   மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: (சென்ற இதழ் தொடர்ச்சி) தமிழ் நாட்டில் தமிழ் தெரியாமலேயே தேர்வாணைய தேர்வுகளை எழுத அனுமதித் தார், முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில்  தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அரசாணை பிறப்பிக்கச் செய்தார். தமிழ் தெரியாத பலர், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பிடித்து விட்டனர். ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக அவர் பதவியேற்றக் காலத்தில் இப்படி ஒரு விபரீத முடிவு எடுக்கும் நிர்ப்பந்தம் அவருக்கு எதனால் ஏற்பட்டது...

வினா – விடை

வினா – விடை

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தகுதியுள்ள எஸ்.எஸ்.டி. ஆசிரியர்களைக் கூட பணிக்கு சேர்ப்பதில்லை.                                               – நாடாளுமன்ற நிலைக்குழு அது தான் ஜனாதிபதவிக்கே ஒருத்தர நியமிச்சுட்டமே அப்றம் என்ன? சபாநாயகர் அப்பாவு கிறிஸ்துவ பாதிரியார்களைப் புகழ்ந்து பேசுவதா?                               – பாஜக பொருளாளர் சேகர் ஆமாம்; இந்து நித்தியானந்தாவையும், இந்து மோடியையும் தான் புகழ வேண்டும். அது தான் மதச்சார்பின்மை. கங்கையை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. – பசுமைத் தீர்ப்பாயம் புரோகிதர்களை அழைத்து மந்திரங்களை ஓதிப் பாருங்களேன்; தீட்டு கழிந்து தூய்மையாகிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் அதிகாரமிக்கவர். – கே.எஸ்.அழகிரி அதுசரி, காங்கிரச எப்போது அதிகாரபடுத்தப் போறீங்க நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத கெட்ட வார்த்தைகள் பட்டியல். -சபாநாயகர் அறிவிப்பு அந்தப் பட்டியல்ல நாடாளுமன்றத்தையும் சேத்துக்கோங்க.   பெரியார் முழக்கம் 28072022 இதழ்