கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்ட திவிக சார்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி கோவையில் முன்னெடுக்கும் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் இணையம் வழியில் (உடிகேநசநnஉந உயடட அநநவiபே) 29.07.2022 வெள்ளி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் :

1)         கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை விளக்கும் வடிவமைப்பை உருவாக்கி ஒரு வாரம் முன்பே முகநூல், இன்ஸ்டாகிராம்,டுவிட்டர் பக்கங்களில் பகிர்வது, பரப்புவது.

2)         12.08.2022 வியாழன் அன்று காலை 8.00 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து கழக உறுதிமொழி எடுப்பது.

3)         தொடர்ந்து சவுரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சிவராஜ் தலைமையில் கழகக் கொடியேற்றி கழக உறுதிமொழி எடுப்பது.

 

பெரியார் முழக்கம் 04082022 இதழ்

You may also like...