“பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” – கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.

தமிழனுக்கு மதமில்லை என்றார்; ஏனென்றால் மதம் என்பது தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு ஜாதியில்லை என்றார்,  ஏனென்றால் ஜாதி தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு கடவுள் இல்லை என்றார்; ஏனென்றால் குறளிலோ, தொல்காப்பி யத்திலோ கடவுள் என்ற சொல் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

கழகத்தின் சார்பில், களப்பணியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 23-25 வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் “பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” என்ற தலைப்பில் தமிழை மதத்திலிருந்து பிரித்தால் தான் மொழி தமிழரின் தன்மானத்துக்கு அடையாளமாக முடியும் என்று பெரியார் கூறியதை விளக்கி கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.

தமிழ் பாடல்களும் வட மொழியில் உள்ளன, ஆரிய கீர்த்தனைகளாகவே உள்ளன. அதையும் பெரியார் தமிழில் பாட வேண்டும் என்கிறார். இசை அரங்குகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்கிறார். பெரியார் உணர்வாளர் மாணவர் நகலக உரிமையாளர் ஆனா ரூனா என்ற அருணாசலம், தமிழ்ச் சான்றோர் பேரவை என்று தொடங்கி தமிழில் பாடல்களை பாடச் செய்தார். தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் சங்கமம் என்ற அமைப்பின் மூலம் தமிழ்ப் பாடல்களை கிராமிய நிகழ்வுகளைப் பரப்பினார். திராவிட இயக்கம் மட்டும் தான் தமிழ்ப் பாடல்களை பாட செய்தது. இந்தி மொழி திணிக்கப்படுகின்ற போது பெரியார் மிகக் கடுமையாக போராடுகிறார். இராஜ கோபாலாச்சாரி கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்கிறார். அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிற போது, ‘நான் எதற்காக நீங்களெல்லாம் இந்தி படிக்க வேண்டும் என்கிறேனென்றால், நீங்கள் இந்தியைக் கற்றுக் கொண்டால் சமஸ்கிருதத்தை எளிதாக கற்றுக் கொள்ளலாம். சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டால் நீங்கள் கடவுளை பார்க்கலாம்’ என்கிறார். அவருடைய நோக்கம் என்ன வென்றால் சமஸ்கிருதம் படித்துக் கொண்டே என்னுடைய வர்ணாஸ்ரம மதத்திற்கு அடிமையாக இரு என்பதாகும். பெரியார் தான் கேட்டார், உன்னுடைய மொழியில் அறிவியல் அல்லது விஞ்ஞானம் இருக்கிறதென்றால் பரவாயில்லை இதில் என்ன இருக்கிறது ? கடவுளை பார்க்கலாம் என்பது என்ன மொழி ? என்று கண்டித்து கேட்டார். பெரியார், தமிழ்ப் பண்டிதர்களுக்கு அழைப்பு விடுத்தார் இந்தி எதிர்ப்புக்காக. ‘நமது மொழிக்கு ஆபத்து வந்திருக்கிறது, இந்தி மொழி புகுந்து விட்ட தென்றால் தமிழன் இழிவுக்கு உள்ளாவான். வாருங்கள் நாமெல்லாம் கரம் கோர்த்து இந்தியை விரட்டுவோம்’ என்று தமிழறிஞர் களுக்கு கடிதம் எழுதினார்.

குன்றக்குடி அடிகளார் எழுதிய கடிதம்

பெரியார், கோவில்களில் தமிழில் பூஜை செய்ய வேண்டும், தமிழன் பூஜை செய்ய வேண்டும் என்று பேசிய போது, குன்றக்குடி அடிகளார் பெரியாருக்கு இரண்டு கேள்வியுடன் கடிதம் அனுப்புகிறார், அதில் “தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்கிறீர்களே அது இன உணர்வுக்காகவா அல்லது தாங்கள் பேசும்  நாத்திகத்திற்காகவா ? இரண்டாவது கேள்வி நீங்கள் யாரை தமிழர் என்று குறிப்பிடுகிறீர்கள்?” பெரியார் பதில் கடிதம் அனுப்பினார் அதில், “தமிழன் கட்டிய கோவிலில் தமிழன் தமிழில் பூஜை செய்ய வேண்டும் என்கிறேன். உங்களுக்கு இதில் சிரமம் இருக்குமானால், நீங்கள் போராடக்கூடிய அந்த போராட்டத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை மட்டும் அனுப்பி உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறேன்” என்கிறார். பெரியாரின் தேவையெல்லாம் போராட வாருங்கள் என்பது தான். மேலும் கடிதத்தில், “அடிகளார் என்னை, யாரைத் தமிழன் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார், இந்த நாட்டில் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சூத்திரன் என்று குறிப்பிடுகிறார்களே அவர்களைத் தான் தமிழன் என்று கருதுகிறேன்” என்று எழுதினார்.

மறைமலை அடிகளாருக்கும், பெரியார் இயக்கத்திற்கும் ஒருபோதும் ஒத்துப்போனதே இல்லை. ஆனால், அந்த மறைமலை அடிகளாரைப் பற்றி பெரியார்,  1935 இல் ஒரு கட்டுரை எழுதுகிறார், ‘இன்று தமிழ் பாஷையின் பெயரால் பெரும் நிதித் திரட்டிக் கொண்ட வரும், பெரும் புகழும் அடைந்தவரும், தமிழுக்கு தாயாக இருக்கிறேன் என்று விளம்பரப்படுத்திக் கொண்டவருமான மகா உபாத்தியாயர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களை ஒரு தட்டில் வைத்து மற்றொரு தட்டில் சுவாமி வேதாச்சலனார்(மறைமலை அடிகளார்) யை வைத்தால், எத்தனை சாமிதாய்யரை தட்டில் வைத்தாலும், மறைமலை அடிகளார் வீற்றிருக்கும் தட்டை அசைக்க முடியாது” என்கிறார் பெரியார். சுயமரியாதை இயக்கத்தை தீவிரமாக விமர்சித்த மறைமலை அடிகளாரை பெரியார் இப்படி தூக்கிப் பிடிக்கிறார். இதற்கு காரணம் என்னவென்றால், இவர் தமிழர் எப்படி யாவது தமிழுக்கு தொண்டு செய்வார் ஆனால் சாமிநாதய்யர் ஒரு போதும் தமிழுக்கு தொண்டு செய்ய மாட்டார், நமது மக்களுக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்’ என்று எழுதுகிறார்.

தமிழ் குறித்தும், மொழி குறித்தும் பெரியார் கூறியதை சிலவற்றை கூறுகிறேன். “மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு, நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததியாவது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்யவேண்டுமானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால் தான் செய்ய முடியும். அன்றி சமுதாய உணர்ச்சி வேண்டு மானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால் தான் முடியும்” என்கிறார் பெரியார்.  13.01.1936 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் தமிழர் திருநாள் உரையில் பெரியார், ‘ஒரு பார்ப்பான் தமிழை நீஷ பாசை என்கிறான். அப்படியென்றால் அவனுக்கு எவ்வளவு திமிரு இருக்க வேண்டும்” என்று கோவத்துடன் பேசுகிறார்.

“தமிழ் தமிழ்நாடு என்ற பெயர்கூட இந் நாட்டிற்கு சமுதாயத்திற்கு இருக்க முடியாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்ற நிலை ஏற்படுமானால் பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடை யவோ, என்னைப் பின்பற்றுகிற நண்பர்களுடை யவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்” என்று கேட்கிறார். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் எவ்வளவு பற்று இருந்திருந் தால் பெரியார் இந்த வார்த்தைகளை பயன்படுத் தியிருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

17.08.1945 இல் திருச்சியில் திராவிட வாலிபர் சங்க மாநாட்டில் பெரியார், “உன் சொந்த மானத்தை விட, உன் இன ஈனத்தை ஒழிப்பதற்கு தொண்டாற்று. உன் இனத்தின் ஈனத்தை ஒழிக்க உன் சொந்த மானத்தை பலி கொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகை துன்பங்களையும், பொறுத்துக் கொண்டு தொண்டாற்று. தக்க குடிமகன் இல்லாத இனம், வேர்ப் பற்று இல்லாத மரம் போல கோடாரி கொண்டு வெட்டாமலேயே சாய்ந்து விடும். தன் இனத்துக்காக தொண்டாற்றுபவன் அடை யாளம் என்னவென்றால், அந்த தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்கும் அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்துக் கொண் டவனாக இருக்க வேண்டும்” என்றார் பெரியார்.

திராவிடன் என்பது பண்பாட்டு விடுதலைக்கான சொல். தமிழன் என்பது அரசியல் விடுதலைக்கான சொல். பண்பாட்டு விடுதலையை அரசியல் விடுதலையுடன் கலக்க வேண்டாம் என்று கூறினாலும் திராவிடன் என்ற பெயரை ஏன் வைத்தீர்கள் என்று திரும்பத் திரும்ப அதையேத்தான் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். எனவே திராவிட இயக்கம் போன்று தமிழுக்கு வேறு யாரும் தொண்டாற்ற வில்லை. அறிவியல் சிந்தனையில் வளர்ச்சி நோக்கியது தான் திராவிட இயக்கமும் பெரியாரும் ஆற்றிய தொண்டு.

தமிழைப் பற்றி பெரிhயர் எவ்வளவோ பேசி யிருந்தாலும் குறிப்பாக ஒன்றை கூற வேண்டும். “தமிழனுக்கு மதமில்லை என்றார்; ஏனென்றால் மதம் என்பது தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு ஜாதியில்லை என்றார்,  ஏனென்றால் ஜாதி தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு கடவுள் இல்லை” என்றார்; ஏனென்றால் குறளிலோ, தொல்காப்பி யத்திலோ கடவுள் என்ற சொல் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

பாவலரேறு பெருஞ்சித்தனார் பெரியாரைப் பற்றி, “பெரியார் ஒரு கட்சியின் தலைவரில்லை.  ஒரு இனத்தின் தலைவர் மட்டுமல்ல ஒரு காலத்தின் தலைவர். ஒரு வரலாற்றின் நாயகர். அவர் தோன்றிருக்கவில்லையென்றால், ஒரு இனத்தின் அடிமை வரலாறே முற்று பெற்றிருக் காது. ஒரு நாட்டின் மேல் போர்த்திக் கிடந்த இருள் விலகி இருக்காது. தமிழனின் தலை யெழுத்தே மாற்றம் பெற்றிருக்காது. தன்மான மற்ற நம் இனம் ஆரியச் சேற்றில் மேலும் மேலும் அழுத்தி கதி கலங்கிப் போயிருக்கும்.ஏறத்தாழ 3000 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைத்ததில் முழு பங்கு பெரியாருக்கு உண்டு. கை ஓயாமல் அவர் அடித்த அடி, வாய் ஓயாமல் அவர் பேசிய பேச்சு, கால் ஓயாமல் அவர் நடந்த நடை, இவற்றின் அடிப்படையில் அவர் எழுதி முடித்த தன்மான வரலாறு, கட்டி முடித்த பகுத்தறிவு மாளிகை, ஆக்கிப் படைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் யாவும் மாந்தை இனம் முழுமைக்கும் சூடு கொளுத்துபவை, வழிகாட்டு பவை என்றென்றும் மாற்றத்திற்கில்லாதவை, எத்தகைய கொம்பனாலும் அசைக்க முடியாதவை, அழிக்க முடியாதவை” என்று பெருஞ்சித்தனார் பெரியாரைப் பற்றி எழுதுகிறார்.

பெரியார், கம்பராமாணத்தை எரித்தார். கம்பராமாணத்தை எரித்துவிட்டு அந்த இடத்தில் திருக்குறளை வைக்க வேண்டும் என்று விரும்பினார். பாரதியை எதிர்த்தார். ஆனால் பாரதிதாசனை தூக்கிப் பிடித்தார். இதிகாசங் களை எரிக்கச்சொன்னார், எரித்துவிட்டு நீதி நூல்களை அந்த இடத்தில் வைத்தார். அவர்நடத்திய நூல்களின் பெயர்கள், குடி அரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை என்று தமிழ்ப் பெயர்களைத் தான் வைத்தாரே தவிர ஒரு இடத்திலும் வடமொழி எழுத்தை வைத்து பத்திரிக்கை நடத்தவில்லை. திராவிட நாடு கேட்டார்; திராவிட நாடு கேட்ட போதும் தமிழில் தான் பத்திரிக்கை நடத்தினார். தெலுங் கிலோ, கன்னடத்திலோ பத்திரிக்கை நடத்த வில்லை. அவர் கன்னடனுக்கோ, மலையா ளிக்கோ, தெலுங்கனுக்கோ இயக்கம் நடத்தி போராடவில்லை, தமிழனுக்காக இயக்கம் நடத்தி தமிழனுக்காகவே போராடியவர். தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்றார், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்என்றார், தமிழை நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டுக் கோவிலில் தமிழன் தமிழில் பூசை செய்ய வேண்டும் என்றார். தமிழனின் திருமணம் தமிழில் இருக்க வேண்டும் என்றார். தமிழிசைப் பாடல்கள் தமிழில் இருக்க வேண்டும் என்றார். அறிவுக்கு ஒவ்வாத சமஸ்கிருத ஆண்டை விடுத்து திருவள்ளுவர் ஆண்டான தை முதல் நாளை கொண்டாட வேண்டும் என்றார். திருக்குறளிற்கு மாநாடு நடத்தினார். மலிவு விலையில் குறளை அச்சடித்து கொடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார், தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்று கேட்டார். இப்படி பெரியார் எழுதி, கேட்டு, போராடி யவை அனைத்தும் தமிழுக்கும் தமிழருக்கும் தான். நாம் (தமிழர்கள்) பூர்வக்குடிகள் என்பதில் பெரியாருக்கு அழுத்தமான கருத்து இருந்தது. தந்தை பெரியாரை விட தமிழ்நாட்டிற்கு தொண்டு செய்தவர்களை நாம் வேறு யாரையும் எடுத்து கூற முடியாது என்றார் பால். பிரபாகரன்.

(நிறைவு)

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...