இட ஒதுக்கீடு இல்லாவிட்டால்…

இட ஒதுக்கீடு இல்லா விட்டால்… 45 மத்திய பல்கலைக் கழகங்களில்  45 துணை வேந்தர் இருக்காங்க…  அதில் பட்டியல் சாதியை சேர்ந்தவர் எத்தனை பேர்? ஒரே ஒருவர்.

பழங்குடி எத்தனை பேர்? ஒரே ஒருவர்.  ஓ.பி.சி எத்தனை பேர்? ஏழு பேர்.  அப்ப மீதமெல்லாம் முற்பட்ட சாதியினர்  36 பேர்.  சதவீதமாகப் பார்ப்போமா?

எஸ்.சி – 2 ரூ; எஸ்.டி – 2 ரூ;  ஓ.பி.சி – 16 ரூ; முற்பட்ட சாதி – 80 ரூ;  (ஆதாரம் : எகனாமிக் டைம்ஸ் 08.08.2022 – நாடாளுமன்ற கேள்வி பதில் – கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்)

இந்த கணக்கை சொன்னவுடன் ஒருவர் சொன்னார். துணை வேந்தர் பதவிக்கு தான் இட ஒதுக்கீடு இல்லையே! அது அநீதி என்று எப்படி சொல்ல முடியும்? என்றார்.

இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் என்ன அநீதி நடக்கும் என்பதற்குதான் இது என்றோம்.              அவரிடம் பதில் இல்லை.

நன்றி : ‘தீக்கதிர்’

 

பெரியார் முழக்கம் 25082022 இதழ்

You may also like...