93ரூ நிர்வாக இயக்குனர்கள் ‘அவாள்களே’!

‘இலவசங்கள்’ குறித்து திரு புகழ் காந்தி ஓர் அருமையான கட்டுரையை ஆங்கில ‘இந்து’ (ஆக.20, 2022) வில் எழுதியிருக்கிறார். அதில் வரும் சில முக்கியமான விவரங்கள்:

இந்தியாவின் மொத்த சொத்தில் 22ரூஐ மேல் தட்டில் இருக்கும் 1ரூவைத்திருக்கிறார்கள். அதே போல் 57ரூ சொத்துக்களை மேலடுக்கில் இருக்கும் 10ரூ பேர் வைத்திருக்கின்றனர். உயர் ஜாதிக் குடும்பங்கள் தேசிய வருமானத்தின் சராசரியை விட 47ரூ அதிகம் ஈட்டுகிறார்கள். பெரும் தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களில் (bடியசன அநஅநெசள) 93ரூ உயர் ஜாதியினர். நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 63ரூ நிர்வாகிகள் உயர் ஜாதியினர்.

தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் வரிச் சலுகைகள் 5 லட்சம் கோடி. இதனால் அரசுக்கு சென்ற வருடம் இழப்பு  1.84 லட்சம் கோடி. அடுத்த வருடம் இது ஒரு லட்சம் கோடியாக இருக்கும். இதன் பலன் பெரும்பாலும் உயர் ஜாதியினருக்குத்தான் (பார்ப்பனருக்குத்தான்). சரி, தமிழகத்தில் வழங்கப் படும் மூன்று இலவசங்களுக்கான செலவு என்ன?

கலர் டிவி 750 கோடி; பெண்களுக்கான இலவச பஸ் பயணம் 1250 கோடி; மதிய உணவுத் திட்டம் 1823 கோடி; மொத்தம்: 3823 கோடி. ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பலன்கள் பெரும்பாலும் ஜாதி, வர்க்க அடுக்கில் கீழ் நிலையில் இருப்பவர்களுக்குத்தான்.

இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையினால் அதிகம் பலனடைந்தவர்கள் (பார்ப்பனர்) உயர் ஜாதியினர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே சாதியா, வர்க்கமா என்று மயிர் பிளக்கும் வாதங்களை நடத்துபவர்கள் வெறும் கையால் முழம் போடாமல் இத்தகைய உண்மைகளை வைத்துப் பேசினால் தெளிவு கிடைக்கும்.  மேற்கோள்களை ஃபார்முலா போல் ஒப்பித்துக் கொண்டே இருந்தால் மக்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஸ்தூலமான நிலைகளை ஸ்தூலமாக ஆய்வு செய்யுங்கள் என்று லெனின் சொன்னது இதைத்தான்.

பெரியார் முழக்கம் 25082022 இதழ்

You may also like...