நிர்மலா சீதாராமனின் அவதூறுக்கு மறுப்பு
விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த காரணத்தால் ஒரு வார காலம் நாடாளுமன்றம் முடங்கியது. ஒரு வழியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க முன் வந்தார். பண வீக்கம் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், ஒன்றிய ஆட்சியின் நிதி கொள்கையால் மாநிலங்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று சாதித்த தோடு, தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றியதா என்று கட்சி அரசியலைப் பேசி தமிழ் நாட்டுக்கு சவால் விட்டார். இறுமாப்புடன் பேசிய நிர்மலா சீதாராமன் உரைக்கு பதிலளிக் கும் வகையில் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஆக.9) சேலம் தரணிதரன் (திராவிடத் தொழில் மன்ற இயக்குனர்) பதிலளித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துகள்:
- வரி விதிப்பில்கூட நேர்மை இருக்க வேண்டும்; குடும்பத்தினர் தாங்கக்கூடிய அளவில் இருக்கவேண்டும் என்று பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித் கூறினார். ஆனால் ஒன்றிய ஆட்சி தாங்க முடியாத அளவுக்கு மறைமுக வரியை உயர்த்தியுள்ளது. நாட்டின் மொத்த வருவாயில் விதிக்கப்பட்ட மறைமுகவரி 43 சதவீதத்திலிருந்து 2019இல் கூடுதலாக 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகள் மறைமுகவரியை சராசரி யாக 33 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவது இல்லை. மறைமுக வரிகள் ஏழை, பணக் காரர் இரு பிரிவினரையும் பாதிக்கக் கூடியது.
- இந்தியாவில் ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியர்களில் ஏழைகள் சராசரியாக தங்கள் வருவாயில் 22 சதவீதம் எரிவாயுவிற்காக செலவிட வேண்டி யிருக்கிறது. உலகிலேயே இது மிகவும் அதிகம். இது தவிர, டீசலுக்கு ஒன்றிய ஆட்சி 2014லிருந்து 800 சதவீதம் வரியை உயர்த்தி யிருக்கிறது. ஆனால் 300 சதவீதம் மட்டுமே வரிக் குறைப்பு செய்திருக்கிறது. ஏழைகள் மீது மறைமுக வரியை உயர்த்திவிட்டு கார்ப்ப ரேட்டுகளுக்கு நேரடி வரியை 35 சதவீதத் திலிருந்து 22 சதவீதமாக குறைத்திருக் கிறார்கள். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.2 இலட்சம் கோடி. மறைமுக வரி விதிப்பு நாட்டின் வளர்ச்சியைத் தடுப்ப தோடு, பெருமளவில் பண வீக்கத்தை வளர்த்து சமத்துவமற்ற நிலையை உருவாக்கி விடுகிறது. இது மீண்டும் வளர்ச்சியைத் தடுக்கிறது.
- (நிர்மலா ஒப்புக் கொண்ட) பணவீக்கத்துக்கு மற்றொரு காரணம் உணவுப் பொருள். அரிசி, பால் போன்றவற்றின் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி.
- கடந்த சில ஆண்டுகளாக செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகி வருகிறார்கள். உலக அசமத்துவ அறிக்கை (றுடிசடன iநேளூரயடவைல ஐனேநஒ) உலகிலேயே ஏழை – பணக்கார வேறுபாடு அதிகம் நிறைந்த நாடு இந்தியா என்று கூறுகிறது. மிக அதிகமான கடும் வறுமையில் வாழும் மக்களைக் கொண்டு உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக உலக ஏழை நாடுகளுக்கான குறியீடு (றுடிசடன ஞடிஎநசவல ஊடடிஉம) கூறுகிறது.
- இந்தியாவில் சில மாநிலங்களில் பணவீக்கம் சராசரியைவிட இரண்டு மடங்காக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் மோசமான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து வதில் சாதனை படைத்துள்ளன.
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இரண்டு அம்சங்கள் முக்கிய இடம் பெறு கின்றன. உணவு மற்றும் போக்குவரத்துகளில் செலவிடப்படும் கூடுதல் தொகை, பண வீக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பண வீக்கத்தை கணக்கிடுவதில் இந்தப் புள்ளிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. தமிழகத் தில் பின்பற்றப்படும் சிறப்பான உணவு வழங்கும் கட்டமைப்பு (னுளைவசiரெவiடிn ளுலளவநஅ), பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளன. சமூக, பொருளாதார குறியீடுகளில் தமிழ் நாடு, கேரளா மாநிலங்கள் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் பட்டதாரிகள் எண்ணிக்கை உயர்வு; உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கு ஆகியவையாகும். இதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.
இத்திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு நிதி அதிகாரம் தேவை. ஆனால் கடந்த சில ஆண்டு களாக தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்படு கிறது.
வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு ஒன்றிய ஆட்சிக்கு வரியாக செலுத்தும் ஒரு ரூபாயில் தமிழ்நாட்டுக்கு ஒன்றியம் திருப்பி வழங்குவது 30 காசுகள் மட்டுமே. அதே நேரத்தில் உ.பி.க்கு 2 ரூபாயும், பீகாருக்கு 3 ரூபாயும் ஒன்றிய ஆட்சி வழங்குகிறது. தன்னிச்சையாக விதிக்கப்படும் ‘செஸ்’, ‘சர்-சார்ஜ்’ வரிகளில் மாநிலங்களுக்கு பங்கு கிடையாது. இந்த வரிகளை 2011-2012லிருந்து 2020-2021 வரை ஒன்றிய ஆட்சி இரு மடங்காக உயர்த்தி நிதியை தன்னிடம் மட்டுமே வைத்துக் கொண்டது. கூட்டாட்சி அமைப்பை சிதைக்கும் நிதிக் கொள்கையை ஒன்றிய அரசு மாற்றியமைக்க முன்வர வேண்டும்” என்று கட்டுரை கூறுகிறது. (தமிழில் ‘இரா’)
தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் தடைகளையும் மீறி தமிழ்நாடு ஒன்றிய ஆட்சி யின் மோசமான பொருளாதாரக் கொள்கை களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பணவீக்கத்துக்குக் காரணமான வரி விதிப்புகளை அதிகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமாக தள்ளுபடி களையும் வரிவிலக்கையும் வாரி வழங்கி யிருக்கிறது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. ஆட்சியை நிர்மலா சீதாராமன் இறுமாப்புடன் குற்றம் சாட்டி சவால் விடுகிறார்.
பெரியார் முழக்கம் 11082022 இதழ்