வினா – விடை
- எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தகுதியுள்ள எஸ்.எஸ்.டி.
ஆசிரியர்களைக் கூட பணிக்கு சேர்ப்பதில்லை. – நாடாளுமன்ற நிலைக்குழு
அது தான் ஜனாதிபதவிக்கே ஒருத்தர நியமிச்சுட்டமே அப்றம் என்ன?
- சபாநாயகர் அப்பாவு கிறிஸ்துவ பாதிரியார்களைப் புகழ்ந்து பேசுவதா? – பாஜக பொருளாளர் சேகர்
ஆமாம்; இந்து நித்தியானந்தாவையும், இந்து மோடியையும் தான் புகழ வேண்டும். அது தான் மதச்சார்பின்மை.
- கங்கையை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. – பசுமைத் தீர்ப்பாயம்
புரோகிதர்களை அழைத்து மந்திரங்களை ஓதிப் பாருங்களேன்; தீட்டு கழிந்து தூய்மையாகிவிடும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் அதிகாரமிக்கவர்.
– கே.எஸ்.அழகிரி
அதுசரி, காங்கிரச எப்போது அதிகாரபடுத்தப் போறீங்க
- நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத கெட்ட வார்த்தைகள் பட்டியல். -சபாநாயகர் அறிவிப்பு
அந்தப் பட்டியல்ல நாடாளுமன்றத்தையும் சேத்துக்கோங்க.
பெரியார் முழக்கம் 28072022 இதழ்