மனுசாஸ்திரத்தைத் தடை செய்: சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் மற்றும் புத்தூரில் உள்ள பெரியாரின் சிலைக்கு மா.குமார் மற்றும் தே.ச.அன்புரவி ஆகியோரின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்று மாலை 4 மணியளவில் ரிஷிவந்தியம் ஒன்றியம் வானாபுரம் – பகண்டை கூட்டுச் சாலையில் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ் தலைமையில் ‘சனாதனத்தை வேரறுப்போம்’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்ட செயலாளர் க. இராமர், மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊட்டத்திற்கு ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர் இரா.கார்மேகம், ஒன்றிய தலைவர் மா. குமார், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் தே.க. அன்புரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ.முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில், இரா.வீரமணி, இரா. ஜீவா, மு.ச.பா, கௌதம், ச.சுபாஷ், கு. பாபா, நீதிபதி உள்ளிட்ட தோழர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மும்முனை சந்திப்பில் செப். 28 புதன்கிழமை மாலை 4 மணியளவில் கழகத்தின் சார்பில், “ஆ.இராசா பேசியதில் என்ன தவறு” என்றும், பெரும்பான்மை இந்துக்களையும் பெண்களையும், சூத்திரர்கள் என்று இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடை செய் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் அன்புரவி தலைமை வகித்தார். ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் இரா.கார்மேகம் ஒன்றிய தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் க.இராமர், மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, ச.கு.பெரியார் வெங்கட், மாவட்டத் தலைவர் க.மதியழகன், திருமால் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக மனுதர்மத்தில் உள்ள இழிவுகள், ஆ.இராசா பேசியதில் என்ன தவறு உள்ளிட்ட கருத்துகளை தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் கருத்துரையாற்றினார். நிகழ்வில், அறவியல் மன்ற அமைப்பாளர் வீ.முருகன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 06102022 இதழ்

You may also like...