கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 28022019 இதழ்

You may also like...