பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்
சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ளாத பாஜக, தேர்தல் அதிகாரியாக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து தேர்தலை நடத்த வைத்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், பாஜக தோல்வி தேர்தலுக்கு முன்பே உறுதியானது. ஆனாலும், தேர்தல் அதிகாரி பாஜகவின் கவுன்சிலர் என்பதால் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தார். கண்காணிப்பு கேமிராவில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி வாக்குச்சீட்டுக்களை திருத்துவது அப்பட்டமாக பதிவானது. உச்சநீதிமன்றம் இதைக் கடுமையாக கண்டித்ததுடன், அரிதினும் அரிதான வழக்குகளில் பயன்படுத்தக்கூடிய விதி 142-யைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் வழங்கிய நீதியை 2016 ஆம் ஆண்டிலிருந்து பல மாநிலங்களில் பாஜக செய்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கும் வழங்கியிருந்தால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். தற்போது 12 மாநிலங்களில் நேரடியாகவும், 5 மாநிலங்களில் கூட்டணியுடனும் பாஜக...