வினா விடை
- பழனி கோயில் கொடி மரத்தின் அருகே இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
– மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு
பழனி கோயிலில் கொடிமரமே கிடையாது என்கிறார் ஆன்மீகப் பேச்சாளர் சுகி.சிவம். பாஜக கொடிமரம் ஒன்றை நட்டு, அறிவிப்பு பலகையை தொங்கவிடலாமா?
- இஸ்லாமிய நாடான அபுதாபியில் அரசர் ஆதரவோடு இந்து கோயிலை திறந்து அங்கே நாட்டின் பெருமையை பேசினார் மோடி – செய்தி
அங்கே கோயில் கட்டுவார்கள், இங்கே மசூதி இடிப்பார்கள்
- உலகிலேயே ‘விதவைகள்’ அதிகம் வாழும் நாடு இந்தியா
– உலக பொருளாதார மன்றம்
ஆளுநரே! உங்கள் சனாதனப் பெருமையில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- ஆண் சிங்கத்துக்கு அக்பர் பெயர்; பெண் சிங்கத்துக்கு சீதை பெயரா? ‘இந்து’க்களை புண்படுத்துகிறார்கள் – விஷ்வ இந்து பரிசத் வழக்கு
‘சிங்கங்களுக்கு’ ஜாதி, மதம் கிடையாது. “அசிங்கங்கள்” தான் இதற்கு நீதிமன்றம் ஓடும்
பெரியார் முழக்கம் 22022024