சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்
கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் கடந்த 30.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புவனகிரியில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மாணிக்.முருகேசன் தலைமை தாங்கினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன், மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.
அ.மதன்குமார் வரவேற்றார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், கழக கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ந.கொளஞ்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, தியாகி பாலா பேரவையின் பொதுச்செயலாளர் கார்ல் மார்க்ஸ், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
கடலூர் மாவட்ட கழகச் செயலாளர் அ.சதிசு நன்றி கூறினார்.
சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம், 20.12.2023, புதன்கிழமை மாலை 6 மணிக்கு புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்றது.
அருள்தாஸ் – பேரன்பு குழுவின் ராப் இசை பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்திற்கு சேத்துப்பட்டு இராசேந்திரன் தலைமை வகித்தார், தட்சணாமூர்த்தி வரவேற்புரையாற்றினார், கோ.துரை, ஏசு குமார் முன்னிலை வகித்தனர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வழக்கறிஞர் இளவரசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், தென் சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், கரு. அண்ணாமலை, மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் அருண்குமார், அ.வ.வேலு மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 04.1.2024 இதழ்