Category: பெரியார் முழக்கம் 2019

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் உயர்சாதியினருக்கான 10ரூ இடஒதுக்கீடு திட்டத்தை கண்டித்துக்  கல்லக்குறிச்சி  மாவட்டம் சங்கராபுரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மொழிப் போர் தியாகிகளின் தினமான 25-01-2019 (வெள்ளி) அன்று  அவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியோடு ஆர்பாட்டம் தொடங்கியது. மாவட்ட துணைச் செயலாளர். மு.நாகராசு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் செ.வே.இராசேசு, க.மதியழகன், க.இராமர்,பூ.ஆ.இளையரசன் ஆகியோர்  இட ஒதுக்கீடு வரலாறு குறித்தும் உயர்சாதியினருக்கான 10ரூ இட ஒதுக்கீட்டின் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றினார்கள்.தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் பல்வேறு கருத்துகளை தொகுத்து இறுதி உரையாற்றினார்.செ.க.வேலாயுதம் நன்றி உரையாற்றினார். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மத அடையாளமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மத அடையாளமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான கோபுர வடிவில் அமைப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால் அந்த வடிவமைப்பை கைவிட வேண்டும் என்றும் மேம்படுத்தப்படும் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழத்தின் மதுரை மாவட்ட செயலாளர்  மா.பா.மணியமுதன் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினாலோ, மத அடையாள வடிவமைப்பை வைத்தாலோ தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் அறிவிக்கப்படும் என அறிவித்தார். தற்போது “தந்தை பெரியார் பேருந்து நிலையம் எனும் பெயர் மாற்றப்படாது” என மதுரை மாநகராட்சி...

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றி விட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். “தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையுதோ இல்லையோ நிகழ்ச்சியின் பெயரைக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி “மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக் கின்றனர். இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், “கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’...

எல்.அய்.சி. ஊழியர் ஆர்ப்பாட்டம்

எல்.அய்.சி. ஊழியர் ஆர்ப்பாட்டம்

பார்ப்பன அதிகார  மய்யங்களை தகர்க்காமல் சமூகநீதி பெற முடியாது: விடுதலை இராசேந்திரன் பேச்சு பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய அரசின் அரசாணைகளை நடைமுறைப்படுத்தாத எல்.அய்.சி. நிர்வாகத்தையும் அதன் தென் மண்டல மேலாளரையும் கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 5.1.2019 காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்தது. தென்மண்டல எல்.அய்.சி. கூட்டமைப்புத் தலைவர்  ஆ.லோகநாதன் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர்கள் இ. அன்புச் செல்வம், கு. கமலக்கண்ணன், பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்களின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் கு. தனசேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மு. வீரபாண்டியன் (சி.பி.அய்.), எஸ்.கே. கார்வேந்தன் (முன்னாள் எம்.பி.),  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “அய்ந்து முக்கியக் கோரிக்கைகளை நீங்கள் முன் வைத்திருக்கிறீர்கள். அவை அனைத்தும் புதிய கோரிக்கைகள் அல்ல. அரசாணைகளாக வெளி வந்த...

பார்ப்பன உயர்ஜாதிப் பிடியில் சிக்கியுள்ள அய்.சி.அய்.சி.அய். வங்கியின் மெகா ஊழல்

பார்ப்பன உயர்ஜாதிப் பிடியில் சிக்கியுள்ள அய்.சி.அய்.சி.அய். வங்கியின் மெகா ஊழல்

அய்.சி.அய்.சி.அய். வங்கி தலைமை பெண் அதிகாரி, சந்தா கோச்சார் ‘சிந்தி’ குடும்பத்தில் பிறந்தவர். பார்ப்பனருக்கு இணையான முன்னேறிய ஜாதி. அவர் நாள் ஒன்றுக்கு வாங்கிய சம்பளம் ரூ. 2.18 இலட்சம். பார்ப்பன உயர்ஜாதிக் கும்பலிடம் சிக்கியுள்ள அதிகாரத்தை எவ்வளவு முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவரது ஊழல் ஒரு உதாரணம். இவரைக் காப்பாற்ற அய்.சி.அய்.சி.அய். வங்கி  பார்ப்பன நிர்வாகமே துணை போனதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன? அய்.சி.அய்.சி.அய். வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கி. இந்த வங்கிக்கு இன்னொரு முகம் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார். ஆனால், இன்று இரண்டுமே தங்களது நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் தீபக் கோச்சார் ஆதாயமடைந்தார் என்று வீடியோகான் மற்றும் ஐசிஐசிஐ பங்குகளை வைத்திருக்கும் முதலீட் டாளரான அர்விந்த் குப்தா குற்றம் சாட்டினார். ஆனால் அப்போது யாரும் கண்டு...

சிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதார இடஒதுக்கீடு

சிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதார இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சாதிகள், சமூக-பொருளாதார அந்தஸ்துள்ள சமூகங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் நிலவும்போது, இடஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ள நடவடிக்கைதான். அதேசமயம், நாடு குடியரசான புதிதில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை, இன்றைய நவீன யுகத்தில் மறுபரிசீலனை செய்வது அவசியம். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்வோம். எல்லோருக்கும் இடஒதுக்கீடு? பொருளாதாரரீதியாகப் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு 10ரூ ஒதுக்கீட்டை அரசியல் சட்ட (124ஆவது திருத்த) மசோதா-2019 உறுதியளிக்கிறது. நாடாளுமன்ற விவாதத்தில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் விவாதிக்கப்பட்டாலும் இந்த மசோதா இது பற்றி மவுனம் சாதிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ (கிரீமி லேயர்) என்று அடையாளம் காண அடிப்படையாகக் கருதப்படும் ‘ஆண்டுக்கு 8 இலட்ச ரூபாய்’ என்ற அடிப்படையே இதற்கும் கொள்ளப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ என்று நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம், வசதியானவர்களை...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (7) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (7) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. பகுதி 6 வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வர வேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால்  அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒரு நாள்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (6) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (6) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. பகுதி 5 பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் குறித்து இங்கே நான் பேசும் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு வரலாறுகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான். பொதுவாக பெரியார் இயக்கத்தினருக்கு இது ஏற்ககனவே தெரிந்த வரலாறுகள்தான் என்றாலும் இளைய தலைமுறைக்கு நாம் அதைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது வைக்கம் போராட்டம் வரலாறு குறித்து பெரியார் ஆற்றிய உரையை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இது பெரியார் சந்தித்த அடக்குமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடலாமே தவிர, பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறையாகக் குறிப்பிட முடியாது. காரணம் இந்தப் போராட்டம் நடந்தபோது பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர். போராட்ட வரலாறு குறித்து 1959ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி குமரி...

அரசே சமர்ப்பித்த அறிக்கை தரும் அதிர்ச்சித் தகவல்கள் மத்திய அரசுத் துறைகளில் பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவே இல்லை

அரசே சமர்ப்பித்த அறிக்கை தரும் அதிர்ச்சித் தகவல்கள் மத்திய அரசுத் துறைகளில் பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவே இல்லை

மோடி ஆட்சி பல இலட்சம் காலியாக உள்ள பதவிகளை நிரப்பவே இல்லை. அரசு தந்த புள்ளி விவரங்களே இதை ஒப்புக் கொள்கின்றன. பொதுப் போட்டியில் முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை நடுவண் ஆட்சி அறிவித் திருக்கிறது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தோடு அவசர அவசரமாக இந்த சட்டத் திருத்தம் வந்துள்ளது. ஆனால் மத்திய பல்கலைக் கழகங்கள், தொடர்வண்டித் துறை, காவல்துறை, அஞ்சலகத் துறை, பள்ளிக் கல்வி மற்றும் நீதித் துறைகளில் நீண்டகாலமாக ஏராளமானப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. இது குறித்து புள்ளி விவரங்களை ‘பிசினஸ் லைன்’ ஜன.10ஆம் தேதி ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டத் துறைகளில் 28 இலட்சம் பணி இடங்கள் காலியிடமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை அந்த ஏடு தந்துள்ளது. மருத்துவ சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு...

சென்னையில் நடந்த கருத்தரங்கு : நாட்டை ஆள்வது அரசியல் சட்டமா? சனாதன தர்மமா?

சென்னையில் நடந்த கருத்தரங்கு : நாட்டை ஆள்வது அரசியல் சட்டமா? சனாதன தர்மமா?

‘நாட்டை ஆள்வது அரசமைப்புச் சட்டமா? சனாதன தர்மமா?’ எனும் தலைப்பில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் பிரிவு (முற்போக்கு மாணவர் கழகம்), ஜனவரி 23ஆம் தேதி சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவை அரங்கில் கருத்துப் பகிர்வு, நிகழ்ச்சியை மாலை 5 மணியளவில் நடத்தியது. பேராசிரியர் அருணன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் நாட்டை ஆள்வது சனாதன தர்மமே என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தி.க. பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி பேசினர். ‘அரசமைப்புச் சட்டமே’ எனும் தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ‘ஆழ்வார்க்கடியார்’ மை. பா. நாராயணன் ஆகியோர் பேசினர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நிறைவுரையாற்றினார். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளில், அ.வ.அ.கல்லூரி வாயிலில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகி சாரங்கபாணி நினைவுதூணில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். விசிக திருச்சி மாவட்ட நெறியாளர் வேலு.குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு. மகேசு கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த முத்துக்குமார் நினைவு நாளான 29.1.2019 அன்று கொளத்தூர், சென்னை பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமார் நினைவிடத்தில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்து வீர வணக்கத்தை செலுத்தினார். இதில் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு  அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அருண், கன்னியப்பன், முரளி, வடசென்னை பாஸ்கர், தட்சணாமூர்த்தி ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

பார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா?

பார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா?

கடந்த 65 ஆண்டுகளில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர்களில் 48 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் பார்ப்பனர்களாகவே உள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் 80 விழுக்காட்டினர் உயர் ஜாதியினர்கள் மட்டும்தான். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர். இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பெயர்கள் ஆண்டுவாரியாக, அவர்களின் ஜாதியப் பின்புலத்தோடு கீழே காணலாம். சி.ராஜகோபாலாச்சாரி (1954) – பார்ப்பனர் (ஓ.சி) சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1954) – பார்ப்பனர் (ஓ.சி) சி.வி.இராமன் (1954) – பார்ப்பனர் (ஓ.சி) பகவான் தாஸ் (1955) – அகர்வால் (ஓ.சி) விஸ்வேசுவரய்யா (1955) – பார்ப்பனர் (ஓ.சி) ஜவகர்லால் நேரு (1955) – பார்ப்பனர் (ஓ.சி) கோவிந்த் வல்லப் பந்த் (1957) – பார்ப்பனர் (ஓ.சி) தோண்டோ கேசவ் கார்வே (1958) – பார்ப்பனர் (ஓ.சி) பிதான் சந்திர ராய்...

பா.ஜ.க. மண்டல் பரிந்துரையை ஆதரித்ததா? வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

பா.ஜ.க. மண்டல் பரிந்துரையை ஆதரித்ததா? வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வரும் சில பா.ஜ.க.வினர், மண்டல் பரிந்துரையை நியமித்தது தங்கள் கட்சி தான்; அதை ஆதரித்ததும் தங்கள் கட்சி தான் என்றும் வாதிட்டு வருகிறார்கள். இது அப்பட்டமான பொய். மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி வந்தபோது ஜனதாவில் ஜன சங்கமும் தன்னை இணைத்துக் கொண் டிருந்தது. அந்த அமைச்சரவையில் வாஜ்பாய் வெளிநாட்டுத் துறை அமைச்சர், உள்துறை  அமைச்சர் சரண்சிங், ஜாட் சமூகத்தைச் சார்ந்த விவசாயியான சரண்சிங், பிற்படுத்தப் பட்டோர் உரிமைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவரது முயற்சியால் அமைக்கப்பட்டது தான் மண்டல் ஆணையம். தொடர்ந்து மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் பிரதமராக சில மாத காலம் நீடித்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிக்கும் முயற்சிகளில் சரண்சிங் ஈடுபட்டார். பார்ப்பன அதிகாரவர்க்கம் அந்த முயற்சியை முறியடித்தது. 1980இல் மண்டல் பரிந்துரை அரசிடம் வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த இந்திரா, மண்டல் பரிந்துரையை கிடப்பில் போட்டார். 1990ஆம் ஆண்டு தான்...

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்’ இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. நூலின் விலை ரூ.25. பக்கங்கள் 40. ‘நாளை விடியும்’ இதழாசிரியரும் பெரியாரியலாளருமான திருச்சி அரசெழிலன், தனது  சொந்த செலவில் இந்த நூலை அச்சிட்டு கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ‘காந்தியைத் துளைத்த கோட்சேயின் குண்டுகள்’ எனும் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூலை இதேபோல் தனது சொந்த செலவில் அச்சிட்டு கழகத்துக்கு வழங்கினார். கழகத்தின் இயக்கப் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் அரசெழிலன் அவர்களுக்கு கழக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். – ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 31012019 இதழ்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டச் சென்ற 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மோடியின் பார்ப்பன இந்துத்துவா கொள்கையினால் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அவர் திடீரென்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் நடுத்தர ஏழை மக்களும் தங்களின் வங்கிச் சேமிப்புப் பணத்தை அன்றாட செலவுக்காக எடுப்பதற்கு பல மணி நேரம் கியூவில் காத்திருந்தனர். அவரது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரும் குற்றம் ச hட்டினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கருப்பு பணம் முடங்கிவிடும் என்ற மோடியின் அறிவிப்பு செல்லாத அறிவிப்பாகி 95 சதவீத கருப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக வங்கிக்கே திருப்பி வந்து விட்டது. நுழைவுத் தேர்வு கிராமப்புற மக்களைப் பாதிக்கும் என்று தமிழகம் நுழைவுத் தேர்வையே இரத்து...

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார் !

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார் !

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார் ! விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்’ இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. நூலின் விலை ரூ.25. பக்கங்கள் 40. ‘நாளை விடியும்’ இதழாசிரியரும் பெரியாரியலாளருமான திருச்சி அரசெழிலன், தனது சொந்த செலவில் இந்த நூலை அச்சிட்டு கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ‘காந்தியைத் துளைத்த கோட்சேயின் குண்டுகள்’ எனும் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூலை இதேபோல் தனது சொந்த செலவில் அச்சிட்டு கழகத்துக்கு வழங்கினார். கழகத்தின் இயக்கப் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் அரசெழிலன் அவர்களுக்கு கழக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். – ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம். 31.01.2019.

ஏப்.7இல் மதுரையில் நீலச் சட்டைப் பேரணி

ஏப்.7இல் மதுரையில் நீலச் சட்டைப் பேரணி

ஏப்ரல் 7ஆம் தேதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தவும்; முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10ரூ இட ஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், இடஒதுக்கீட்டினை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் பாஜக அரசினைக் கண்டித்து, இந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்துள்ளது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஜனவரி 1 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது அறிவிக்கப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் பச்சைமலை, தமிழர்...

கரு. அண்ணாமலை வளர்ச்சி நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்

கரு. அண்ணாமலை வளர்ச்சி நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கரு. அண்ணாமலையின் ‘அன்பு பழச்சாறு மற்றும் தேனீர் அகத்’தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஜனவரி 11 அன்று காலை திறந்து வைத்தார். கழக வளர்ச்சிக்கு ரூ.5000/- கரு.அண்ணாமலை வழங்கினார். பெரியார் முழக்கம் 24012019 இதழ்

விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19-12-2018 (தி.பி-2049- புதன்) அன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர் செல்வம், அய்யனார், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். 2019ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் குறித்தும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ மாத இதழ் உறுப்பினர் சேர்க்கைக் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’திற்கான 97  உறுப்பினர்களுக்கான தொகை 9400  ரூபாயை  கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கப்பட்டது. கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார். விழுப்புரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக  தலைவர் – க.மதியழகன், செயலாளர் – க.இராமர், துணைச் செயலாளர்-மு.நாகராசன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப் பாளர்- அ.பெரியார் தாசன், அறிவியல் மன்ற அமைப்பாளர்- வீ.முருகன், மாவட்ட அமைப்பாளர்- சி- சாமிதுரை, ரிசிவந்திய ஒன்றிய அமைப்பாளர்- இரா.கார்மேகம்,...

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

சென்னை : திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டாக தமிழர் திருநாள்…பொங்கல் விழா 13.01.2019 இராயப்பேட்டை வி.எம்.தெருவில் (பெரியார் சிலை அருகே) மாலை 6 மணிக்கு புதுவை அதிர்வு கலைக்குழுவினரின் பறை யிசை முழக்கத்தோடு தொடங்கியது. கிராமிய கலை பண்பாட்டு பாடல்களோடு பகுதி பொதுமக்களின் ஆரவாரத் தோடும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, பேராசிரியர் சரசுவதி, மக்கள் நீதி மய்யம் சௌரிராஜன், மணிமேகலை மற்றும் திருநங்கைக்காண உரிமை மீட்பு இயக்கத்தைச் சார்ந்த அனுஸ்ரீ, ஆர்.என்.துரை (திமுக, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்வினை இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். தொடர்ச்சியாக சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறுவர், சிறுமியர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக அருண் ரிதம்ஸின் சென்னை கானா, திரைப்படப் பாடல்களோடு மகிழ்ச்சியோடு விழா நிறைவுற்றது. திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (5) 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (5) 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. பகுதி 4 1938ஆம் ஆண்டு  அன்றைய சென்னை மாகாணத் தில் இராஜாஜி எனும் பார்ப்பனர் இராஜகோபாலாச் சாரியாரை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தின்  அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் அது. முதலில் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தையே ஏற்க மாட்டோம் என்று ‘வீரம்’ பேசிய அன்றைய காங்கிரஸ் கட்சி, பிறகு பிரிட்டிஷ் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி  அமைக்க முன் வந்தது. பெரியாரின் ‘குடிஅரசு’ இதை ‘சரணாகதி மந்திரி சபை’ என்று விமர்சித்தது. இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அப்போது ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்போது இராஜகோபாலாச்சாரி வேறு எந்த மாநில காங்கிரஸ் அமைச்சரவையும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் இந்தித் திணிப்பு....

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூகநீதியை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் உயர்சாதிக்கான 10ரூ இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 11.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத் தலைவர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) வழக்கறிஞர் சேகர் பி.யு.சி.எல்., இராமசந்திரன் (திவிக), இளவேனில் (தமிழ் புலிகள்), சண்முக சுந்தரம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), எம்.எஸ். வேல்முருகன் (சி.பி.அய். எம்.எல்.), வழக்கறிஞர் சக்திவேல் (சி.பி.அய்.), சபரி தமிழ்நாடு மாணவர் கழகம், ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தண்டபாணி சமூக நீதி கட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்திற்கு திவிக தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், பாலமுருகன் (பி.யு.சி.எல்.), சிங்கை பிரபாகரன்...

அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்ஜாதிப் பட்டியல்

அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்ஜாதிப் பட்டியல்

அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்ஜாதிப் பட்டியல்: ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் : 49. பார்ப்பனர்கள் – 39 (திறந்த போட்டி) : எஸ்.சி., எஸ்.டி. – 4; பிற்படுத்தப்பட்டோர் – 6. துணை ஜனாதிபதி செயலகத்தின் 7 பதவிகள். இங்கே 7  பார்ப்பனர்கள். எஸ்.சி., எஸ்.டி., – 0; பிற்படுத்தப்பட்டோர் – 0. கேபினட் செயலாளர் பதவிகள் : 20. பார்ப்பனர்கள் – 17. எஸ்.சி., எஸ்.டி., – 1; பிற்படுத்தப்பட்டோர் – 2. பிரதமரின் அலுவலகத்தில் மொத்த பதவிகள் : 35. பார்ப்பனர்கள் – 31. எஸ்.சி., எஸ்.டி., – 2; பிற்படுத்தப்பட்டோர் – 2. விவசாய திணைக் களத்தின் மொத்த இடுகைகள் : 274. பார்ப்பனர்கள் – 259. எஸ்.சி., எஸ்.டி., – 45; பிற்படுத்தப்பட்டோர் – 10. பாதுகாப்பு அமைச்சகம் மொத்த இடுகைகள் : 1379. பார்ப்பனர்கள் – 1300. எஸ்.சி., எஸ்.டி.,...

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள்  கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 28 நடைபாதைக் கோயில்கள் மற்றும் வழிபாட்டு இடங்களின் பட்டியலை மயிலாடுதுறை வருவாய்த் துறை அதிகாரியிடம் ஜன.21 அன்று கழகத் தோழர்கள் நேரில் பட்டியலாக  அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிவுத் அஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது. கழகப் பொறுப்பாளர்கள் இளையராஜா, மகேஷ், செந்தில், மகாலிங்கம், விஜயராகவன், தில்லை நாதன், ராகவன் ஆகியோர் மனு  அளிக்க சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 24012019 இதழ்

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி  தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

14-1-2019 இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்து பேரறிவாளன் முதலான எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரியும் ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தியும் விண்ணப்பத்தைக் கையளித்தனர். முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார். முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: திரு. இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (4) கருஞ்சட்டைப் படைக்கு விதித்தத் தடை

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (4) கருஞ்சட்டைப் படைக்கு விதித்தத் தடை

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 3 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் 17ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் இது நீதிக்கட்சியின் 17ஆவது மாநாடாக நடைபெற்றது. நீதிக் கட்சியின் ‘தராசுக் கொடியே’ மாநாட்டிலும் ஏற்றப்பட்டது. ‘தராசுக் கொடி’ சமநீதி தத்துவத்தைக் கொண் டிருந்தாலும் புரட்சிக்கான அடையாளமாக இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு, அதற்குப் பிறகு கொடி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. அடுத்த நாள் செப். 20ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அண்ணா மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜனவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜனவரி 2019 இதழ்

தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvom@gmail.com பெரியார் முழக்கம் 17012019 இதழ்

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

சேலம் மாவட்டம் கொளத்தூர் தார்காடு கிளை கழகத் தோழர் இரா.விஜயகுமார் (இராணுவ ஓய்வு) தாயார் ஆர்.என்.காசிமதி (71) உடல் நலக்குறைவுக் காரணமாக 09.01.2019 அன்று காலை 10.00 மணிக்கு அவர்களது இல்லத்தில் முடிவெய்தினார்.  கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மறைந்த காசிமதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியாரியல் சிந்தனையாளரும் காசிமதி கணவருமான இராமசாமி (ஆசிரியர் ஓய்வு), மகன்கள் விஜயகுமார், சசிகுமார் ஆகியோர் காசிமதியின் உடலை எந்தவித சடங்குகளும் இன்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக  கையளித்தனர். தோழர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு தனது தாயாரின் உடல் கொடைக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தோழர்களின் இச்செயல்களை  நிகழ்வுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். பெரியார் முழக்கம் 17012019 இதழ்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

08.01.2019 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.  முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகப் பெரியார் சிந்தனைப் பலகை தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பை மதன்குமார் கூறினார். அறிவழகன் வரவேற்புரையாற்றினார். துவக்க உரையாக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமிதிராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார். தமிழ்நாடு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பாரி சிவக்குமார், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், பழனிவேல் (ஆசிரியர்), முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் கோபால் இராவணன், நட பாபு அம்பேத்கர், கண்மணி, நட பாரதிதாசன் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. அடுத்த கட்ட...

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

4.01.2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தாக்கல் செய்திருந்த ரிட் மனு எண்.27748/2005 விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சிவசுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் பாதைகள், நீர்நிலைகள், புறம் போக்கு நிலங்கள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் கட்டப் பட்டுள்ள சர்ச்சுகள், மசூதிகள், கோயில்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து அது தொடர்பாக தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை 21/01/19 தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அளிக்குமாறு தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழகத் தோழர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத வழிபாட்டுத் தலங்கள் பற்றிய புள்ளி விவரங்களை அளித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு...

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு:  சில கேள்விகள்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு: சில கேள்விகள்

பொருளாதார அடிப்படையில்  இடஒதுக்கீடு செய்யக் கொண்டு வரப்பட்ட சட்டம், சட்டத்தின் பார்வையில் நிலைக்குமா? இதை அமுல்படுத்துவது எப்படி? இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதனால் முன்னேறியப் பட்டியலில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சமமாகக் கூடுதல் இடங்களை ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து பெற்று வந்தனர். அவர்கள் தான் இடஒதுக்கீட்டை உயர்த்துவதில் தவறு இல்லை என்று இப்போது வாதிடு கிறார்கள். கல்வி வேலை வாய்ப்புகளில் பெரும் பான்மை ஆதிக்கத்தில் பாதிக்கப் படும் சிறுபான்மை மக்களுக்காகவே இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிப் பாது காப்புத் திட்டம் இப்போது தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. கல்வி வேலை வாய்ப்பு களில் ‘போதிய பிரதிநிதித்துவம்’ இல்லாத சமூகத்துக்குத் தான் (ஹனநளூரயவந சுநயீசநளநவேயவiடிn) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. முன்னேறிய சமூக ஏழைகளில் போதுமான...

பொருளாதார அடிப்படை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

பொருளாதார அடிப்படை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற அமைச்சரவையின் முடிவு வெளி வந்தவுடன், கேரள முதல்வர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பினராய் விஜயன் அதை ஆதரித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, இந்த அறிவிப்பு தேர்தல் மாய்மாலம் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் இதேபோல் ‘மாய்மாலம்’ என்று கூறினாலும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு தேவை இருக்கிறது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. மண்டல் குழு பரிந்துரை அமுல்படுத்திய காலத்திலிருந்தே இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வருவதாகவும் தலைமைக் குழு அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயன், இந்த இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் போது கேரளாவின் மற்றொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடுமையாக எதிர்த்துள்ளார். “இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத் திட்டமல்ல; பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

மண்டல் பரிந்துரை அமுலாக்க 10 ஆண்டுகள் மூன்றே நாட்களில் வந்துவிட்டது ‘பொருளாதார’ இடஒதுக்கீடு

மண்டல் பரிந்துரை அமுலாக்க 10 ஆண்டுகள் மூன்றே நாட்களில் வந்துவிட்டது ‘பொருளாதார’ இடஒதுக்கீடு

பொதுப் போட்டியில் கல்வி மற்றும் வேலை வாயப்புகளில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அதற்கான சட்டத்திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இடஒதுக்கீடு சமூக கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்குக் கொண்டு வரப்பட்டது; பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. நாடாளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு இது குறித்து விவாதங்கள் நடந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர், ‘பொருளாதாரம்’ என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளினர். வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமு லாக்கும் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. பிரதமராக இருந்த நரசிம்மராவ், திறந்த போட்டிக்கான இடங்களில்முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத ஒதுக்கீடு ஆணையை பிறப்பித்தார். உச்சநீதிமன்றம் நரசிம்மராவ் ஆணையை சட்டத்துக்கு எதிரானது என்று கூறி விட்டது. குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி 2016இல் முன்னேறிய ஜாதியினருக்கு 10...

தமிழர் திருநாள் வாழ்த்து!

தமிழர் திருநாள் வாழ்த்து!

தோழர்களுக்கும், வாசகர்களுக்கும், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பெரியார் முழக்கம் 10012019 இதழ்

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு சென்னையில் டிசம்பர் 14, 15 தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் 50க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். ‘சென்னை பிரஸ் கிளப்’ அரங்கில் நடந்த இந்தப் பயிற்சி வகுப்பில் டிசம்பர் 14ஆம் தேதி பகல் 11 மணியிலிருந்து ஒரு மணி வரை ‘திராவிடம்’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். திராவிடம் தோன்றிய வரலாறு, அதன் உள்ளடக்கம், வரலாற்றுத் தொடர்ச்சி, திராவிடத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் அடங்கியுள்ள குழப்பங்களை தரவுகளோடு விளக்கினார். உரையைத் தொடர்ந்து பயிற்சி யாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக கலந்தாய்வுக் கூட்டம் 30.12.18 மாலை 4 மணிக்கு,  சென்னிமலை செல்வராசு இல்லத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் மடத்துக் குளம் மோகன்,  சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டக் கழகம் சார்பில் ஒன்றிய கிளைக் கழகக் பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாற்றம் செய்யப்பட்டது. எதிர்வரும் பொங்கல் விழாவை தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்தாய்வில் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10012019 இதழ்

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்தது

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்தது

மோடி ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.மத்தியில், மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் குறித்த விவரங்களை நேரடி வரிவிதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமானம் இருப்பதாக கூறி வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது; கடந்த 2014-15ஆம் நிதி யாண்டில் 88 ஆயிரத்து 649 பேர் 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டு வதாக கணக்கு தாக்கல் செய்திருந்தனர்; ஆனால், அவர்கள் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரத்து 139 பேர்களாக அதிகரித்துள்ளனர்; இது 68 சதவிகித உயர்வாகும் என்று நேரடி வரி விதிப்பு வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்....

கழக ஏட்டுக்கு மாதந்தோறும்  கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

கழக ஏட்டுக்கு மாதந்தோறும் கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

திருச்செங்கோட்டில் தம்பி தேனீர் விடுதி நடத்தும் கழகத் தோழர் சோமசுந்தரம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’இதழுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார். தோழரின் பங்களிப்பைப் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. – ஆசிரியர் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் மாவட்டம் தோறும் கழகத் தோழர்களை சந்தித்து உரையாடி வருகிறார்கள். சில பகுதிகளில் மாவட்டக் கழக அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. கழக ஏடுகளுக்கு ‘சந்தா’க்களை தோழர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல மாவட்ட கலந்துரையாடல் செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி தலைநகர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட பொறுப்பாளர் களை கழகத் தலைவர் அ றிவித்தார். மாவட்டத் தலைவர் செ.கு. தெள்ளமிழ்து; மாவட்ட செயலாளர் மு. தினேசுகுமார்; மாவட்ட அமைப்பாளர் கா. இரவிபாரதி; மாவட்ட துணைத் தலைவர் சி. சிவாஜி; மாவட்ட துணை செயலாளர் சு. செங்குட்டுவன்; மாவட்ட இளைஞரணி தலைவர் மூ. ராஜேஷ்; மாவட்ட இளைஞரணி செயலாளர் ஊமைத்துரை; மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந. இராமஜெயம்;...

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

மகாபாரத காலத்திலேயே சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறை வந்து விட்டது என்றால் பிறகு அது ஏன் நடைமுறையில் இல்லை? வெளி நாட்டுக்காரர்கள் இந்த அறிவியல் முறையை கண்டுபிடிக்கும் வரை, ‘இந்தப் புராண அறிவியல்’ எந்தப் புற்றுக்குள் பதுங்கிக் கிடந்தது? சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு-பெண்-ஆண் விந்துக்களை பரிசோதிக்கும் சோதனைச் சாலைகள் இருந்தனவா? ‘ஸ்டெம் செல்’ அறிவியல் புராண காலத்திலேயே இருந்தால் அந்த ‘ஸ்டெம்செல்’ மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதா? அதற்கான மருத்துவர்கள் இருந்தார்களா? தசரதன் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அசுவமேத யாகம் நடத்தி ‘குதிரை’யுடன் தசரதன் மனைவி உறவு கொண்டு இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறதே? அப்போது ஏன் ‘சோதனைக் குழாய்’ முறை – இராமன் பிறப்புக்குப் பயன்படுத்தவில்லை? அலுமினியம் இரப்பர் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தான் விமானக் கண்டுபிடிப்பே வந்தது? இராவணன் போர் விமானங்களைப் பயன்படுத்தினான் என்றால் – இரப்பர், அலுமினியம் இல்லாமலே விமானம் வந்து விட்டதா? இராம – இராவண யுத்தம்...

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

மக்கள் மன்றம் சார்பில் காஞ்சி மாவட்டம் நெமிலியில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சமத்துவம்-சகோதரத்துவம் காண உறுதி ஏற்போம் என்கிற முழக்கத்தோடு நிகழ்வு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பு, இராமாயண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்புகளையும் ஜாதி – ஜாதியமைப்பு – ஜாதி ஆணவப் படுகொலை குறித்தும் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிறைவுரையாற்றினார். மக்கள் மன்றத்தில் பத்தாண்டுகளாக இணைந்துள்ள தோழர் உமாவின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது அம்பேத்கர் – பெரியார் சிலைகளுக்கு பறை முழக்கத்துடன் மாலைகள் அணிவிக்கப் பட்டன. பெரியார் முழக்கம் 10012019 இதழ்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (3) ‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (3) ‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 2 இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 17.7.1955 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 1955 ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடி எரிப்புப் போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தது. இது குறித்து 20.7.1955 அன்று வெளி வந்த ‘விடுதலை’ நாளேட்டில் பெரியார் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அப்போது பெரியார் இவ்வாறு எழுதினார்: “குமரன் காத்த கொடியை கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கிறார்கள். நம் நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அத்தனையும் பொய்யாகிவிட்டது. குமரன்...

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் அய்யம் புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த  பெரியார் பெரும் தொண்டர் சி. சுப்பிரமணி அய்யம்புதூர் பகுதியில் கழகத்தின் கொடிக் கம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண் விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர்  சூரியக்குமார் முன்னிலை வகித்தார்.  இரத்தினசாமி (அமைப்புச் செயலாளா) மற்றும் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர் இணையர்களை வாழ்த்தி வாழ்த்துரை...

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...

தமிழ் ஊடகங்களில் முதன்முறையாகப் பெறுகிறார்  ‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது

தமிழ் ஊடகங்களில் முதன்முறையாகப் பெறுகிறார் ‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது

  நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக் காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப் பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது. பிராந்திய மொழியில், ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை, விரிவாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பதிவு செய்யும், அச்சு மற்றும், ‘டிவி’ ஊடகவியலாளருக்கு, இவ்விருது வழங்கப்படும். அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய, ஊடகவியலாளர் விருதுக்கு, ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ முதன்மை ஆசிரியர் மு. குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2017இல், ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் சந்தித்த துயரங்களை, தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக,...

அரசு நிதி உதவியுடன் பஞ்சாப் மாநிலம்  ஜலந்தரில்  அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’

அரசு நிதி உதவியுடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா நிகழ்ச்சி’ ஒன்றை அரங்கேற்றி யுள்ளனர். பிரதமர் மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார். தமிழகத்தில் ஆழியாறில் செயல்படும் உலக சமுதாய சேவை மய்யத்தில் வேலை செய்யும் கண்ணன் ஜெகதாள கிருஷ்ணன் என்ற 42 வயது பேர் வழி அய்ன்ஸ்டின், நியுட்டன் கோட்பாடுகள் தவறு; புவி ஈர்ப்பு விசை என்பதும் தவறு என்று பேசியிருக்கிறார். தன்னை ஒரு இயற்பியல் விஞ்ஞானி என்று கூறிக் கொண்ட அவர் “20ஆம் நூற்hறண்டு அய்ன்ஸ்டின் நூற்றாண்டு என்று கூறுகிறார்கள்; அடுத்த சில ஆண்டுகளில் அது என்னுடைய நூற்றாண்டாகப் பெயர் மாறப் போகிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டார். இவர் இயற்பியல் படித்தவரே அல்ல என்றும் மின்பொருள் துறை படித்த பொறியியல் பட்டதாரி தான் (எலக்டிரிக்கல் என்ஜினியர்) என்றும், ‘இந்து’ ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு வேத...

பெங்களுருவில் விஷ்ணு சிலை அமைக்க தமிழகத்தின் பாறையை வெட்டுவதா? பி.யு.சி.எல். அமைப்பு கண்டனம்

பெங்களுருவில் விஷ்ணு சிலை அமைக்க தமிழகத்தின் பாறையை வெட்டுவதா? பி.யு.சி.எல். அமைப்பு கண்டனம்

பெங்களுருவில் விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைக்கத்  தமிழக அரசுக்குச் சொந்தமான பாறையைக் கொண்டு செல்லத் தடை  விதிக்கக் கோரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகிலுள்ள கொரக் கோட்டை கிராமத்திலிருந்து மிகப் பெரும் குன்றுப்பாறையை வெட்டி யெடுத்து, கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், பெங்களூருவின் ஈஜிபுராவிலுள்ள கோதண்ட இராமசுவாமி கோவிலில், ஏறத்தாழ 300 டன் எடை கொண்ட விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைப் பதற்கு ஒரு அறக்கட்டளைக்கு  மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தது கடும் கண்டனத்திற்கு உரியது. இவ்வளவு பிரமாண்டமான சிலையை அமைப்பதற்குத் தேவையான ஒற்றைக் கல் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை எனவும், இச்சிலையை நிறுவத் திட்டமிட்ட பெங்களூருவிலுள்ள கோதண்ட இராமசாமி கோவில் அறக்கட்டளை,  அரசினை அணுகியது எனவும் இவர்களின் வேண்டுகோளை ஏற்று தொலைதூரச் செயற்கைக் கோளின் உதவியால், தேவையான கல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை...

திருச்சிப் பேரணி : மலேசியத் தமிழர்களிடம் எழுச்சி

திருச்சிப் பேரணி : மலேசியத் தமிழர்களிடம் எழுச்சி

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணி குறித்து சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் அரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு தன்மான இயக்கத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி தலைமை தாங்கி திருச்சிப் பேரணி மிகப் பெருந் தாக்கத்தை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். மலேசிய தி.க. தேசியத் தலைவர் எப்.காந்தராசு, கெ.வாசு, த.பரமசிவம், நா.பாரி, இரா.பெரியசாமி, இவர்களோடு மாந்த நேய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ச. அன்பரசன், பெரியார் பாசறை துணைத் தலைவர் ம. இலட்சுமணன் ஆகியோர் திருச்சியில் கருஞ்சட்டைத் தோழர்களை வாழ்த்தி – வரவேற்றுப் பேசினார்கள். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கருஞ்சட்டை அணிந்து வந்தனர். பகுத்தறிவு கவிஞர் தி.ப.செழியன்,  பெரியார் குறித்து சிறப்பான கவிதை வாசித்து அரங்கம் அதிர கரவொலி பெற்றார். இறுதியாக தலைமைச் செயலாளர் சி.மு.விந்தைக்குமரன் நிறைவுரையாற்றினார். இயக்கத் துணைப் பொதுச் செய லாளர் த.சி.அழகன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்....