கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்தது
மோடி ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.மத்தியில், மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் குறித்த விவரங்களை நேரடி வரிவிதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமானம் இருப்பதாக கூறி வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது; கடந்த 2014-15ஆம் நிதி யாண்டில் 88 ஆயிரத்து 649 பேர் 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டு வதாக கணக்கு தாக்கல் செய்திருந்தனர்; ஆனால், அவர்கள் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரத்து 139 பேர்களாக அதிகரித்துள்ளனர்; இது 68 சதவிகித உயர்வாகும் என்று நேரடி வரி விதிப்பு வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் 10012019 இதழ்