திருச்சிப் பேரணி : மலேசியத் தமிழர்களிடம் எழுச்சி
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணி குறித்து சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் அரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு தன்மான இயக்கத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி தலைமை தாங்கி திருச்சிப் பேரணி மிகப் பெருந் தாக்கத்தை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மலேசிய தி.க. தேசியத் தலைவர் எப்.காந்தராசு, கெ.வாசு, த.பரமசிவம், நா.பாரி, இரா.பெரியசாமி, இவர்களோடு மாந்த நேய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ச. அன்பரசன், பெரியார் பாசறை துணைத் தலைவர் ம. இலட்சுமணன் ஆகியோர் திருச்சியில் கருஞ்சட்டைத் தோழர்களை வாழ்த்தி – வரவேற்றுப் பேசினார்கள்.
50க்கும் மேற்பட்ட தோழர்கள் கருஞ்சட்டை அணிந்து வந்தனர். பகுத்தறிவு கவிஞர் தி.ப.செழியன், பெரியார் குறித்து சிறப்பான கவிதை வாசித்து அரங்கம் அதிர கரவொலி பெற்றார். இறுதியாக தலைமைச் செயலாளர் சி.மு.விந்தைக்குமரன் நிறைவுரையாற்றினார். இயக்கத் துணைப் பொதுச் செய லாளர் த.சி.அழகன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். தேநீர் நிகழ்வோடு பெரியார் பரம்பரை இங்கே உதயமாகட்டும் என்ற முழக்கத்தோடு கூட்டம் முடிவுற்றது.
பெரியார் முழக்கம் 03012019 இதழ்