பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு: சில கேள்விகள்
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யக் கொண்டு வரப்பட்ட சட்டம், சட்டத்தின் பார்வையில் நிலைக்குமா? இதை அமுல்படுத்துவது எப்படி?
- இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதனால் முன்னேறியப் பட்டியலில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சமமாகக் கூடுதல் இடங்களை ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து பெற்று வந்தனர். அவர்கள் தான் இடஒதுக்கீட்டை உயர்த்துவதில் தவறு இல்லை என்று இப்போது வாதிடு கிறார்கள்.
- கல்வி வேலை வாய்ப்புகளில் பெரும் பான்மை ஆதிக்கத்தில் பாதிக்கப் படும் சிறுபான்மை மக்களுக்காகவே இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிப் பாது காப்புத் திட்டம் இப்போது தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. கல்வி வேலை வாய்ப்பு களில் ‘போதிய பிரதிநிதித்துவம்’ இல்லாத சமூகத்துக்குத் தான் (ஹனநளூரயவந சுநயீசநளநவேயவiடிn) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. முன்னேறிய சமூக ஏழைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்கு அரசிடம் ஏதேனும் தரவுகள் இருக்கிறதா? இது குறித்து ஆராய குழுவோ, ஆணை யமோ நியமித்ததா? எதுவுமே இல்லாதபோது ஜாட்டுகளும் பார்ப்பனர்களும் கோரிக்கை வைத்தார்கள் என்பதற்காகவே ஒரு சட்டத்தைக் கொண்டு வர முடியுமா?
- பொருளாதார வரம்பு நிலையானது அல்ல; அது மாதத்துக்கு மாதம் மாறக் கூடும். ஆனால் ஜாதியமைப்பில் ஒரு சமூகத்தின் நிலை என்பது மாறாதது. அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு பெற்றால்கூட சில நேரங் களில் 8 இலட்சம் வருமான வரம்பு உயர வாய்ப்பு உள்ளது. ‘பிற்படுத்தப் பட்டோர்’ என்பவர்கள் வருமான வரம்பு மாறும் போதெல்லாம் ‘பிற்படுத்தப்பட்டோராகவும்’ ‘முன் னேறிய ஜாதியினராகவும்’ மாறிக் கொண்டே இருக்க முடியுமா?
- நாளொன்றுக்கு ரூ.32க்குக் கீழே வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வருவார்கள் என்று மத்திய அரசு நிர்ணயித் திருக்கிறது. இப்போது ஆண்டுக்கு ரூ.8 இலட்சம் வருமானத்துக்கு உட்பட்டவர்கள் ‘ஏழை’கள் என்றால் வறுமைக் கோட்டின் அளவு ரூ.2100 ஆக உயர்ந்து விடுகிறது. ஆக வறுமைக் கோட்டின் அளவை இந்த திட்டத் தின் கீழ் நடுவண் ஆட்சி மாற்றி அமைத்து விட்டதா? – என்று கேட்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிட் ஒபிரய்ன்.
பெரியார் முழக்கம் 17012019 இதழ்