கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்
4.01.2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தாக்கல் செய்திருந்த ரிட் மனு எண்.27748/2005 விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சிவசுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் பாதைகள், நீர்நிலைகள், புறம் போக்கு நிலங்கள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் கட்டப் பட்டுள்ள சர்ச்சுகள், மசூதிகள், கோயில்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து அது தொடர்பாக தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை 21/01/19 தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அளிக்குமாறு தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழகத் தோழர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத வழிபாட்டுத் தலங்கள் பற்றிய புள்ளி விவரங்களை அளித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டுகிறோம். தங்கள் பகுதியில் உள்ள சட்டவிரோத கோயில்களின் பட்டியல்களையும் அதிகாரிகளிடம் வழங்கலாம். கழகத் தோழர்கள் இதில் முனைப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 17012019 இதழ்