சலூன் கடையில் முடிவெட்ட மறுப்பு: கழகத்தின் முயற்சியால் வெற்றி!
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி ஒன்றிய பகுதிக்குட்பட்ட புதுரோடு பகுதியை சார்ந்தவர் தோழர் பாலாஜி. இவர் நமது கழகத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் தனது ஊருக்கு அருகிலுள்ள புங்கம்பள்ளி பகுதியிலுள்ள சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றார். சலூன் கடைக்குச் சொந்தக்காரர், ‘இந்த கடையில் உனக்கு (தாழ்த்தப்பட்டோருக்கு) முடிவெட்ட மாட்டேன். நீ வேறு கடைக்கு செல்’ என்றார். அந்தப் பகுதியில் இருந்த மற்ற இரண்டு கடைக் காரர்களும் ‘நாங்களும் வெட்ட மாட்டோம்’ என்று மறுத்து விட்டனர். வீடு திரும்பிய தோழர் அந்தப் பகுதியை சார்ந்த மற்ற தோழர் களிடத்தில் இதை கூறினார். உடனே, அங்கு இருந்த தோழர்கள், புதுரோடு இராஜேந்திரன் தலைமையில் கடையினை முற்றுகையிட சென்றார்கள். அவர்கள் அங்கு செல்லும் முன்பாக இராசேந்திரன் அந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளரை கைபேசியில் அழைத்து, கடையில் நடந்த சம்பவத்தைக் கூறி நீங்கள் நடவடிக்கை...
