கழக ஏட்டுக்கு 100 சந்தாக்கள்: தென் சென்னை மாவட்டக் கழகம் வழங்கியது

30.4.2012 அன்று காலை சென்னையில் மறைந்த கழகத் தோழர் பத்ரி நாராயணன் 8 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும், குடும்பத்தினரும் வீரவணக்கம் செலுத்தினர். அன்று மாலை இராயப்பேட்டை வி.எம். தெருவில் தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் மற்றும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  நிகழ்வின் தொடக்கத்தில் புதுச்சேரி தலித் சுப்பையாவின் விடுதலைக் குரல் கலைக் குழுவினர் சாதி ஒழிப்பு மக்கள் விடுதலை, ஈழ விடுதலை இசை நிகழ்ச்சி நிகழ்த்தினர். தோழர் பா. செல்வக்குமார் தலைமை யில் சு.பிரகாசு முன்னிலை வகிக்க, கழகப் பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றி னர். இறுதியில் தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமா பதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனி டம் 100 பெரியார் முழக்க சந்தாக் களுக்கான பட்டி யலை யும், ரூ.15000 பணத்தை யும் வழங்கினார்.

 

கூட்டத்தின் வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த எழுச்சியான பொதுக் கூட்டத்திற்கு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராது உழைத்த தோழர்கள்:

தென் சென்னை மாவட்ட பொருளாளர் கரு. அண்ணாமலை, எம்.ஜி.ஆர். நகர் பகுதி பொறுப் பாளர்கள் சு. துரைராசு, அ.குமரேசன், செ.செயசீலன், வி.பொற்கோவன், வழக்கறிஞர் ப.அமர்நாத், சிவ. வல்லரசு, ஆட்டோ சங்கர், க.சரவணன், ம.மூவேந்தன், மு.வெங்கடேசன், மதிவாணன், மாசிலா விநாயகமூர்த்தி, தஞ்சை தமிழன், மணி மொழியான், வ.தாமரைக்கண்ணன், சிவ.மனோகரன், தி.செல்வமணி, டயில்ஸ் குமார் உள்ளிட்ட தோழர்கள்.

நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட தோடு அறிவிப்பு பதாகைகள் ஏராளமாக நிறுவப்பட்டிருந்தன. நாளேடுகளிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. கழகத் தோழர் செல்லையா முத்துசாமி, இணையதளம் வழியாக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தார்.

பெரியார் முழக்கம் 24052012 இதழ்

You may also like...