குடிஅரசு வாசகர் வட்டத்தில் கொளத்தூர் மணி ஆய்வுரை

குடிஅரசு வாசகர் வட்டம் கடந்த 20.4.2012 அன்று வடசென்னை பெரம்பூரில் இராஜலட்சுமி அரங்கத் தில்  திராவிடர் இயக்க வரலாறு ஆய்வு, தொடர் சொற்பொழிவு மாதந்தோறும் சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் குடிஅரசு வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில், திராவிடர்-தமிழர் என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆய்வுரை நிகழ்த்தினார். திராவிடர்-தமிழர் இயக்கத்தினர்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் தமிழ் தேசியவாதி களுக்கு வலிமையான மறுப்புரையாக அமைந்த இந்த உரை இணையத்தின் வழியாக நேரலை செய்யப் பட்டது.

அரங்கத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றது போலவே உலகமெங்கும் வாழும் தமிழர்களும் நிகழ்ச்சியை நேரிடையாகக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.  இக்கூட்டத்தில் வழக்கறிஞர் சங்கர் தலைமையேற்க, வழக்கறிஞர்; பா.அமர்நாத் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் கு.குமாரதேவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குடிஅரசு வாசகர் வட்டத்தின் சார்பாக கழக தலைவருக்கு கேடயமும் பொன்னாடையும் வழங்கப்பட்டது. திலீபன் நன்றியுரையாற்றினார். நிகழ்வை இணைய தளம் வழியாக நேரலை செய்ய உதவியவர் செல்லையா முத்துசாமி.

பெரியார் முழக்கம் 31052012 இதழ்

You may also like...