உடுமலையில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா
திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை திருப்பூரில் மிகச் சிறப்பாக கொண்டாடும் விதத்தில் மாவட்டத்தில் 100 இடங்களில் பிரச்சார நிகழ்ச்சியை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, திராவிடர் இயக்க நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக் கூட்டம் 18.5.2012 வெள்ளி மாலை 7 மணிக்கு உடுமலைப் பேட்டைவெங்கட கிருஷ்ணா ரோடில் நடைபெற்றது. உடுமலைப் பேட்டை நகர, ஒன்றிய கழகம், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.
தொடக்க விழாப் பொதுக் கூட்டத்திற்கு உடுமலை நகர கழகத் தலைவர் யாழ். நடராசன் தலைமையேற்றார். உடுமலை நகரப் பொருளாளர் மு.வேல்முருகன், க.இரமேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பகுத்தறிவாளர் பேரவைப் பொறுப்பாளர் பல்லடம் திருமூர்த்தி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட கழகச் செயலாளர் கா.கருமலையப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பனிர் இரா. மனோகரன், தலைமைக் கழகப் பேச்சாளர் திண்டுக்கல் துரை. சம்பத், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன் ஆகி யோர் உரையாற்றினர். சிறப்புரையாக ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்தி லதிபன் இரண்டு மணி நேரம் திராவிடர் இயக்கத்தின் தோற்றம், தலைவர்களின் தியாகம், நீதிக் கட்சியின் சாதனைகள் என நீண்ட வரலாற்றை ஆய்வுச் சொற்பொழிவாக நிகழ்த்தினார். இறுதியில் உடுமலை ஒன்றியச் செயலாளர் கோ.விசுவநாதன் நன்றியுரை கூறினார்.
பெரியார் முழக்கம் 31052012 இதழ்