Category: பெரியார் முழக்கம்

பெரியார் பெருந்தொண்டர்  சோமசுந்தரம் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் (பொள்ளாச்சி) 8.9.2017 முடிவெய்தினார். இவர் நீண்ட காலம் பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் இயக்கத்தில் பணியாற்றியவர். பொள்ளாச்சி தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சல் அலுவலராகவும் அஞ்சல் பணியாளர் சங்கத்தில் பொருளாளராகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் வாசகராகவும் ஆதரவாளராகவும் இருந்தவர். தோழர் சோமசுந்தரம், அஞ்சல் துறையில் அவருடைய பணிகாலத்தில் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியாருக்கு ஒரு பாராட்டு விழாவும் பெரியாரின் உருவப்பட திறப்பு விழாவும் இவருடைய பெரு முயற்சியால் தந்தி அலுவலகத்தில் நடந்தது. நெருக்கடி நிலை பிரகடனத்தின்போதும் அது அமுலில் இருந்த காலத்திலும் அறிஞர் அண்ணாவின் பாணியில் உடை அணிந்து கொள்வதிலும், ‘விடுதலை’ நாளிதழை அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது அஞ்சாமையை காட்டியவர். வலுவான திராவிட இயக்கப் பற்றுக் கொண்டவர். பெரியார் முழக்கம் 28092017 இதழ்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேச்சு நீட் ஆதரவாளரின் புரட்டு வாதங்கள்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக செப்.13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் கா. ரசினிகாந்த் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பிற்பகல் நிகழ்வில் பங்கேற்று பேசினார். அவரது உரையிலிருந்து: “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண், தனது 37ஆவது வயதில் உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல் தனக்கு மருத்துவ கல்லூரியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று வழக்கு தொடர்ந்தார். அரசியல் சட்ட நிர்ணய வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே வழக்கறிஞராக நின்று வாதிட்டபோது, “சென்னை மாகாண மக்கள், புதிய சகாப்தத்திற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கக் கூடாது”...

துணைவர் தேவை

துணைவர் தேவை

எம்.எஸ்.சி., பி.எட்., படித்து ஆசிரியர் பணியில் உள்ள பெண்ணுக்குத் துணைவர் தேவை. வயது 32. மணமுறிவு பெற்றவர். 8 வயதுப் பெண் குழந்தைக்குத் தாய். சாதி, மதம் தடையில்லை. தொடர்புக்கு தோழர் சரவணன்: 98949 25226 பெரியார் முழக்கம் 21092017 இதழ்

நாகர்கோயிலில் கழகம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோயிலில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்கை அனிதா நினைவேந்தல்,  நீட் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், வடசேரி, அண்ணாச் சிலை அருகில் 05.09.2017 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொட்டும் மழையில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் நடைப்பெற்றது. நீதி அரசர் (மாவட்டத் தலைவர்-பெ.தொ.க) முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ் மதி கண்டன முழக்கங்கள் எழுப்பினார். தோழர்கள் விஷ்ணு, சூசையப்பா, மஞ்சுகுமார், சஜீவ், போஸ், ரசல் இராஜ், சுகுமார், குமரேசன், மணிகண்டன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

கழக சார்பில் போராளி இமானுவேல் சேகரின் நினைவு நாள் கூட்டம்

கழக சார்பில் போராளி இமானுவேல் சேகரின் நினைவு நாள் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி சார்பாக, ஜாதி ஒழிப்பு போராளி  இமானுவேல் சேகரின் நினைவு நாள் பெரியாரின் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் ஜா.உமாபதி தலைமையில் 11.09.2017 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தோழர்கள் நாத்திகன் மற்றும் கீர்த்தி ஜாதி ஒழிப்பு பாடல் களையும், பகுத்தறிவு பாடல்களையும் பாடினர். இமானுவேல் சேகரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், அவரது படுகொலை குறித்தும்  இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்),  வழக்கறிஞர் துரை அருண் (சென்னை உயர்நீதிமன்றம்) மற்றும் அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) சிறப்புரை யாற்றினார்கள். சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

மயிலைப் பகுதி கழகம் நடத்தும் கால்பந்து போட்டி – பெரியார் விழா

மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் சென்னையில் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் வழியாக 5 ஆண்டுகளாக கால்பந்து போட்டியையும் பெரியார் பிறந்த நாள் விழாவையும் இணைத்து நடத்தி வருகிறார்கள். இவ்வாண்டு செப்.26ஆம் தேதி பெரியார் பிறந்த நாள்விழா பொதுக் கூட்டம், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழாவை மந்தைவெளி இரயில் நிலையம் அருகே செயின்ட் மேரீஸ் பாலம் பகுதியில் தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கழகத் தலைவர், பொதுச் செயலாளரோடு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் வீதி நாடகம், பறையிசை நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. பெரியார் முழக்கம் 21092017 இதழ்

கழக தலைமையகத்தில் கவுரி லங்கேஷ் படத் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக 17.09.2017 மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் பெரியார் யுவராஜ் தலைமையில் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் படத்திறப்பு உணர்ச்சி மயமாக நடந்தது. எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வை இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைத்தார்.  கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கவுரி லங்கேஷ் படத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்வில் ஜெயநேசன் (அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு), மனிதி இயக்கத்தின் செல்வி,  இளந்தமிழகத்தின் செந்தில், மே17 இயக்கத்தின் பிரவீன்  சிறப்புரையாற்றினார்கள். மா.தேன்ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

திருமணங்களே தேவையில்லை: மூத்த எழுத்தாளர் ‘கி.ரா.’ பேச்சு

திருமணங்களே தேவையில்லை: மூத்த எழுத்தாளர் ‘கி.ரா.’ பேச்சு

‘திருமணங்களையே கிரிமினல் குற்றமாக்கிட வேண்டும்’ என்று பெரியார் கூறியபோது சமூகமே அதிர்ச்சி அடைந்தது. இப்போது விடுதலையை கோரி நிற்கும் பெண்கள், திருமணஅமைப்புகளிலிருந்து விலகி நிற்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் கரிசல் மண் எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன், தனது 95ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வில் புதுவையில் பேசியபோது, “சொந்த ஜாதி திருமணமே ஜாதியை காப்பாற்றுகிறது; திருமணம் செய்வதையே ஒழிப்பதுதான் இதற்கு தீர்வு” என்று பேசியிருக்கிறார். கரிசல் இலக்கியத்தின் தந்தையும் ‘கி.ரா.’ என்று அழைக்கப்படுபவருமான கி. ராஜ நாராயணனின் 95-வது பிறந்த நாளையொட்டி, ‘எழுத்தாளர் கி.ரா. 95 விழா’ புதுச்சேரியில் சனிக்கிழமையன்று துவங்கியது. 2017ஆம் ஆண்டுக்கான கி. ராஜநாராயணனின் ‘கரிசல் இலக்கிய விருதுகளும்’ வழங்கப் பட்டன. இதில், ‘தளம்’ இலக்கியக் காலாண்டிதழுக்கு, சிறந்த சிற்றிதழுக்கான விருதையும், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு, சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் வழங்கிய கி. ராஜநாராயணன், ‘வாகை முற்றம்’ என்ற தலைப்பில் வாசகர் களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: “உயர்...

‘பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்’ : அரசுஅறிவிப்பு!

‘பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்’ : அரசுஅறிவிப்பு!

பெங்களூருவிலுள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு, தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா, தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கலந்து கொண்டு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டதலைவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினார். பின்னர் விழாவில் அவர் பேசினார். அப்போது ராமலிங்க ரெட்டி கூறியதாவது:“சமூக நீதிக்காகவும், திராவிடக் கலாச்சாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார்; அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கான பலனை தற்போது நாம் அனுபவித்து வருகிறோம்; அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்; அவரின் கொள்கைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும்; அவரின் போராட்டங்களால்...

அக் 7 சென்னையில் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முழக்கம்!

தோழர்களே தலைநகர் நோக்கி திரளுவீர்! ஜாதி ஒழிப்புக்களம் – தமிழ்நாட்டில் சூடேறி வருகிறது. இளம் பெண் தோழர்கள் பெண்ணுரிமையோடு ஜாதி ஒழிப்பையும் இணைத்து களமிறங்கியிருப்பது மகத்தான திருப்பம். தமிழ்நாட்டின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மதவெறி எதிர்ப்பு, சமூகநீதிப் போராட்டக் களம், இளைஞர்களிடம் வந்து சேர்ந்து விட்டது.அவர்களால்தான் அதை சாதித்துக் காட்டவும் முடியும். தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு எதிர்நீச்சல் போட்டு களம் இறங்கியிருக்கும் பெண் போராளிகளை ஒரே மேடையில் பங்கேற்கவிருக்கும் நிகழ்வினை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது – இது காலத்தின் தேவை! அக். 7ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நிகழவிருக்கும் இந்த சங்கமம், ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைக்கான போராட்டக் களத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு திருப்பு முனையான நிகழ்வு. ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியர் ‘மஞ்சள்’ நாடகத்துக்கு கூர்மையான உரையாடல்களைத் தீட்டியவருமான – – போராளி ஜெயராணி ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை உருவாக்கி, மலம்...

என்னை விடுதலைப் பெண்ணாக்கியவர் -பெரியார்

அனைவருக்கும் அன்பு வணக்கம். நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண் டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடைய வராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன்....

மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார். பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார்...

‘முரசொலி’ பவளவிழா கண்காட்சியில் கழக இதழ்கள்

‘முரசொலி’ பவளவிழா கண்காட்சியில் கழக இதழ்கள்

‘முரசொலி’ நாளேட்டின் பவள விழா கண்காட்சி, சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைக்கப்பட் டுள்ளது. அதில் திராவிடர் இயக்க இதழ்கள் பட்டியலில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் இடம் பெற்றுள்ளன. பெரியார் முழக்கம் 14092017 இதழ்

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் சண்முகப் பிரியன் மகன் தமிழ்ப் பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “முகமது தாஜ்“, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மூத்த பெரியார் தொண்டர் அய்யா இனியன் பத்மநாபன்,  இந்தியப் பிரியன் ஆகியோர் வாழ்த்துரை...

‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்

‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்

மருத்துவ சேவையைக் குலைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடும் சர்வதேச அரசியல் ‘நீட்’ தேர்வு முறையில் பின்னணியாக செயல்படுகிறது என்கிறார் கல்வியாளர் அனில் சடகோபால். அவரது பேட்டி: இது ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம் கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர் காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படு கிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்தி வழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப் படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா… சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச்செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில் ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா?...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை புத்தரும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள்

பார்க்காத கடவுளையே பார்ப்பனர்கள் எப்படி கடவுளை அடைய வழி காட்ட முடியும்  என கேட்டார்  புத்தர் புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (சென்ற இதழ் தொடர்ச்சி) புத்தரின் சாக்கிய குலத்துக்கும் மற்றொரு குலமான கோலியர் என்ற குலத்துக்கும் இடையே எல்லையாக ரோகினி என்ற ஆறு இருந்தது. இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தும் முதல் உரிமை யாருக்கு என்பதில் இரண்டு இனக் குழுக்களுக்கிடையே சண்டை. சாக்கியர்கள் ஒன்று கூடி கோலியர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு எடுத்த போது – சித்தார்த்த புத்தர் போர் கூடாது என்று தனது சாக்கிய குலம் எடுத்த முடிவையே எதிர்க்கிறார். சாக்கியர் சங்கம் புத்தரை புறந்தள்ளுகிறது. புத்தரும் கபிலவஸ்துவை விட்டு வெளியேறினார். ஆனால், இந்த மேலோட்டமான நிகழ்வுகளையும் கடந்து நிற்கிறது புத்தரின் துறவு. இனக்...

அசுவிதா – நாகராசு மண விழா !

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அசுவிதா – நாகராசு ஜாதி மறுப்பு இணையர் வாழ்க்கை ஒப்பந்த விழா 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் ஸ்ரீஸ்டி மஹால், (சிக்கண்ணா கல்லூரி பின்புறம்) கல்லூரி சாலையில் நடைபெற்றது. நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி,  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு வாழ்த்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 14092017 இதழ்

‘நிமிர்வு’ இதழ் குறித்து திருப்பூரில் வாசகர் வட்டம் ஆய்வு

திருப்பூர் மாநகர செயலாளர் சி. மாதவன் சகோதரர் சி.நாகராசு – ம. அசுவிதா, வாழ்க்கை துணை ஒப்பந்த விழா முடிந்தவுடன் நண்பகல் 3:00 மணிக்கு நிமிர்வோம் வாசகர் வட்டம் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் சிவகாமி தலைமையில் 2ஆவது கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் 15 தோழர்கள் பங்கு பெற்றார்கள். வாசகர் வட்ட நோக்கத்தினை எடுத்துக் கூறி இனி கழக நிகழ்வுகளில் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தோழர்கள் 1 மணிநேரம் வாசிப்பு வட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. நிகழ்வில் ஆகஸ்ட் மாத நிமிர்வோம் இதழில் வெளிவந்த “வந்தே மாதரம்” பாடல் குறித்த தலையங்கம் படித்துக் காண்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதழின் ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆசிரியர் பற்றிய தகவலோடு அனைவரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.  16.9.2017 அன்று மாலை பொள்ளாச்சியில் வாசகர் வட்ட சந்திப்பு நடத்துவதென்றும் தோழர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் நூல்களைப் பற்றி முன்கூட்டியே பதிவிட்டு...

ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல்

ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநில வெளியீட்டு செய லாளர் இளங்கோவன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் செப். 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது; கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார்பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூ. 750/-ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபாலிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 14092017 இதழ்

விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை கண்டித்தும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப் பட்டு கிராமத்தில் 04.09.2017  அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சி.சாமிதுரை  தலைமை வகித்தார். க. மதியழகன்  தொடக்க உரையாற்றினார்.  வேதகாலக் கல்வி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி கல்வி, நீதிக்கட்சி காலக் கல்வி, இராசாசியின் குலக் கல்வி, காமராசர் ஆட்சி கல்வி, மோடியின் இந்தி திணிப்பு – நீட் தேர்வு பற்றி உரையாற்றினார். அழகு முருகன், இராஜேஷ், இளையரசன், தீனா, பெரியார் வெங்கட் ஆகியோர்  நீட் தேர்வினால் ஏழை எளிய பிள்ளைகள் பாதிக் கப்படுவதைப் பேசினார்கள். இறுதியாக க. இராமர்  கண்டன உரையாற்றினார். உரையில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, தமிழக  கல்வியின் சிறப்பு மருத்துவ சிறப்பு, வெளி மாநிலத்தில் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் படுகின்ற துன்பங்கள் பற்றி விரிவாகப் பேசினார். கண்டன...

தலையங்கம் காவிரி புஷ்கரமாம்!

வேதகால பார்ப்பனச் சடங்குகள் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு நிறுவனங்களும் துணை போய் மதச்சார்பின்மை கொள்கையை குழித் தோண்டி புதைக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகள். காவிரியில் நீர் இல்லை; காவிரி நீரை கருநாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் முறையாக தர மறுப்பதால் விவசாயம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகி யிருக்கிறது.  டெல்லியில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யப் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கும் நதி; விவசாயத்துக்கு ஆதாரமானது என்பதால் தமிழர்கள் காவிரியைப் போற்றுகிறார்கள். தமிழ் இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. ஆனால் பார்ப்பனர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. காவிரி வற்றினாலும் விவசாயிகள் மாண்டாலும் ‘காவிரி புஷ்கரம்’ நடத்தவே துடிக்கிறார்கள். அது என்ன ‘காவிரி புஷ்கரம்’? 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறதாம் ‘காவிரி புஷ்கரம்’. குருபகவான் ஒவ்வொரு ஆண்டும்...

மதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’

மதவெறி கோழைகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) வீரமரணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் – வீரவணக்கம் செலுத்துகிறது. அவரது எதிர்நீச்சல் வரலாறு குறித்த ஒரு தொகுப்பு. “கோழையே உன்னிடம் தோட்டாக்கள்; என்னிடம் அழியா வார்த்தைகள்” பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான 55 வயது கவுரி லங்கேஷ் – மதவெறியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் செப்டம்பர் 5 – இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில். காரிலிருந்து இல்லம் திரும்பியபோது காரை நிறுத்துவதற்காக முன் கதவை திறக்க முயற்சித்தபோது மோட்டார் பைக்கில் வந்த 3 பேரில் இருவர் அவரது மார்பு, வயிறு, கழுத்தில் நேருக்கு நேராக சுட்டு வீழ்த்தி பிணமாக்கி விட்டனர். கவுரியின் தந்தை லங்கேஷ் அவர்களும் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், மதவாத சக்தி களுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர். அவர் நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிகா’ என்ற கன்னட இதழை கவுரி தொடர்ந்து நடத்தினார். ‘லங்கேஷ் பத்திரிகா’, ‘டேபிளாhய்டு’...

விநாயகர் ஊர்வலத்தைத் எதிர்த்து பெரியார் கைத்தடி ஆர்ப்பாட்டம்: கைது!

“மதத்தை அரசியலாக்காதே; சுற்றுச் சூழலை சீரழிக்காதே; மக்கள் உரிமைகளை மறுக்கும் பா.ஜ.க.வின் பரிவாரங்கள் நடத்தும் விநாயகன் சிலை ஊர்வலங்களை புறக்கணிப்பீர்” என்ற முழக்கங்களோடு பெரியார் கைத்தடிகளை ஏந்தி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி ‘அய்ஸ் அவுஸ்’ பகுதியில் ஆக.31, பிற்பகல் 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலம் நடந்த அதே நாளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு 9 மணி வரை திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட்டனர். 110 தோழர்கள் கைதானார்கள்.  விழுப்புரம் மாவட்ட கழகத் தோழர்கள், புதுவையிலிருந்து பெரியார் சிந்தனை முன்னணியைச் சார்ந்த தீனா உள்ளிட்ட தோழர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் பார்த்திபன், ஜாதி ஒழிப்பு முன்னணி ஜெயநேசன், தமிழக மக்கள் முன்னணி அரங்க. குணசேகரன்  காஞ்சி மாவட்டத்திலிருந்து ரவி பாரதி, கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி, வேழ...

கைதான தோழர்களிடம் விடுதலை இராசேந்திரன் உரை புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி

குழந்தைகளுக்கு சித்தார்த்தன், புத்தன், கவுதமன், அசோகன், கவுதமி இப்படிப்பட்ட பெயர்களைத் தான் பெரியார் ஏராளமாக சூட்டியிருக்கிறார். புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார். ஆக. 31 மாலை 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலங்களை நிறுத்தக் கோரி பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் கழகத்தினர் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது தோழர் களிடையே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். அவரது உரை: விநாயகன் சதுர்த்தி பக்தர்கள் கொண்டாடும் மதப் பண்டிகை. அது நடந்து முடிந்து விட்டது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர் என்று பரப்புரை செய்கிறோம். கொண்டாடுவோரை எதிர்த்துப் போராடுவது இல்லை. இன்று நடப்பது மதத்தை அரசியலாக்கும் ஊர்வலம். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் அரசியல் ஊர்வலம், மதச் சார்பின்மைக்கு எதிராக நாட்டை இந்துக்களின் நாடு...

எது மெரிட்?

எது மெரிட்?

வீட்டில் தனி அறை இல்லை! குளிர்சாதன வசதி, மின் விசிறி இல்லை! கைபேசி இல்லை! பத்து நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு மகளுடன் கூடவே இருந்து சொல்லித் தரும் தகுதியும் வசதியும் பெற்ற அம்மா அப்பா இல்லை! கண்விழித்துப் படிக்கும்போது பக்கத்தில் பிளாஸ்க் காபி இல்லை! ‘அந்தக் காலத்துல நாங்க கவர்ன்மெண்டு சர்வீஸ்ல இருக்கும் போது யூ நோ’ என்று சொல்லும் தாத்தா இல்லை! அமெரிக்காவில் ஐடியில் டாலர் சம்பளம் வாங்கி ஆண்டுக்கொரு முறை வீட்டுக்கு வரும் ரே-பான் கண்ணாடி மாமா இல்லை! ஒரு மணி நேரத்துக்கு 500, 1,000 வாங்கும் டியூஷன் டீச்சர் இல்லை! வார இறுதி சினிமா, ஹோட்டல் இல்லை! விடுமுறைக்குச் செல்ல ஊர் இல்லை! இருந்தாலும் 1176! இதுதாண்டா மெரிட்டு! – விஜயசங்கர் ராமச்சந்திரன், முகநூலிலிருந்து பெரியார் முழக்கம் 07092017 இதழ்

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி வழி பொறியியல் படிப்பு ரத்து!

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி வழி பொறியியல் படிப்பு ரத்து!

வடமாநிலங்கள் முழுவதுமே இந்தி பேசினால் பிழைத்துக்கொள்ளலாம் என நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் நிலையில்,  இந்தி மாநிலம் எனப்படும் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரில், இந்தியின் மூலம் பொறியியல் பட்டம் படிக்க ஒருவருமே முன்வரவில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ‘அடல்பிகாரி வாஜ்பாயி இந்தி பல்கலைக்கழகம்’ செயல்படுகிறது. இங்கு கடந்த ஆண்டு முதல் இந்தி மூலம் பொறியியல் பட்டப்படிப்புகள் கற்பித்தல் தொடங்கப்பட்டது. மூன்று பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 180 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமே நான்கு பேர் மட்டும்தான். முதல் ஆண்டில்தான் அப்படி என்றால், இந்த ஆண்டில் அதுவும் இல்லை! பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்த 11 பேர் மட்டும், நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில் ஒருவர்கூட சேரவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது, பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் தற்போதைக்கு நான்கு தற்காலிகப் பேராசிரியர்கள்...

மாநிலத்திற்கென தனிக் கொடி: தமிழகமே முன்னோடி

மாநிலத்திற்கென தனிக் கொடி: தமிழகமே முன்னோடி

தங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கர்நாடகத்திலிருந்து குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு அமைப்பு களிடமிருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுதொடர்பாக ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. இதுபோன்ற முயற்சி களுக்கும் தமிழகம் முன்னோடி என்று சொல்லவேண்டும். அரசியலமைப்பு அவையில் அன்றைக்கு உறுப்பினராக இருந்த ஜெயபால் சிங் முண்டா தேசியக் கொடியோடு பழங்குடிகளுக்குத் தனியாகக் கொடி வழங்க வேண்டும் என்று கோரினார். அவர் முன்வைத்த கோரிக்கை விவாத அளவிலேயே முடிவடைந்துவிட்டது. 1947 ஜூன் 22இல் பிரதமர் நேரு இந்திய தேசியக் கொடியை அரசியலமைப்பு அவையில் முதன்முதலாக அர்ப்பணித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தபோது காஷ்மீருக்கு அரசியல் சாசனப் பிரிவு 370இன் படி சிறப்பு அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. அத்தோடு, விவசாயிகளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் கலப்பை படத்தோடு கூடிய தனிக் கொடியும் காஷ்மீருக்கு அனுமதிக்கப்பட்டது. திராவிட நாடு கேட்டுப் போராடிய திமுக, பிற்காலத்தில்...

தலையங்கம் ‘அனிதாவின் 1176’

தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176. ‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது. மருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’....

அனிதாவுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை

குழுமூரில் அனிதாவின் உடலுக்கு கழக சார்பில் கழகத்  தலைவர் கொளத்தூர்  மணி, செப்டம்பர் 2ஆம் தேதி காலை மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 07092017 இதழ்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை

அனிதாவின் மரணம் தமிழகத்தை கொதிப்படையச்செய்துள்ளது. 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தடையால் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாத நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி சமூக நீதிக்காக உயிர்ப்பலி தந்தார். மத்திய மாநில அரசுகளின் படுகொலையாகியிருக்கிறது அவரது மரணம். தமிழகம் முழுதும் போராட்டக் களமாகி வருகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து உயிர்பலி தந்தருவமான அனிதா அவர்களுக்கு நீதிக் கேட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 2.09.2017 மாலை 3 மணி யளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய ஆட்சிகளுக்கு எதிராக வும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக...

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

சீரிய பெரியாரியலாளரும் எழுத்தாளருமான பாமரன் – யாழ்மொழி ஆகியோரின் மகன் சேகுவேரா-கனிமொழி ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா, ‘பீடை மாதம்’ என்று மூடநம்பிக்கையாளர்களால் கருதப்படும் ஆடி 28ஆம் தேதி (ஆகஸ்ட் 13) மாலை கோவை பி.எம்.என். திருமண மண்டபத்தில் ‘நண்பர்கள் கூடும் திருவிழா’வாக சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசை யுடன் நிகழ்வுகள் தொடங்கின. கலைஞர்களுக்கு கவிஞர் அறிவுமதி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினர். ஈழப் போராளி பாலகுமார் துணைவியார், பாமரனின் வயது முதிர்ந்த தாயார் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணமக்களுக்கு சுயமரியாதை திருமணத்துக்குரிய உறுதி மொழிகளைக் கூற, மணமக்கள் உறுதியேற்று மாலை மாற்றிக் கொண்டனர். பெரியாரியலாளரும் ஆய்வாளருமான தொ. பரமசிவம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கலை, இலக்கிய, திரை உலக நண்பர்கள்,...

காவல்துறைக்கு என்ன தண்டனை?

மதுரை மாநகர காவல்துறை மகேஷ்குமார் அகர்வால், ‘‘சாதி மறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரைப் பெறுவதற்கு ஆணையர் அலுவலக வளாகத்தில் குற்றத்தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி வரும் புகாரை விசாரிக்க தனி ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கவும் தகவல்களைப் பெறவும் 0452 2346302 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’’ என்று அறிவித்திருக்கிறார்.  இந்தத் தனிப்பிரிவு குறித்து ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடி வரும் கவுசல்யாவிடம் கேட்டபோது: “இந்தப் புதுபிரிவினால் ஆணவக் கொலை குறைந்துவிடுமா என்ன? நாங்கள் கேட்பது பாதுகாப்பு. அவர்களால் அந்தப் பாதுகாப்பை கொடுத்துவிட முடியுமா? பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடையும் பெண்ணிடம் பெற்றோருடன் சென்றுவிடும்படி கவுன்சலிங் செய்யப்படுகிறது அல்லது அவளிடம் கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து நல்லவர்களாக நடிக்கும் போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோர் வந்ததும் அவர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறார்கள். சாதிமறுப்புத் திருமணம் செய்றவங்களைக் காட்டிக்கொடுக்கிற போலீஸுக்கு என்ன தண்டனை? என்னைப் பொறுத்தவரை, இந்தத்...

பூணூல் ரோபோக்கள்

பூணூல் ரோபோக்கள்

ஜப்பானில் டோக்கியோ நகரில் ‘இடுகாடு – இடுகாட்டில் நடக்கும் இறுதிச் சடங்குகள்’ குறித்து சர்வதேச கண்காட்சி நடந்திருக்கிறது. அப்படி ஒரு கண் காட்சி ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. இந்த முறை நடந்தது டோக்கியோ நகரில். கண்காட்சியில் பங்கேற்கும் பார்வையாளர் களுக்கு இறுதிச் சடங்கு குறித்த தொழில்முறை பயிற்சிகள் தரப்படுகிறது. இதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது புத்தமதச் சடங்கு முறையில் ஜப்பானில் நடக்கும் இறந்தவர்களுக்கான சடங்குகளை ஒரு ‘ரோபோ’ எந்திரம் செய்து காட்டியதுதான். ஜப்பானில் இளைஞர்களைவிட முதியோர் எண்ணிக்கை அதிகம். எனவே இறுதிச் சடங்குகள் நடத்த “அதில் பயிற்சிப் பெற்றவர்கள் எளிதில் கிடைப்பதில்லை என்பதால் அந்நாட்டின் ‘சாப்ட் பேங்க்’ எனும் நிறுவனம், ‘பெப்பர் ரோபோட்’ என்ற இந்த மனித எந்திரத்தை உருவாக்கியிருக்கிறதாம். நமது நாட்டில் கோயிலில் ‘அர்ச்சனை’, ‘கும்பாபிஷேகம்’, வீட்டில் ‘விவாக சுபமுகூர்த்தம்’, ‘கிரகப் பிரவேசங்களை’ நடத்த பிறப்பால் ‘பிராமணன்’ என்ற பிறப்புச் சான்றிதழ் கொண்ட ‘பூணூல் ரோபோக்கள்’ மட்டுமே செய்ய...

தலையங்கம் சமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது

தலையங்கம் சமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது

தமிழ்நாட்டின் தனித்துவமான சமூகநீதி தத்துவத்துக்கு சாவுமணி அடித்துவிட்டது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. ஓராண்டுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தருவதாகக் கூறி முன் வந்து, தமிழக அரசிடம் அவசரச் சட்டத்தை தயாரிக்கச் சொல்லி விட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விதி விலக்கு தர முடியாது என்று கூறும் துணிச்சல்  மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு எப்படி வந்தது? தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகள் என்று கருதி விட்டார்கள். மாநில அரசு பாடத் திட்டத்தில் படித்த 85 சதவீத மாணவர்களில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் 2224 பேர். 15 சதவீதம் பேர் மட்டுமே படித்த சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 1310 பேர். நீட் தேர்வு நடத்தாமல் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்ற சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 30 மட்டும்தான். சுமார் 45 சதவீதம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த அநீதியை முறைப்படுத்துவதற்கு மாநில அரசு பிறப்பித்த 85...

ஜாதி ஒழிப்பாளர்கள் ஓர் ஆயுதமாக்கிப் போராட என்னை, நான் ஒப்படைத்துவிட்டேன் உடுமலை கவுசல்யா போர் முழக்கம்

ஜாதிய ஆதிக்கக் குடும்பத்தில் வளர்த் தெடுக்கப்பட்ட நான், அதிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புப் போராளியாகி விட்டேன் என்றார், ஜாதி வெறிக்கு தன் துணைவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா. ஆக.20ஆம் தேதி சிதம்பரத்தில்; விடுதலை கலை இலக்கியப்பேரவை நடத்திய ‘திருமா-55’ நிகழ்வில் பங்கேற்று அவர் நிகழ்த்திய உரை. நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்த மில்லாதது; சுமக்கமுடியாத கனம் பொருந்தியது. திருமாவளவன் என்கிற ஒரு அரசியல் ஆளுமை குறித்து சிறியவளான நான் பேசுவதற்கு இனிமேல் தான் என்னை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், நான் இந்த நிகழ்விற்கு வந்தமைக்குக் காரணம் நான் உங்களில் ஒருத்தி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தி என்பதைப் பறைசாற்றுவதற்குத்தான். என் குடும்பம், என் பெற்றோர் முத்துராமலிங்கத் தேவரின் வம்சம் எனச் சொல்லிக் கொள்பவர்கள். அவர் குறித்து பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அந்த உருவம் சாதிவெறியைத் தூக்கிப் பிடிக்கிறவர்களின்...

ஈரோடு, திருப்பூரில் இணைய தள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒருங்கிணைப்பில் ஆக.20 அன்று சூரம்பட்டி வலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. இரத்தினசாமி அறிமுக உரை நிகழ்த்தினார். முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தற்போதைய சூழலில் பெரியாரியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். முகநூலில் கழகத் தோழர்கள் எப்படி தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார். கழக இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருச்செங்கோடு பூபதி மீம்ஸ் பதிவிடுதல் குறித்து விளக்கினார். 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது....

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

தஞ்சை மாவட்டத்தில் பல கிராமங்களில் பெரியார் இயக்கம் உருவாக்கிய பண்பாட்டுப் புரட்சி – வாழ்க்கை நெறியாகியிருப்பதைக் காண முடிகிறது. புரோகிதர் இல்லாத சுயமரியாதை திருமணங்களை மாலை நேரத்தில் நடத்துவது பல கிராமங் களில் வழக்கமாக மாறியிருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்த, வாழும் பெரியார் தொண்டர்கள் இதை வாழ்க்கை நடைமுறையாக மாற்றி யிருக்கிறார்கள். இது குறித்து ‘தமிழ் இந்து’ நாளேடு (ஜூலை 19) வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை. ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் நடக்கும் 99 சதவிகித திருமணங்களுக்கு மாலை 6 மணி முதல் 7.30-க்குள் தான் நேரம் குறிக்கிறார்கள். நாம் போயிருந்த போதும் ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் தனது அண்ணன் மகளின் (மாலை நேர) திருமணத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் பஞ்சநதிக்குளம் கிழக்கைச் சேர்ந்த சி.ஆர்.வெங்கட். “காலையில் திருமணம் செய்யுறது தானே உலக வழக்கம், நீங்க மட்டும் ஏன் உல்டாவா மாலையில் திருமணம் செய்கிறீர்கள்?” என்று...

விஜயபாரதி – சங்கீதா இணை ஏற்பு நிகழ்வு

விஜயபாரதி – சங்கீதா இணை ஏற்பு நிகழ்வு

20-8-2017 காலை 11-00 மணியளவில் சிவ.விஜய பாரதி – பேரா. சங்கீதா. ஆகியோரின் இணையேற்பு விழா வாழ்த்தரங்கம்  கோவை ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை முழக்கத்தோடு தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யேற்றார். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நலன் பேரியக்கம் தலைவர் இயக்குநர்  மு.களஞ்சியம், நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேரா.புரட்சிமணி, தோழர் ராஜாங்கம், கோவை மாநகரக்  கழகத் தலைவர் நேருதாஸ் , சந்திரசேகரன் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

கடற்கரையில் நடந்த கழகத் தோழர்கள் சந்திப்பு

கடற்கரையில் நடந்த கழகத் தோழர்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட திருவான்மியூர் பகுதி கலந்துரையாடல் கூட்டம் நா.விவேக் (தென் சென்னை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்) தலைமையில் 20.08.2017 மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கழகத்தில் புதிதாக இணைத்துக் கொள்ள முன் வந்த இளைஞர்களுக்கு இயக்கக் கொள்கை, நடைமுறைகள் குறித்து விளக்கிட பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த சந்திப்பை தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.  முதல் முறையாக திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுதி சார்ந்த தோழர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதில் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தோழர்களிடம்  பெரியாரிய கொள்கைகளை எடுத்துரைத்து தோழர்களின் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கமளித்தனர். செயற்பாடுகள், களப்பணிகள் போன்றவைகளை குறித்தும் கலந்துரையாடினார்கள். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

பிறந்த நாள் அன்பளிப்பு

பிறந்த நாள் அன்பளிப்பு

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் இரா. சண்முகசுந்தரம் – பேராசிரியர் ருக்மணி ஆகியோர் மகன் ச. இராமலிங்கம் வால்டர்ஸ் – நி. சியாமணி இணையரின் மகன்கள் கவின் 18.6.2017 அன்று 5ஆவது பிறந்த நாளும், நவின் 6.3.2017 அன்று முதல் பிறந்த நாளும் ஆஸ்திரேலியா சிட்னியில் வைத்து கொண்டாடினர். பேரன்கள் பிறந்த நாள் மகிழ்வாக பேராசிரியர் சண்முக சுந்தரம் – பேரா. ருக்மணி ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.2500/- கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.08.2017 மாலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. கலந்துரையாடல் கூட்டத்தை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார். கூட்டத்தின் தொடக்கமாக கடவுள் மறுப்பு உரையை குகன் கூறினார். இதில், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது சமூகநீதி- சமத்துவ பரப்புரை பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில் பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் வினாயகர் சதுர்த்தி எப்படி இந்துமுன்னணி போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் அவர்களின் சுயலாபத்துக்காக அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் பெயரால் ஒன்றுதிரட்டி மற்ற மதத்தவருக்கு எதிராக மாற்றும் போக்கினை எப்படி முறியடிப்பது. வீட்டில் வணங்க வேண்டிய இந்த வினாயகர் சிலையை எதற்காக தெருவில் கொண்டுவந்து இது எப்படி அரசியல் ஆக்கப்படுகிறது, இதன் உள்நோக்கம்...

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

18.6.2017 அன்று தூத்துக்குடி, டூவிபுரம் 2ஆம் தெருவில் உள்ள முத்து மகாலில் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்தரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் க. மதன், குழந்தைகள் படிப்பிற்கான தொகையினை வருடா வருடம் கொடுத்து வருவது போன்றுஇவ்வாண்டும் கொடுப்பது என்றும், அதற்கான தோழர்களின் பங்களிப்பை விருப்பம் உள்ளவர்கள் மாவட்டத் தலைவரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் சந்தாவை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார். மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள், பொருளாளர் பொறுப்புகளுக்கு பொறுப்பாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 24082017 இதழ்

மேட்டூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் சதுரங்காடி பெரியார் திடலில் 22.7.2017 அன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசர் 115ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பாரூக் நினைவு மேடையில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘மாற்றம்’ நாடகக் குழுவினர் நாடகம், தற்பொழுது பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியது. அதனைத் தொடர்ந்து மழலையர்களின் நடனம் நடைபெற்றது. அவர்களுக்கு மேடையில் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு மேட்டூர் நகர செயலாளர் அ.சுரேசு குமார் தலைமை தாங்க, நங்கவள்ளி அன்பு உரைக்குப் பின் வே மதிமாறன், காமராசரைப் பற்றி சிறப்புரையாற்றினார். காவேரிகிராஸ் பகுதி காளியப்பன் நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது. மேட்டூரின் முக்கியப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கழகக் கொடிகள் நகரமெங்கும் நடப்பட்டிருந்தன. கூட்டத்தில் அதிகளவு மக்கள் உரைக் கேட்டு...

வாஞ்சிநாதன் மனைவிக்கு முத்துராமலிங்க தேவர் அடைக்கலம் தந்தாரா?

பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தீவிர ஆதரவாளரான முத்து ராமலிங்க தேவர், தென் மாவட்டங் களில் தலித் மக்களின் உரிமை களுக்காகப் போராடிய இமானுவேல் சேகர், படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர். ‘தேசியம் – தெய்வீகம்’ என்பதே தனது இரு கண்கள் – என்று கூறி செயல்பட்டவர்.  தென் மாவட்டங்களில் ஜாதியக் கட்டமைப்பும் ஜாதிய உணர்வும் ஆழமாக புரையோடியிருப்பதற்கு முக்கிய பங்காற்றியவர். அவர் வரலாறு குறித்து செவி வழி செய்திகள் ஆதாரங்களின்றி ஏராளமாக பரப்பப் பட்டு வருகின்றன. அண்மையில் ‘தமிழ் இந்து’ நாளேடு (ஆக. 16) இதே போல் ஒரு ‘கற்பனை’யை வரலாறாக பதிவு செய்தது. நெல்லை மாவட்டம் மணி யாச்சியில் பிரிட்டிஷ் கலெக்டராக இருந்த ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டான் வாஞ்சிநாதன் அய்யர். ஆஷ் ‘சனாதன தர்மத்துக்கு’ எதிராக செயல்படுவதால் அவரை சுட்டுக் கொன்றதாக ஒரு...

வினாயகன் கதை அன்றும், இன்றும்! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

சதுர்த்தி விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப் போனால் அது ஏனைய `கடவுள்’களுக்கு மிகவும் வெட்கக் கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புப் பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள்...

ஜெயராணி – திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது

ஜெயராணி – திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது

திராவிடர் கழகத்தில் துடிப்புடன் பணியாற்றியவரும் அந்தக் கழகம் நடத்தும் ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்ட பெரியார் குடும்பத்தைச் சார்ந்த ‘பெரியார் சாக்ரடீஸ்’ விபத்தில் இளம் வயதில் மரணமடைந்தார். அவரது பெயரால் நினைவு விருதுகளை அவரது நெருக்கமான தோழர்கள் அஜயன் பாலா, நாச்சிமுத்து மற்றும் தோழர்கள் வழங்கி வருகின்றனர். இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்டு 6ஆம் தேதி மாலை சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது. ‘மஞ்சள்’ நாடகத்துக்கு சிறப்பாக உரையாடல் எழுதியவரும், ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியருமான ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன. ஜாதி வெறியர்களின் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் காரணமாக தலை மறைவாக இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட் டிருந்த திவ்ய பாரதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. இந்த இரு இளம் தோழியர்களின் ஜாதி ஒழிப்பு செயல்பாடு களையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,...

மருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வில் ஊழல்

மருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வில் ஊழல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியுள்ளது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. சி.எம்.எஸ் நிறுவனம் (மருத்துவ மற்றும் மருத்துவ சேவைக்கான மய்யம்) காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங் களிடமிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினி களுக்கு இணைய இணைப்பு இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டுள்ளது. கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy Admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில்...

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

‘விநாயகர் சதுர்த்தி’ என்பது இந்துக்களின் பண்டிகை. பஞ்சாங்கத்தின்படி அது ஆக.25இல் நம்பிக்கையுள்ளவர்களால் வீடுகளில் கொண்டாடப்படுகிறது. அது மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கான மத உரிமை. அறிவியல் பார்வையில் சிந்திப்போர் இந்த பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை. இது பகுத்தறிவாளர்களுக்கான உரிமை. பிரச்சினை எங்கே துவங்குகிறது? வீட்டுக்குள் பக்தர்கள் கொண்டாடும் பண்டிகையை வீதிகளுக்குக் கொண்டு வந்து மதத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஏனைய மதத்தினரை மத நம்பிக்கை இல்லாதோரை எதிரிகளாக சித்தரித்து கலவரத்தையும் பதட்டங்களையும் உருவாக்கும்போதுதான், ‘மதம்’ அரசியலாக்கப்படுகிறது. ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்று முழங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் ‘ஒற்றுமையை’ உருவாக்க முடியாமல் சிலைகளை அமைப்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறுகளையும் சமூகப் பதட்டத்தையும் உருவாக்கி விடுகிறார்கள். இப்போது சிலைகளை அமைக்கும் ‘இந்து அரசியல்’ அமைப்புகள் எவை? பா.ஜ.க.வின் ஊது குழல்கள். இவர்கள்தான் நமது ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி உரிமையைப் பறிக்கும் நீட்...

விநாயகர்  சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

விநாயகர் சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

14.10.1956 அன்று நாக்பூரில் புத்தமார்க்கம் தழுவிய அம்பேத்கர், மதமாற்றத்துக்குத் திரண்டிருந்த இலட்சக் கணக்கான மக்களிடம் 22 உறுதி மொழிகளைக் கூறி ஏற்கச் செய்தார். விநாயகன்,  இலட்சுமி, இராமன், கிருஷ்ணன் மற்றும் இந்துக் கடவுள்களை வணங்க மாட்டேன் என்பதே அந்த உறுதி! புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எந்த அம்பேத்கரிஸ்டும் ஒருபோதும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டார்கள்; பங்கேற்கவும் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பது அம்பேத்கர் உழைத்த இலட்சியத்துக்கு செய்யும் துரோகம். அம்பேத்கர் – நாக்பூரில் எடுத்த உறுதிமொழிகளை இங்கு வெளியிடுகிறோம்: பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்க மாட்டேன். இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்க மாட்டேன். விநாயகன், லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்க மாட்டேன். கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்ப மாட்டேன். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான...

காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கழகம் மனு விநாயகன் ஊர்வல சட்ட மீறல்களை தடுத்து நிறுத்துக!

மதவாத சக்திகள் விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஊர்வலங்கள் நாட்டில் பதட்டத்தை யும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகின்றன. மத அரசியலை மதங்களுக்கான பண்டிகைபோல மாற்றிக் காட்டி ஊர்வலம் நடத்துவதும்; அடிப்படை மத உரிமை என்றும் இந்து முன்னணியைச் சார்ந்த இராம கோபாலனும் மதவாத அமைப்புகளும் கூறி வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் இந்த ஊர்வலங்களில் நடக்கும் விதி மீறல்களைத் தடுக்கக் கோரி டிராபிக் ராமசாமி என்ற பார்ப்பனரே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பதட்டம் நிறைந்த பகுதிகளில் விநாயகன் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை இதற்கான இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும் என்று வரையறுத்தாலும் அவைகள் மீறப்படுகின்றன. காவல்துறை அனுமதித்த சிலைகளைவிட கூடுதலாக சிலைகள் வைக்கப்படுகின்றன. கடல் நீரை, நீர் நிலைகளை மாசுபடுத்தும் இரசாயனங்களைப் பயன்படுத்தி சிலைகளை செய்யக் கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் மாவட்ட ஆட்சித்...