குளறுபடியான ‘கிரிமிலேயர்’
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அதில் பாதியளவுகூட இதுவரை பூர்த்தி செய்யப்பட வில்லை. இடஒதுக்கீடே முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படை புகுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிப்பதற்கே வடி கட்டப்பட்டு வருகிறார்கள். இந்த ‘கிரிமிலேயர்’கூட முறையாக வகுக்கப்படவில்லை. கிரிமிலேயர் என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு அளவும், பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஒரு அளவும் மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் களுக்கு ஒரு அளவுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுளை நீக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த அய்ந்து ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத் திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சட்ட அமைச்சகம் இதற்கு செவி சாய்க்க மறுக்கிறது. ‘அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கம்’ – தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் இது குறித்து முறையிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கிரிமிலேயர்’...
