எர்ணாகுளம் நாத்திகர் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மத உணர்வாளர்கள் – மதவெறி வன்முறையைக் கண்டித்துக் குரல் எழுப்ப முன்வரவேண்டும்
11-5-2019அன்று எர்ணாகுளத்தில் ‘யுக்திவாத பாடன கேந்திரத்’தின் மாநில மாநாடு 2019, மே மாதம், 11,12 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இது கடவுள் – மதம் – ஜாதியை மறுக்கும் நாத்திக அமைப்பு.
முதல் நாள் நிகழ்ச்சிகள் அமைப்பின் தலைவர் ஜார்ஜ் தலைமையில் தொடங்கின. தொடக்க உரையைப் பேராசிரியர் கே.எஸ். பகவான் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நரேந்திர தபோல்கர் உருவாக்கிய ‘மகாராஷ்டிர அந்தாஷ்ரத்த நிர்மூலன் சமிதி’க்கு, 2018ஆம் ஆண்டின் பகுத்தறிவுத் துறையில் ஆற்றிய சிறந்த பணிகளுக்கான விருது வழங்கப் பட்டது.
பரிசு பெற்ற அமைப்பினை வாழ்த்தியும், தமிழ்நாட்டில் பெரியாரின் பணிகளை விளக்கியும், தோழர் பாரூக்கைக் கொன்றொழித்த இஸ்லாமிய மதவெறிப் போக்கு தமிழகத்தில் உருவாகியுள்ள சூழலை விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழ் தொகுப்புகளை வழங்கினார்.
கேரளா, எர்ணாகுளம் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தேசிய மாநாடு மற்றும் சரவாகம் 11-05-2019 அன்று நடைபெற்றது. அதில் கழகத் தலைவர் கலந்து கொண்டு தனது உரையை மத உணர்வாளர்கள் – மத வெறி வன்முறையைக் கண்டித்துக் குரல் எழுப்ப முன் வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். (உரை பின்னர்)
பெரியார் முழக்கம் 16052019 இதழ்