அமாவாசையில் பிறந்த பிள்ளை
மாடு செத்தால் எடுத்துப் போய்தின்று விடுகிறார்கள். குதிரை செத்தால் சாப்பிடாமல் புதைதது விடுகிறார்கள். இவைகள் சொர்க்கத்தில் இருக்கின்றன; நரகத்தில் இருக்கின்றன என்று எவரும் கருதுவதில்லை. ஆனால் இந்த முட்டாள்தனத்தை மனிதனுக்குத்தான் ஒட்ட வைத்து விட்டார்கள். – பெரியார், ‘விடுதலை’ 22.11.1972 பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சாதகம் பார்க்கிறேன் என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார் என்றால் இது குதிரைச் சாதகம், இது கழுதைச் சாதகம் என்று கூற மாட்டானே! உடனே பொருத்தம் பார்த்து சரியாக இருக்கிறது என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்துக்கு வித்தியாசம் தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூற முடியும் என்று நம் மக்கள் கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லையே! – பெரியார், ‘விடுதலை’ 9.10.1964 அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று சோசியத்தில் நம்பிக்கையுள்ளவன் கருதினாலும் அவன் வீட்டில் ஒரு அமாவாசையில் பிறந்த ஒருவன்...