பிப்ரவரி 27, 28இல் மதுரை, கோபியில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்
மதுரையில் பிப்.27 அன்றும், கோபியில் பிப்.28 அன்றும் திராவிடர் விடுதலைக் கழகம், பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகளை நடத்துகிறது. ஏற்கெனவே ஈரோடு, சென்னை, சேலம், சங்கராபுரத்தில் கழகம் மாநாட்டை நடத்தி முடித்துள்ளது.
27ஆம் தேதி மதுரை ஓபுளா படித்துறையில் மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் பேரவை இரா. செல்வம் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் வழியாக மாநாட்டுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
கோபியில் பிப்.28 மாலை 4 மணியளவில் பெரியார் திடலில் மாநாடு, டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அப்துல் சமது, செந்தலை ந. கவுதமன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
பெரியார் முழக்கம் 25022016 இதழ்