பரப்புரைப் பயணம்: சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக்

கூட்டம் 26.6.16, ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் கமலக் கண்ணன் இல்லத்தில் நடைபெற்றது. எழிலன் தலைமை வகித்தார். கழகப் பொருப்பாளர்கள் இரத்தினசாமி, சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 89 வயதான மூத்த பெரியார் தொண்டர் இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். சித்தோடு பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது. கழகப்பரப்புரைப் பயணத்தை நடத்துவது குறித்தும் கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பு குறித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தோழர்களுக்கு கமலக்கண்ணன் சிற்றுண்டிவழங்கினார்.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...