டாஸ்மாக் முற்றுகை:கழகத் தோழர்கள் கைது

சென்னை மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் (மயிலாப்பூர் பகுதி) மற்றும் அனைத்து இயக்கங்கள் – பொது மக்கள் ஒருங்கிணைந்து 3.7.2016 பிற்பகல் 12.30 மணியளவில் சென்னை மயிலாப்பூர் செயின்மேரீஸ் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை (மதுபான) அகற்றக்கோரி, முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மயிலை பகுதி தலைவர் இராவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை பொருப்பாளர்கள் ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, முனுசாமி, நாகேந்திரன், தென் சென்னை மாவட்ட பொருப்பாளர்கள் வேழவேந்தன், சு. பிரகாசு, ஜான் மண்டேலா, எப்.டி.எல். செந்தில், வேலு, பகுதி பொருப்பாளர்கள் மாரி, மனோகர், சிவா, விழுப்புரம்அய்யனார்,  குமரன், நந்தா உள்பட இப்பகுதியை சார்ந்த முகிலன், சுரேஷ், கமலேஷ், பிரவின், பார்த்தா, பாஸ்கர், $தர், ஏராளமான சுய உதவிக் குழு பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...