முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம்

20.2.2016 அன்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது.

• சென்னையில் குதிரைப் பந்தயம், முதலாளிகளுக்கு கோல்ப் விளையாட பல ஏக்கர் அரசு நிலம்.

• சென்னையில் ஏழை எளிய குடிசை மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் இல்லையா?

• தமிழக அரசே! ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்தாதே!

• வாழ்வாதாரத்தை பறிக்காதே! கல்வி வேலை வாய்ப்பை முடக்காதே!

• குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் வாழ்விடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடு!

• உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருப்பிடத்தை அமைத்து கொடு!

• பார்ப்பன பனியா கும்பலுக்கு வெண்ணை! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுண்ணாம்பா?” – என்று முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப் போராட்டத்தில் ஆர். நல்லகண்ணு (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்) தலைமை வகித்தார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொ. லிங்கம் (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் இயக்கம்), எஸ்.கே. மகேந்திரன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), கு. செல்வ பெருந்தகை (தமிழ்நாடு தலைவர்-எஸ்.சி./எஸ்.டி. காங்கிரஸ்) ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 10032016 இதழ்

12799159_1708168599467033_1777680058421870881_n 12821490_1708168512800375_1186796717428443420_n 12801173_1708168352800391_6544409318101929115_n 12821411_1708168526133707_3252120130869534360_n 12800162_1708168279467065_257662242942710937_n 12795469_1708168236133736_76447269853428010_n 10430476_1708168176133742_1208985125962705555_n

You may also like...