மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப. மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால். பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனி°ட் மா.லெ. மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எஸ்.டி.பி.அய். மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார்.
அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறப்பட்டது. வழக்கறிஞர்கள் கான்சியஸ் இளங்கோ, துரை அருண் வாதாடினர்.

பெரியார் முழக்கம் 03032016 இதழ்

You may also like...