கல்வி வள்ளல் காமராசர் 114 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிருட்டிணகிரி 24072016

24-7-2016 அன்று மாலை 6-30 மணியளவில், கிருட்டிணகிரி, ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த தோழர் பழனி நினைவுமேடையில், கிருட்டிணகிரி நுகர்வோர் சேவை சங்கத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசரின் 114ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நுகர்வோர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளருமாகிய இராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். நுகர்வோர் சேவை சங்கத்தின் தலைவர் தட்டக்கல் கோவிந்தசாமி, செய்தியாளர் கிருஷ்ணமூர்த்திராவ், சக்தி மனோகரன் ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் காமராசரின் கல்வி சேவைகளை, தனது முதல் அமைச்சரவையை பார்ப்பனர் பங்கேற்காத அமைச்சரவையாய் அமைத்த பாங்கினை, அறநிலைய பாதுகாப்பு அமைச்சராகவும்ம், உள்துறை அமைச்சராகவும் தாழ்த்தப்பட்டோரை நியமித்த சமூகநீதி சிந்தனையையும், இந்த்துத்துவ மதவாத வன்முறையாளர்கள் தனது வீட்டுக்குத் தீ வைத்து சூறையாடியபோதும் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றுவதை அனுமதிக்காத துணிச்சலையும் விரிவாக எடுத்துரைத்தார். வழக்குரைஞர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்புரையாற்றார். காமராசர் மக்கள் இயக்கத்தின் ஜெயசூரியா நன்றியுரை நிகழ்த்தினார்.

IMG_5319 IMG_5325

IMG_5330 IMG_5333 IMG_5334

You may also like...